யோபுவின் வார்த்தைகள்
யோபு மறுமொழியாக:
“இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது; யோபு 10:1யோபு 7:11சங் 32:4யோபு 11:6யோபு 6:2-3புலம் 3:19-20சங் 77:2-9
என் தவிப்பைவிட என் வாதை கடினமானது.
நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; யோபு 16:21எபி 4:6எரே 14:7யோபு 13:3யோபு 31:35-372 கொரி 5:19-20ஏசா 26:8ஏசா 55:6-7
அப்பொழுது நான் அவர் இருக்கைக்கு முன்பாக வந்து சேர்ந்து,
என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து, யோபு 13:18தானி 9:18-19யாத் 32:12-13ஆதி 18:25-32ஆதி 32:12ஏசா 43:26யோபு 37:19யோசு 7:8-9
காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, 1 கொரி 4:3-4யோபு 10:2யோபு 13:22-23யோபு 42:2-6
அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.
அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ? 2 கொரி 12:9-10யோபு 13:21யோபு 9:33-34எசேக் 20:33எசேக் 20:35ஏசா 27:4ஏசா 27:8யோபு 9:19
அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.
அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்; யோபு 13:3ஏசா 1:18ரோம 8:1எரே 12:1எரே 3:5யோபு 9:15ரோம 3:19-22ரோம 8:33-34
அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் விலக்கிக் காப்பாற்றிக்கொள்வேன்.
இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; யோபு 9:11சங் 10:11 தீமோ 6:16யோபு 35:14ஏசா 45:15சங் 13:1-3
பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை.
இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை; ஏசா 8:17சங் 89:46
வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார்.
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; யாக் 1:121 பேது 1:7யாக் 1:2-4சங் 139:1-3நீதி 17:3சங் 66:10சகரி 13:9சங் 17:3
அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; சங் 44:182 பேது 2:20-22சங் 17:5யோபு 17:9சங் 125:5ரோம 2:72 கொரி 1:12அப் 20:18-19
அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன்.
அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; எரே 15:16சங் 119:11சங் 119:103யோவா 4:34சங் 19:9-10யோபு 22:22யோவா 4:32யோவா 8:31
அவருடைய வாயின் வார்த்தைகளை
எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன்.
அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; சங் 115:3நீதி 19:21தானி 4:35ஏசா 46:10பிரச 3:14யோபு 12:14எண் 23:19-20சங் 135:6
அவரைத் திருப்பத்தக்கவர் யார்?
அவருடைய விருப்பத்தின்படியெல்லாம் செய்வார்.
எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; 1 தெச 3:31 தெச 5:9ஏசா 40:27-28சங் 97:2ரோம 11:331 பேது 2:8யோபு 7:3மீகா 6:9
இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; சங் 119:120யோபு 31:23சங் 77:3ஆப 3:16யோபு 10:15யோபு 23:3
நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்; சங் 22:14யோபு 27:2உபா 20:3ஏசா 6:5சங் 88:16ஏசா 57:16யோவே 1:15ரூத் 1:20
சர்வவல்லமையுள்ள தேவன் என்னைக் கலங்கச் செய்தார்.
இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும், யோபு 19:8ஏசா 57:12இராஜா 22:20யோபு 15:22யோபு 18:18யோபு 18:6யோபு 22:11யோபு 6:9
இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.