விருத்தசேதனத்தைக்குறித்த விவாதம்
சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய கட்டளையின்படியே விருத்தசேதனம்பண்ணப்படாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரர்களுக்குப் போதகம்பண்ணினார்கள். கலா 5:6அப் 15:5கொலோ 2:81 கொரி 7:18-19கலா 2:11-14லேவி 12:3கலா 5:1-4கலா 6:13-16 அதனால் அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் வாக்குவாதம் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களோடு இருந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள். அப் 15:22-23அப் 15:6-7கலா 2:1-22 கொரி 11:5அப் 11:30அப் 15:4கலா 1:6-10கலா 2:5 அப்படியே அவர்கள் சபை மக்களால் வழியனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின்வழியாகப்போய், யூதரல்லாதோர் மனம் மாறிய செய்தியை அறிவித்து, சகோதரர்கள் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள். அப் 14:27அப் 21:51 கொரி 16:111 கொரி 16:6அப் 11:18-19அப் 15:12ரோம 15:24தீத் 3:13 அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபை மக்களாலும் அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்கள் மூலமாக செய்தவைகளை எல்லாம் அறிவித்தார்கள். அப் 14:27அப் 15:12அப் 15:3அப் 21:17ரோம 15:181 கொரி 15:102 கொரி 5:192 கொரி 6:1 அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். கலா 5:1-3அப் 15:1பிலி 3:5-8அப் 15:24அப் 21:20அப் 24:5அப் 26:5-6 அப்போஸ்தலர்களும், சபை மூப்பர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள். நீதி 15:22அப் 15:25எபி 13:17எபி 13:7அப் 15:4அப் 21:18அப் 6:2மத் 18:20 மிகுந்த வாக்குவாதம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரர்களே, உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி யூதரல்லாதோர் என்னுடைய வாயினாலே நற்செய்தி வசனத்தைக்கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்பே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார். கலா 2:7-9ரோம 10:17-181 நாளாக 28:4-5அப் 15:2அப் 10:20அப் 10:32-48அப் 20:24அப் 1:16 இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரை அருளினதுபோல அவர்களுக்கும் அருளி, அவர்களைக்குறித்துச் சாட்சியளித்தார்; அப் 1:24அப் 10:47அப் 14:3அப் 2:4எபி 4:131 நாளாக 28:91 இராஜா 8:391 சாமு 16:7 விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாதபடி செய்தார். எபே 3:6கலா 5:6ரோம 3:22அப் 10:281 கொரி 1:2அப் 11:12கொலோ 3:11கலா 3:28 இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்? கலா 5:1மத் 23:4கலா 4:9எபி 9:9ஏசா 7:12மத் 11:28-30மத் 4:7யாத் 17:2 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோம் என்று நம்பியிருக்கிறோமே என்றான். ரோம 3:24தீத் 3:4-7எபே 2:5-9தீத் 2:11கலா 2:162 கொரி 13:14ரோம 6:231 கொரி 16:23 அப்பொழுது கூடிவந்திருந்த எல்லோரும் அமைதியாக இருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் யூதரல்லாதோர்களுக்குள்ளே செய்த அற்புதங்கள் அடையாளங்கள் யாவையும் விளக்கிச் சொல்லக் கேட்டார்கள். அப் 14:27அப் 15:4அப் 21:19யோவா 4:48 அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். அப் 12:17கலா 2:12கலா 2:9யாக் 1:11 கொரி 14:30-33அப் 2:14அப் 2:22அப் 2:29 தேவன் யூதரல்லாதோர் கூட்டத்தில் இருந்து தமது நாமத்திற்காக ஒரு மக்கள் கூட்டத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதன்முதலாக அவர்களுக்கு வெளிப்படுத்தின விதத்தை சிமியோன் விளக்கிச் சொன்னாரே. 