எரேமியா 26

Jeremiah 26
அத்தியாயம் 26

எரேமியாவிற்குக் கொடுக்கப்பட்ட கொலைமிரட்டல்

யோசியாவின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்தில் யெகோவாவால் உண்டான வார்த்தை: 2 நாளாக 36:4-5எரே 27:12இராஜா 23:34-36எரே 1:3எரே 25:1எரே 35:1எரே 36:1 நீ யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, யெகோவாவுடைய ஆலயத்தில் பணிந்துகொள்ள வருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிமக்கள் அனைவருடனும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று யெகோவா சொல்லுகிறார். உபா 4:2அப் 20:27மத் 28:20எரே 1:17எரே 19:14அப் 20:20அப் 5:42எரே 7:2 அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பிற்காக நான் அவர்களுக்குச் செய்ய நினைக்கிற தீங்குக்கு நான் மனவருத்தமடையும் விதத்தில் ஒருவேளை அவர்கள் கேட்டு, அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள். எரே 36:3ஏசா 1:16-19எரே 18:7-10யோனா 4:2எசேக் 18:27-30எரே 36:7யோனா 3:8-101 இராஜா 21:27 நீ அவர்களை நோக்கி: நான் உங்களிடத்திற்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேட்காமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் கேட்கவும், 1 இராஜா 9:6ஏசா 1:20எரே 44:102 நாளாக 7:19-20உபா 11:32உபா 28:15-68உபா 29:18-28உபா 31:16-18 நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தில் நீங்கள் நடப்பதற்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால், எரே 11:72இராஜா 9:7எஸ்றா 9:11எரே 25:3-4எரே 7:13எரே 7:25ஆமோ 3:7தானி 9:6-10 நான் இந்த ஆலயத்தைச் சீலோவாவைப் போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார். 2இராஜா 22:19எரே 24:9ஏசா 65:15எரே 25:181 சாமு 4:10-121 சாமு 4:19-22தானி 9:11எரே 7:12-14 எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், எல்லா மக்களும் கேட்டார்கள். எரே 5:31மீகா 3:11அப் 4:1-6அப் 5:17எசேக் 22:25-26எரே 23:11-15மத் 21:15செப்ப 3:4 எல்லா மக்களுக்கும் சொல்லக் யெகோவா தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், எல்லா மக்களும் அவனைப்பிடித்து: நீ இறக்கவே இறக்கவேண்டும். புலம் 4:13-142 நாளாக 36:16அப் 5:33அப் 7:52எரே 11:19-21எரே 12:5-6எரே 18:18எரே 2:30 இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் அழிந்து போகும் என்று, நீ யெகோவாவுடைய பெயரில் தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, மக்கள் எல்லோரும் யெகோவாவுடைய ஆலயத்தில் எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள். 2 நாளாக 25:16அப் 13:50அப் 16:19-22அப் 17:5-8அப் 19:24-32அப் 21:30அப் 4:17-19அப் 6:14 யூதாவின் பிரபுக்கள் இந்த நடவடிக்கைகளைக்கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போய், யெகோவாவுடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள். எரே 36:102இராஜா 15:35எசேக் 22:27எசேக் 22:6எரே 26:16-17எரே 26:24எரே 34:19எரே 36:12-19 அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் எல்லா மக்களையும் நோக்கி: இந்த மனிதன் மரணதண்டனைக்கு உரியவன்; உங்கள் காதுகளால் நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள். எரே 38:4உபா 18:20மத் 26:66அப் 6:11-14அப் 22:22அப் 24:4-9அப் 25:2-13எரே 18:23 அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா மக்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்திற்கும் இந்த நகரத்திற்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் யெகோவா என்னை அனுப்பினார். அப் 4:19அப் 5:29எரே 26:15எரே 1:17-18எரே 26:2ஆமோ 7:15-17எரே 19:1-3 இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் செயல்களையும் ஒழுங்குபடுத்தி, உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது யெகோவா உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனம் வருந்துவார். ஏசா 1:19யோனா 3:9யோனா 4:2எபி 5:9ஓசி 14:1-4ஏசா 55:7எரே 18:8எரே 26:19 நானோவெனில், இதோ, உங்கள் கையில் இருக்கிறேன்; உங்கள் பார்வைக்கு நன்மையும் நியாயமுமாயிருக்கிறதை எனக்குச் செய்யுங்கள். யோசு 9:252 சாமு 15:26எரே 38:5தானி 3:16 ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் காதுகளில் சொல்லக் யெகோவா மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான். எண் 35:33நீதி 6:17அப் 7:60எரே 22:3எரே 7:6மத் 26:25வெளி 16:61 தெச 2:15-16 அப்பொழுது பிரபுக்களும் எல்லா மக்களும் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனிதன் மரணதண்டனைக்கு பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய யெகோவாவின் பெயரில் நம்முடனே பேசினான் என்றார்கள். அப் 23:29அப் 23:9அப் 25:25அப் 5:34-39எரே 36:19எரே 36:25அப் 26:31-32எஸ்த 4:14 தேசத்தில் மூப்பர்களில் சிலர் எழும்பி, சபையாகிய மக்களை நோக்கி: அப் 5:34மீகா 1:1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் எல்லா மக்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாகும்; இந்த ஆலயத்தின் மலை காட்டிலுள்ள மேடுகளாகும் என்று சேனைகளின் யெகோவா சொன்னார் என்று சொன்னான். மீகா 1:1நெகே 4:2சகரி 8:3எரே 17:3மீகா 3:12ஏசா 2:2-3சங் 79:12இராஜா 19:25 அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது யெகோவா அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனவருத்தமடைந்தார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகாபொல்லாப்பை வரச்செய்கிறவர்களாயிருக்கிறோமே. 2 சாமு 24:16யாத் 32:142 நாளாக 29:6-11ஏசா 37:15-202 நாளாக 32:25-26அப் 5:39ஏசா 37:1ஏசா 37:4 கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் மகன் உரியா என்னும் ஒரு மனிதனும் யெகோவாவுடைய பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்திற்கும் இந்த தேசத்திற்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான். 1 சாமு 7:2யோசு 9:171 சாமு 6:21யோசு 15:60யோசு 18:14 யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய எல்லா பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோட தீர்மானித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்தில் சேர்ந்தான். மத் 10:232 நாளாக 16:10எரே 36:26மத் 14:51 இராஜா 19:1-3மத் 10:28மத் 10:39மத் 16:25-26 அப்பொழுது யோயாக்கீம் ராஜா அக்போரின் மகனாகிய எல்நாத்தானையும் அவனுடன் வேறு சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான். 2இராஜா 22:122இராஜா 22:14எரே 36:12எரே 36:25நீதி 29:12சங் 12:8 இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தால் அவனை வெட்டி, அவன் உடலை ஏழை மக்களின் கல்லறைகளிடத்தில் எறிந்துவிட்டான் என்றார்கள். எரே 2:30வெளி 11:71 தெச 2:15அப் 12:1-3எசேக் 19:6எரே 22:19எரே 26:15எரே 36:30 ஆகிலும் எரேமியாவைக் கொல்ல மக்களின் கையில் ஒப்புக்கொடுக்காமல், சாப்பானுடைய மகனாகிய அகீக்காம் அவனுக்கு உதவியாயிருந்தான். 1 இராஜா 18:42இராஜா 22:12-14எரே 1:18-19எரே 39:14எரே 40:5-72 நாளாக 34:202இராஜா 25:22அப் 23:10