ஏசாயா 37

Isaiah 37
அத்தியாயம் 37

எருசலேமின் விடுதலை முன்னறிவிக்கப்படுதல்

ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, சணல்உடை அணிந்துகொண்டு, யெகோவாவுடைய ஆலயத்திற்குச் சென்று, 2இராஜா 19:1-372இராஜா 22:11எஸ்றா 9:5ஏசா 36:22யோபு 1:20-21யோனா 3:5-6எரே 36:24மத் 11:21 அரண்மனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், எழுத்தனாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பர்களையும், ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு சணல்உடை அணிந்தவர்களாக அனுப்பினான். ஏசா 1:12 நாளாக 20:202இராஜா 18:182இராஜா 19:22இராஜா 22:12-14ஏசா 36:3ஏசா 37:14யோவே 1:13 இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், துக்கமும், நிந்தையும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை. ஏசா 66:9ஓசி 13:132இராஜா 19:3ஏசா 26:17-18சங் 50:15ஏசா 33:22 நாளாக 15:4சங் 91:15 ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் எஜமானனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிற வார்த்தைகளின்காரணமாக தண்டிப்பார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பம்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள். ஏசா 1:9ஏசா 36:20ஏசா 10:22சங் 106:231 சாமு 12:191 சாமு 12:231 சாமு 14:61 சாமு 17:26 இவ்விதமாக எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள். அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னை நிந்தித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும். ஏசா 7:4ஏசா 35:4மாற் 5:362 நாளாக 20:15-202இராஜா 19:5-72இராஜா 22:15-20யாத் 14:13ஏசா 10:24-25 இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்திற்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழச்செய்வேன் என்று யெகோவா உரைக்கிறார் என்பதை உங்கள் எஜமானிடத்தில் சொல்லுங்கள் என்றான். 2 நாளாக 32:21ஏசா 31:8-92இராஜா 7:6ஏசா 10:16-18ஏசா 10:33-34ஏசா 17:13-14ஏசா 29:5-8ஏசா 30:28-33 அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் போர்செய்கிறதைக் கண்டான். யோசு 10:292 நாளாக 21:102இராஜா 19:8-92இராஜா 8:22யோசு 10:31-34யோசு 12:11யோசு 15:39யோசு 21:13 அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்திற்குப் பிரதிநிதிகளை அனுப்பி: 1 சாமு 23:27-28ஏசா 18:1ஏசா 20:5ஏசா 37:7 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை ஏமாற்ற இடம்கொடாதே. ஏசா 36:152இராஜா 18:52 நாளாக 32:15-192 நாளாக 32:7-82இராஜா 19:10-13ஏசா 36:20ஏசா 36:4மத் 27:43 இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ? ஏசா 36:18-202இராஜா 17:4-62இராஜா 18:33-35ஏசா 10:7-14ஏசா 14:17ஏசா 37:18-19 என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும் அவர்களுடைய தெய்வங்கள் தப்புவித்ததுண்டோ? ஆதி 11:312இராஜா 17:62இராஜா 18:112இராஜா 19:12அப் 7:2ஆமோ 1:5எசேக் 27:23எசேக் 28:13 ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார். 2இராஜா 17:242இராஜா 17:30-312இராஜா 18:342இராஜா 19:13ஏசா 10:9ஏசா 36:19எரே 49:23

எசேக்கியாவின் ஜெபம்

எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்த கடிதத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போய் அதைக் யெகோவாவுக்கு முன்பாக விரித்து, 2இராஜா 19:14சங் 123:1-41 இராஜா 8:28-301 இராஜா 8:381 இராஜா 9:32 நாளாக 6:20-42ஏசா 37:1யோவே 2:17-20 யெகோவாவை நோக்கி: 1 சாமு 7:8-92 நாளாக 14:112 நாளாக 20:6-122இராஜா 19:15-192 சாமு 7:18-29தானி 9:3-4யாக் 5:13பிலி 4:6-7 சேனைகளின் யெகோவாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். யாத் 25:22சங் 99:1சங் 86:101 சாமு 4:4ஏசா 44:24சங் 80:1கொலோ 1:16எபி 4:16 யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும். 2 நாளாக 6:40சங் 17:61 பேது 3:12ஏசா 37:4சங் 10:14-15சங் 74:222 சாமு 16:12தானி 9:17-19 யெகோவாவே, அசீரியா ராஜாக்கள் அந்த தேசங்களையும், அவர்கள் நிலங்களையும் நாசமாக்கி, 2இராஜா 15:29நாகூ 2:11-121 நாளாக 5:262இராஜா 16:92இராஜா 17:242இராஜா 17:6 அவர்களுடைய தெய்வங்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை முற்றிலுமாக அழித்தார்கள். 2 சாமு 5:21யாத் 32:20ஓசி 8:6ஏசா 10:9-11ஏசா 26:14ஏசா 36:18-20ஏசா 40:19-21ஏசா 41:24 இப்போதும் எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே யெகோவா என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் செய்தான். சங் 46:101 இராஜா 18:36-37சங் 83:17-18எசேக் 36:23ஏசா 42:8மல்கி 1:11சங் 67:1-21 இராஜா 8:43

