ஏசாயா 63

Isaiah 63
அத்தியாயம் 63

தேவனுடைய பழிவாங்கும் நாளும் மீட்கும் நாளும்

ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த ஆடைகளுடையவராகவும், மகத்துவமாக அணிந்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாகப் பேசி காப்பாற்ற வல்லவராகிய நான்தானே. வெளி 19:13ஏசா 34:5-6சங் 137:7ஏசா 63:2-3ஆமோ 1:11-12எண் 23:19உன்னத 8:5மத் 21:10 உம்முடைய ஆடைகள் சிவப்பாகவும், ஆலையை மிதிக்கிறவனுடைய ஆடைகளைப்போலவும் இருக்கிறதென்ன? வெளி 19:13வெளி 19:15 நான் தனி ஒருவனாக ஆலையை மிதித்தேன்; மக்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, என் ஆடைகளையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன். வெளி 19:13-15வெளி 14:19-20மல்கி 4:3மீகா 7:10புலம் 1:15சகரி 10:5ஏசா 63:6எசேக் 38:18-22 நீதியைநிலைப்படுத்தும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை விடுவிக்கும் வருடம் வந்தது. ஏசா 34:8ஏசா 61:2ஏசா 35:4எரே 51:6வெளி 18:20லூக் 21:22வெளி 11:13வெளி 6:9-17 நான் பார்த்தேன், துணை செய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு பாதுகாப்பாகி, என் கடுங்கோபமே என்னைத் தாங்கியது. சங் 44:3ஓசி 1:7ஏசா 40:10ஏசா 41:28ஏசா 50:2ஏசா 52:10ஏசா 59:16-18சங் 98:1 நான் என் கோபத்திலே மக்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கச்செய்தேன். ஏசா 49:26வெளி 14:10வெளி 16:19ஏசா 25:10-12ஏசா 26:5-6ஏசா 29:9ஏசா 51:21-23ஏசா 63:2-3

துதியும் ஜெபமும்

யெகோவா எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் ஏற்றதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்திற்குச் செய்த மகா நன்மைக்கு ஏற்றதாகவும், யெகோவாவுடைய செயல்களையும், யெகோவாவுடைய துதிகளையும் பிரபலப்படுத்துவேன். எபே 2:4சங் 86:5சங் 86:15எபே 1:6-7ரோம 2:41 இராஜா 8:66எசேக் 16:6-14சங் 51:1 அவர்கள் என் மக்கள்தானென்றும், அவர்கள் வஞ்சனை செய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார். ஆதி 17:7யாத் 6:7ஏசா 12:21 யோவா 4:14கொலோ 3:9உபா 33:29எபே 4:25யாத் 19:5-6 அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை காப்பாற்றினார் அவர் தமது அன்பின் காரணமாகவும், தமது பரிதாபத்தின் காரணமாகவும் அவர்களை விடுவித்தது, ஆரம்ப நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார். யாத் 33:14யாத் 23:20-21மல்கி 3:1அப் 12:11அப் 7:34-35உபா 1:31உபா 7:7-8யாத் 14:19 அவர்களோ கலகம்செய்து, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்கு எதிரியாக மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாக போர்செய்தார். அப் 7:51எபே 4:30சங் 78:56சங் 78:40எரே 21:5எசேக் 20:8நெகே 9:16-17சங் 51:11 ஆகிலும் அவர் ஆரம்பநாட்களையும், மோசேயையும், தம்முடைய மக்களையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் கடலிலிருந்து ஏறச்செய்தவர் இப்பொழுது எங்கே? எண் 11:17யாத் 14:22ஆகா 2:5எண் 11:25சங் 77:20லூக் 1:54-55எண் 11:29சகரி 4:6 அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்திய புகழ்ச்சியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து, யாத் 15:16யோசு 3:16சங் 78:13யாத் 14:16-17யாத் 14:21-22ஏசா 55:13நெகே 9:11சங் 114:5-7 ஒரு குதிரை வனாந்திரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கச்செய்தவர் எங்கே? எரே 31:9ஆப 3:15சங் 106:9 யெகோவாவுடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறச்செய்தார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள புகழ்ச்சியை உண்டாக்கும்படி உம்முடைய மக்களை நடத்தினீர். ஏசா 63:12யோசு 23:1எபி 4:8-111 நாளாக 29:132 சாமு 7:23எபே 1:12எபே 1:6யோசு 22:4 தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மனஉருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ? உபா 26:15எரே 31:20ஓசி 11:8சங் 123:1சங் 80:14சங் 33:141 யோவா 3:17பிலி 2:1 தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; யெகோவாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது ஆரம்பகாலமுதல் உம்முடைய நாமம். ஏசா 64:8மல்கி 2:10உபா 32:6எரே 3:19ஏசா 41:14ஏசா 44:6மல்கி 1:61 நாளாக 29:10 யெகோவாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகச்செய்து, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்கு ஏன் கடினப்படுத்தவேண்டும்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உமக்குச் சொந்தமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும். ஏசா 6:10எசேக் 14:7-9யோசு 11:20உபா 2:30ஏசா 29:13யோவா 12:40எண் 10:36சங் 90:13 பரிசுத்தமுள்ள உமது மக்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் எதிரிகள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள். சங் 74:3-71 பேது 2:9தானி 8:24உபா 26:19உபா 7:6யாத் 19:4-6ஏசா 62:12ஏசா 64:11-12 நாங்களே 1உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் சூட்டப்பட்டதுமில்லை. ரோம 9:4அப் 14:16சங் 135:4சங் 79:6அப் 15:17ஆமோ 9:12எபே 2:12ஏசா 65:1