யோபு 11

Job 11
அத்தியாயம் 11

சோப்பாரின் வார்த்தைகள்

அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் மறுமொழியாக: யோபு 2:11யோபு 20:1

“ஏராளமான வார்த்தைகளுக்கு பதில் சொல்லவேண்டாமோ? யாக் 1:19யோபு 18:2நீதி 10:19அப் 17:18யோபு 16:3யோபு 8:2சங் 140:11

வாயடிக்கிறவன் நீதிமானாக விளங்குவானோ?

உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனிதர் மவுனமாயிருப்பார்களோ? யோபு 17:22 தெச 3:14எரே 15:17யோபு 12:4யோபு 13:4யோபு 13:9யோபு 15:2-3யோபு 21:3

நீர் கேலிசெய்யும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?

என் சொல் சுத்தம் என்றும், யோபு 10:7யோபு 6:101 பேது 3:15யோபு 14:4யோபு 34:5-6யோபு 35:2யோபு 6:29-30யோபு 7:20

நான் தேவனாகிய உம்முடைய பார்வைக்கு சுத்தமானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.

ஆனாலும் தேவன் பேசி, யோபு 38:1-2யோபு 23:3-7யோபு 31:35யோபு 33:6-18யோபு 40:1-5யோபு 40:8யோபு 42:7

உமக்கு விரோதமாகத் தம்முடைய உதடுகளைத் திறந்து,

உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; எஸ்றா 9:13புலம் 3:22தானி 2:28எபே 3:5மத் 13:35யோபு 15:8தானி 2:47உபா 29:29

உள்ளபடி பார்த்தால், அது இரண்டுமடங்காக இருக்கிறது;

ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.

தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, ரோம 11:33பிரச 3:11சங் 145:3ஏசா 40:28எபே 3:8யோபு 37:23யோபு 5:9சங் 77:19

சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ?

அது வானம்வரை உயர்ந்தது; யோபு 22:12ஏசா 55:9சங் 139:6-8ஆமோ 9:2யோபு 26:6யோபு 35:5சங் 148:132 நாளாக 6:18

உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது,

நீர் அறிந்து கொள்வது என்ன?

அதின் அளவு பூமியைவிட நீளமும், சங் 139:9-10யோபு 28:24-25சங் 65:5-8

சமுத்திரத்தைவிட அகலமுமாயிருக்கிறது.

அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், யோபு 12:14யோபு 9:12-13வெளி 3:7தானி 4:35ஏசா 41:27உபா 32:30யோபு 34:29யோபு 38:8

அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும்,

அவரைத் தடை செய்கிறவன் யார்?

மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்; எபி 4:13சங் 10:14வெளி 2:23யோவா 2:24-25பிரச 5:8ஆப 1:13ஓசி 7:2எரே 17:9-10

அக்கிரமத்தை அவர் கண்டும்,

அதைக் கவனிக்காமல் இருப்பாரோ?

புத்தியில்லாத மனிதன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், யாக் 2:20யோபு 39:5-8பிரச 3:18யாக் 3:13-17எரே 2:24சங் 73:221 கொரி 3:18-20எபே 2:3

அறிவுள்ளவனாக இருக்கிறான்.

நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, சங் 143:6சங் 88:91 சாமு 7:3சங் 78:8யோபு 8:5-6லூக் 12:472 நாளாக 12:14யோபு 22:21-22

உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.

உம்முடைய கையிலே அநீதி இருந்தால், யோபு 22:23யாக் 4:8யோபு 4:7எசேக் 18:30-31ஏசா 1:15யோபு 22:5யோபு 34:32சங் 101:2

அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் தங்கவிடாதிரும்.

அப்பொழுது உம்முடைய முகத்தை வெட்கமில்லாமல் தலைநிமிர்ந்து, யோபு 22:261 யோவா 2:281 யோவா 3:19-221 தீமோ 2:82 கொரி 1:12ஆதி 4:5-6யோபு 10:15நீதி 14:26

பயப்படாமல் பலன்கொண்டிருப்பீர்.

அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, ஏசா 65:16பிரச 5:20ஏசா 54:4ஏசா 54:9யோவா 16:21ஆதி 41:51ஏசா 12:1-2வெளி 7:14-17

கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.

அப்பொழுது உம்முடைய ஆயுள்காலம் நடுப்பகலைவிட பிரகாசமாயிருக்கும்; ஏசா 58:8-10சங் 37:6நீதி 4:18சகரி 14:6-7ஓசி 6:3மீகா 7:8-9சங் 112:41 நாளாக 29:10

இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.

நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் பெலனாயிருப்பீர்; நீதி 3:24-26சங் 3:5சங் 43:5சங் 4:8லேவி 26:5-6ரோம 5:3-5யோபு 7:6நீதி 14:32

தோண்டி ஆராய்ந்து சுகமாகப் படுத்துக்கொள்வீர்.

பயமுறுத்துவாரில்லாமல் தூங்குவீர்; ஏசா 60:14ஏசா 45:14லேவி 26:6சங் 45:12யோபு 42:8-9நீதி 19:6வெளி 3:9ஆதி 26:26-31

அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள்.

துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், உபா 28:65யோபு 17:5யோபு 31:16ஆமோ 2:14ஆமோ 5:19-20ஆமோ 9:1-3எபி 2:3யோபு 18:14

அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டு அகன்று,

அவர்கள் நம்பிக்கை மரணமடைகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும்” என்றான்.