யோபு 35

Job 35
அத்தியாயம் 35

பின்னும் எலிகூ மறுமொழியாக:

“என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று மத் 12:36-37யோபு 10:7யோபு 16:17யோபு 19:6-7யோபு 27:2-6யோபு 34:5யோபு 40:8யோபு 9:17

நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ?

நான் பாவியாக இல்லாததினால் யோபு 34:9மல்கி 3:14யோபு 10:15யோபு 21:15யோபு 31:2யோபு 9:21-22யோபு 9:30-31சங் 73:13

எனக்கு நன்மை என்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.

உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன். யோபு 34:8நீதி 13:20

நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, யோபு 22:12ஏசா 55:9ஏசா 40:22-23நாகூ 1:31 இராஜா 8:27ஆதி 15:5யோபு 25:5-6யோபு 36:26

உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.

நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? எரே 7:19நீதி 8:36நீதி 9:12

உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு?

நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? யோபு 22:2-3சங் 16:2லூக் 17:10நீதி 9:12ரோம 11:351 நாளாக 29:14

அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?

உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும், அப் 27:24பிரச 9:18எசேக் 22:30ஆதி 12:2ஆதி 18:24-33ஆதி 19:29எபி 11:7யோபு 42:8

உம்முடைய நீதியினால் மனுமக்களுக்கு லாபமும் உண்டாகும்.

அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, யாத் 2:23யோபு 34:28யாத் 3:7யாத் 3:9யோபு 12:19யோபு 24:12யோபு 40:9லூக் 18:3-7

வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.

பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும், சங் 42:8அப் 16:25சங் 149:5சங் 77:6ஏசா 51:131 பேது 4:19பிரச 12:1ஏசா 54:5

ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி,

என்னை உண்டாக்கினவரும், சங் 94:12யோபு 32:8யோபு 36:22ஆதி 1:26ஆதி 2:7

இரவிலும் பாடல்பாட அருள்செய்கிறவருமாகிய என்னை உருவாக்கின கர்த்தராகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.

அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்; யோவா 9:31நீதி 1:28சங் 123:3-4ஏசா 14:14-17சங் 18:41சங் 73:6-8

அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை.

தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், நீதி 15:29ஏசா 1:15யாக் 4:3எரே 11:11நீதி 15:8ஆமோ 5:22பிரச 5:1-3ஓசி 7:14

சர்வவல்லமையுள்ள தேவன் அதைக் கவனிக்கமாட்டார்.

அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; யோபு 9:11ஏசா 30:18ஏசா 50:10ஏசா 54:17யோபு 19:7யோபு 23:3யோபு 23:8-10யோபு 9:19

ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது;

ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.

இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது; சங் 89:32எபி 12:11-12ஓசி 11:8-9யோபு 13:15யோபு 30:15-31யோபு 4:5யோபு 9:14லூக் 1:20

அவர் இன்னும் ஒன்றையும் குறையில்லாத முறையில் தண்டிக்கவில்லை.

ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, யோபு 38:2யோபு 33:8-12யோபு 34:35-37யோபு 3:1யோபு 33:2

அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.