2 பேது 1:1அப் 15:7-9லூக் 2:31-321 பேது 2:9-10ஏசா 43:21ரோம 1:5ஏசா 55:11-13லூக் 1:68 அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளும் ஒத்திருக்கிறது. அப் 13:47ரோம 15:8-12 எப்படியென்றால், மற்ற மனிதர்களும், என்னுடைய நாமத்தினால் அழைக்கப்பட்ட எல்லா மக்களும், கர்த்த்தரை தேடும்படி, ஆமோ 9:11-12லூக் 1:31-33சங் 89:35-49எசேக் 17:22-241 இராஜா 12:16ஏசா 9:6-7எரே 12:15எரே 33:24-26 நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுத்து, அதில் பழுதானவைகளை மீண்டும் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாம் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. சகரி 2:11சகரி 8:20-23ஓசி 2:23ஏசா 65:1ஏசா 66:18-21எரே 16:19மல்கி 1:11ஏசா 43:7 உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. எபே 1:4எபே 3:9ஏசா 46:9-101 பேது 1:20எபே 1:11அப் 17:26எண் 23:192 தெச 2:13 எனவே யூதரல்லாதோர்களில் தேவனிடத்தில் சேருகிறவர்களைத் தொந்தரவுபண்ணக்கூடாது என்றும், அப் 15:28கலா 1:7-101 தெச 1:9அப் 15:24அப் 26:20ஓசி 14:2ஏசா 55:7அப் 15:10 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். அப் 15:29வெளி 2:20வெளி 2:14ஆதி 9:4லேவி 3:171 கொரி 8:4-13அப் 21:251 கொரி 10:7-8 ஏனென்றால் மோசேயின் புத்தகங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், ஆரம்ப காலம்முதல் எல்லாப் பட்டணங்களிலும் அந்த புத்தகங்களைப் போதிக்கிறவர்களும் உண்டு என்றான். அப் 13:15அப் 13:272 கொரி 3:14-15லூக் 4:16நெகே 8:1-12
யூதரல்லாதவர்களுக்குக் கடிதம்
அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவிற்கு அனுப்புகிறது அப்போஸ்தலர்கள், மூப்பர்கள் மற்றும் மக்கள் எல்லோருக்கும் நலமாகத் தோன்றியது. அவர்கள் யாரென்றால், சகோதரர்களில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்னும் மறுபெயர்கொண்ட யூதாவும் சீலாவுமே. அப் 15:27அப் 15:401 பேது 5:121 தெச 1:12 தெச 1:1அப் 1:23அப் 15:32அப் 18:5 இவர்களுடைய கையில் அவர்கள் கொடுத்தனுப்பின கடிதமாவது: அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சகோதரர்களுமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் யூதரல்லாத சகோதரர்களுக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய கடிதம் என்னவென்றால்: அப் 23:26கலா 1:21யாக் 1:1அப் 15:22ரோம 16:3-162 யோவா 1:102 யோவா 1:132 யோவா 1:3 எங்களிடம் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் குழப்பி, உங்களுடைய மனதைக் கெடுத்தார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால், கலா 5:12அப் 15:1கலா 5:10கலா 1:7தீத் 1:10-111 யோவா 2:19கலா 2:3-4கலா 6:12-13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்களுடைய உயிரையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்த எங்களுக்குப் பிரியமான பர்னபா மற்றும் பவுல் என்பவர்களோடு, 2 பேது 3:15அப் 1:14அப் 15:2அப் 15:22லூக் 1:31 கொரி 1:10அப் 15:27-28அப் 15:35 எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனிதர்களை உங்களிடத்திற்கு அனுப்புவது எங்களுக்கு நலமாகத் தோன்றியது. அப் 14:19அப் 9:23-25பிலி 2:29-301 கொரி 15:302 கொரி 11:23-27அப் 13:50நியாயாதி 5:18 அப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்வார்த்தையாக