விசுவாசம்
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது. 2 கொரி 5:72 கொரி 4:18ரோம 8:24-25எபி 11:7எபி 10:221 பேது 1:7-8சங் 27:13எபி 11:27 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். எபி 11:39எபி 11:4 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். சங் 33:6யோவா 1:32 பேது 3:5ரோம 4:17அப் 17:24வெளி 4:11எபி 1:2ஆதி 1:1 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். ஆதி 4:3-51 யோவா 3:11-12எபி 12:24ஆதி 4:10மத் 23:35நீதி 15:8யூதா 1:11எபி 9:22 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டதினால், அவன் காணப்படாமல் போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே சாட்சிபெற்றான். ஆதி 5:21-24யூதா 1:142இராஜா 2:11எபி 11:6வெளி 11:9-121 யோவா 3:221 தெச 2:42இராஜா 2:16-17 விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும். நீதி 8:17எரே 29:13-14மத் 6:331 நாளாக 28:9சங் 105:3-4லூக் 12:31சங் 119:10எபி 7:25 விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாக, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து, விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான். ஆதி 6:131 பேது 3:20எசேக் 14:14லூக் 17:26ரோம 4:13எசேக் 14:20கலா 5:5ஆதி 7:23 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான். அப் 7:2-4ஆதி 12:1-4மத் 7:24-25ஆதி 15:7-8ஆதி 22:18ஆதி 12:7யாக் 2:14-16ஏசா 41:2 விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; ஆதி 12:8ஆதி 13:18ஆதி 13:3அப் 7:5-6எபி 6:17ஆதி 18:9ஆதி 26:3-4ஆதி 35:27 ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான். எபி 13:14பிலி 3:202 கொரி 5:1எபி 12:22யோவா 14:2எபி 3:4வெளி 21:2வெளி 21:10-27 விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள். எபி 10:23ரோம 4:20-21ஆதி 18:11-14ஆதி 21:1-2லூக் 1:361 பேது 3:5-6ஆதி 17:17-19 எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள். ஆதி 22:17ஆதி 32:12ஆதி 15:5ஓசி 1:10எரே 33:22ஆதி 26:4யாத் 32:13ஏசா 10:22 இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள். ஆதி 23:4சங் 39:12எபி 11:271 நாளாக 29:14-151 பேது 2:11எபி 11:39யோவா 8:56ரோம 8:24 இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். 2 கொரி 4:18எபி 11:16எபி 13:14ரோம 8:23-25பிலி 1:23 தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்கள் என்றால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்குமே. ஆதி 24:6-8ஆதி 12:10ஆதி 11:31ஆதி 31:18ஆதி 32:9-11 அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே. எபி 13:14பிலி 3:20எபி 11:10யோவா 14:2மத் 25:34எபி 12:22எபி 2:112 தீமோ 4:18 மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஆதி 22:16ஆதி 22:1-12யாக் 2:21-241 பேது 1:6-7யாக் 5:11வெளி 3:101 பேது 4:12நீதி 17:3 ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து, ஆதி 21:12ரோம 9:7ஆதி 17:19 தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். மத் 9:28ரோம 4:17-21எபே 3:20ஆதி 22:13ஆதி 22:4-5எபி 11:11-12எபி 9:24ரோம 5:14 விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான். ஆதி 27:27-40ஆதி 28:2-3 விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான். ஆதி 47:31ஆதி 48:5-22 விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான். யாத் 13:19ஆதி 50:24-25யோசு 24:32அப் 7:16 மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள். யாத் 1:22யாத் 1:16யாத் 2:2-10எபி 13:6மத் 10:28அப் 7:20ஏசா 41:14ஏசா 8:12-13 விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து, யாத் 2:10-11அப் 7:21-24 நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு, சங் 84:102 தீமோ 2:3-10யோபு 36:211 பேது 4:12-162 கொரி 5:17யோபு 20:51 பேது 1:6-71 பேது 2:10 இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான். எபி 10:35எபி 11:61 பேது 4:14மத் 5:122 கொரி 12:102 கொரி 6:10எபி 2:2லூக் 14:14 விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். 2 கொரி 4:18எபி 11:13யாத் 2:14-15எபி 11:1யாத் 10:28-29யாத் 14:10-13யாத் 4:19யாக் 5:11 விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். யாத் 12:21-30எபி 9:191 பேது 1:2எபி 12:24யாத் 12:3-14 விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள். யாத் 14:13சங் 106:9-11சங் 78:13ஆப 3:8-10ஏசா 51:9-10ஏசா 63:11-16யோசு 2:10சங் 66:6 விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. யோசு 6:3-202 கொரி 10:4-5 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள். யாக் 2:25யோசு 6:22-25மத் 1:5யோசு 2:1-24மத் 1:1யோசு 1:11 பேது 2:81 பேது 3:20 பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும்குறித்து நான் விபரம் சொல்லவேண்டுமென்றால் காலம்போதாது. 1 சாமு 1:201 சாமு 16:11 சாமு 16:13நியாயாதி 11:1-12நியாயாதி 13:1-16யோவா 21:251 பேது 1:10-121 சாமு 12:11 விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், எபி 6:12-15சங் 144:1-22 தீமோ 4:17எபி 10:361 பேது 5:82 சாமு 5:4-25தானி 6:20-23கலா 3:16 அக்கினியின் கோபத்தை அணைத்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியர்களுடைய படைகளை முறியடித்தார்கள். 1 சாமு 17:51-522இராஜா 6:16-18நியாயாதி 15:8சங் 144:102 நாளாக 32:20-222 கொரி 12:9-101 இராஜா 19:31 சாமு 14:13-15 பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்; 1 இராஜா 17:22-242இராஜா 4:27-37பிலி 3:11அப் 9:411 கொரி 15:54அப் 24:15அப் 23:6யோவா 11:40-45 வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்; எரே 20:2ஆதி 39:20எரே 37:15-212 நாளாக 30:102 நாளாக 16:10எபி 10:34எரே 20:7எரே 32:2-3 கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்; 2 நாளாக 24:21எரே 26:231 இராஜா 19:101 இராஜா 21:13-152இராஜா 1:81 இராஜா 21:10அப் 7:521 கொரி 4:9-13 உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள். 1 இராஜா 18:41 இராஜா 19:91 சாமு 22:1ஏசா 57:11 சாமு 24:1-31 இராஜா 14:12-131 இராஜா 17:31 இராஜா 18:13 இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள். லூக் 10:23-24எபி 11:13எபி 11:21 பேது 1:12 நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார். வெளி 6:11எபி 10:11-14எபி 8:6எபி 7:19எபி 5:9எபி 9:23எபி 9:8-15ரோம 3:25-26