மல்கியா 4

Malachi 4
அத்தியாயம் 4

யெகோவாவின் மாபெரும் நாள்

இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமம் செய்கிற அனைவரும் காய்ந்த இலைகளைப்போல இருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கிளையையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 2 தெச 1:82 பேது 3:7மல்கி 3:2ஏசா 47:14ஏசா 5:24ஒபதி 1:18மல்கி 3:15ஏசா 2:12-17 ஆனாலும் என் நாமத்திற்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் இறக்கையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். எரே 33:6சங் 84:11ஏசா 30:26லூக் 1:78யோவா 8:12ஏசா 53:5வெளி 22:162 சாமு 23:4 துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். யோபு 40:12ரோம 16:20மீகா 7:10சகரி 10:5யோசு 10:24-25மல்கி 3:17மீகா 5:8சங் 91:13 ஓரேபிலே இஸ்ரவேலர்கள் அனைவருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள். உபா 4:10யாக் 2:9-13கலா 5:13-14கலா 5:24-25லூக் 16:29-31ரோம 3:31உபா 4:5-6யாத் 20:3-21 இதோ, யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். லூக் 1:17மத் 17:10-13மாற் 9:11-13மத் 11:13-14மல்கி 3:1ஏசா 40:3யோவா 1:21யோவே 2:31 நான் வந்து பூமியை அழிக்காமலிருக்க, அவன் தகப்பன்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்களுடைய தகப்பன்களிடத்திற்கும் திருப்புவான். லூக் 1:16-17ஏசா 11:4எபி 10:26-31தானி 9:11மத் 23:35-38உபா 29:19-29ஏசா 65:15லூக் 1:76