உங்களுக்கு அறிவிப்பார்கள். அப் 15:222 யோவா 1:123 யோவா 1:13அப் 15:32 என்னவென்றால், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கவேண்டுமென்பதே. யோவா 16:13மத் 11:30வெளி 2:241 கொரி 14:371 பேது 1:121 கொரி 7:40அப் 15:19அப் 15:8 அவசியமான இவைகளைத்தவிர வேறு பாரமான எந்தவொரு காரியத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் நலமாகத் தோன்றியது; இவைகளைச் செய்யாமல் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளுவது நலமாக இருக்கும். சுகமாக இருப்பீர்களாக என்று எழுதினார்கள். அப் 15:20அப் 21:25வெளி 2:14வெளி 2:20லேவி 17:141 கொரி 10:18-20ரோம 14:20-211 யோவா 5:21 அவர்கள் அனுப்பிவிடப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்து, சபை மக்களைக் கூட்டிச்சேர்த்து, கடிதத்தை ஒப்படைத்தார்கள். அப் 16:4அப் 6:2அப் 21:22அப் 23:33 அதை அவர்கள் வாசித்து, அதினால் கிடைத்த ஆறுதலுக்காக சந்தோஷப்பட்டார்கள். கலா 2:4-5கலா 5:1பிலி 3:3அப் 15:1அப் 15:10அப் 16:5 யூதா சீலா என்பவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தபடியால் அநேக வார்த்தைகளினால் சகோதரர்களுக்குப் புத்திச்சொல்லி, அவர்களைத் தைரியப்படுத்தி, அப் 11:23அப் 13:1அப் 14:221 கொரி 14:31 பேது 5:11 பேது 5:101 பேது 5:121 தெச 3:2 சிலநாட்கள் அங்கே தங்கியிருந்து, பின்பு சகோதரர்களால் சமாதானத்தோடு அப்போஸ்தலர்களிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள். 1 கொரி 16:11அப் 16:36எபி 11:31ஆதி 26:292 யோவா 1:10யாத் 4:18மாற் 5:34 ஆனாலும் சீலாவிற்கு அங்கே தங்கியிருப்பது நலமாகத் தோன்றியது. பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே தங்கியிருந்து, மற்ற மக்களுக்கும் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் போதித்துக்கொண்டிருந்தார்கள். 2 தீமோ 4:2கொலோ 1:28அப் 13:1மத் 28:19-201 தீமோ 2:7அப் 14:28அப் 28:31அப் 8:4
பவுலும் பர்னபாவும் பிரிந்துசெல்லுதல்
சில நாட்களுக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற எல்லாப் பட்டணங்களிலும் உள்ள சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சென்று பார்க்கலாம் வாரும் என்றான். அப் 13:4அப் 14:6அப் 13:13-14அப் 13:51அப் 14:24-252 கொரி 11:281 தெச 3:10-11அப் 14:1 அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானையும் அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். அப் 12:122 தீமோ 4:11அப் 12:25அப் 13:5கொலோ 4:10பிலே 1:24அப் 13:13 ஆனால் பவுல்: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மைவிட்டுப் பிரிந்து நம்மோடு ஊழியத்திற்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான். அப் 13:13யாக் 1:8லூக் 14:27-34நீதி 25:19சங் 78:9லூக் 9:61 இதைக்குறித்து அவர்களுக்குள்ளே கடுமையான விவாதம் உண்டானபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவிற்குப் போனான். கொலோ 4:10அப் 4:36பிரச 7:20யாக் 3:2ரோம 7:18-21அப் 11:20அப் 13:4-12அப் 6:1 பவுலோ சீலாவை அழைத்துக்கொண்டு, சகோதரர்களாலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு, அப் 15:22அப் 11:23அப் 14:261 கொரி 15:102 கொரி 13:142 யோவா 1:10-112 தீமோ 4:22அப் 13:3 சீரியாவிலும் சிலிசியாவிலும் பயணம்செய்து, சபை மக்களைத் தைரியப்படுத்தினான். அப் 15:23அப் 15:32கலா 1:21அப் 16:4-5அப் 21:3அப் 6:9அப் 18:18