சனகெரிப்பின் வீழ்ச்சி

அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்செய்தாயே. 2இராஜா 19:20-212 சாமு 15:312 சாமு 17:23அப் 4:31தானி 9:20-23ஏசா 37:2ஏசா 38:3-6ஏசா 58:9 அவனைக்குறித்துக் யெகோவா சொல்கிற வசனமாவது: மகளாகிய சீயோன் என்னும் கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; மகளாகிய எருசலேம் உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள். யோபு 16:4ஏசா 1:8எரே 14:17புலம் 2:13சங் 22:7-8சங் 9:14சகரி 2:10செப்ப 3:14 யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாக உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாக அல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய். தானி 5:20-23எசேக் 39:72 தெச 2:4தானி 7:25எசேக் 28:9ஏசா 17:7ஏசா 41:162 நாளாக 32:17 உன் ஊழியக்காரர்களைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் உச்சிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், விலையுயர்ந்த தேவதாரு மரங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைவரை, அதின் செழுமையான காடுவரை வருவேன் என்றும், ஏசா 14:8ஏசா 10:182இராஜா 19:22-23தானி 4:20-22தானி 4:30தானி 4:8-14யாத் 15:9எசேக் 31:3-18 நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் பாதுகாப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்செய்தேன் என்றும் சொன்னாய். 1 இராஜா 20:102இராஜா 19:23-24உபா 11:10ஏசா 36:12 நான் வெகுகாலத்திற்குமுன் அதை நியமித்து, ஆரம்பநாட்கள்முதல் அதைத் திட்டம்செய்தேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ பாதுகாப்பான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கச்செய்தேன். அப் 4:27-28அப் 2:231 பேது 2:8ஏசா 10:15ஏசா 46:10-11ஏசா 10:5-6ஆமோ 3:6ஆதி 50:20 அதினாலே அவைகளின் குடிமக்கள் கை இளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் தாவரத்திற்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள். சங் 129:61 பேது 1:242இராஜா 19:26ஏசா 19:16ஏசா 40:6-8யாக் 1:10-11எரே 37:10எரே 5:10 உன் உட்காருதலையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறதையும் அறிவேன். சங் 139:1-11வெளி 2:13எரே 23:23-24நீதி 15:3நீதி 5:21 நீ எனக்கு விரோதமாகத் கொந்தளித்து, வீராப்பு பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பச்செய்வேன். எசேக் 38:4ஏசா 10:12ஏசா 30:28ஏசா 37:34எசேக் 29:42இராஜா 19:27-28அப் 22:22அப் 9:4 உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருடத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருடத்திலே தானாக விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருடத்திலோ விதைத்து அறுத்து, திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவீர்கள். 2இராஜா 19:291 இராஜா 13:3-52இராஜா 20:9யாத் 3:12ஏசா 7:14லேவி 25:4-5ஏசா 38:7ஏசா 7:21-25 யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். ஏசா 27:62இராஜா 19:30-31சங் 80:9ஏசா 1:9ஏசா 10:20-22எரே 44:28ரோம 11:5ரோம 9:27 மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய யெகோவாவின் வைராக்கியம் இதைச் செய்யும். ஏசா 9:72இராஜா 19:31ஏசா 59:17யோவே 2:18சகரி 1:14ஏசா 37:20 ஆகையால் யெகோவா அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் நுழைவதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கோட்டைமதில் போடுவதுமில்லை. 2இராஜா 19:32-35எசேக் 21:22ஏசா 10:32-34ஏசா 17:12ஏசா 17:14ஏசா 33:20ஏசா 8:7-10லூக் 19:43-44 அவன் இந்த நகரத்திற்குள் நுழையாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான். ஏசா 37:29நீதி 21:30 என்னிமித்தமும் என் வேலைக்காரனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை காப்பாற்றுவதற்காக இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் யெகோவா உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான். 2இராஜா 20:6ஏசா 31:5ஏசா 38:6எபே 1:14ஏசா 43:25எரே 23:5-6எரே 33:15-16எசேக் 37:24-25 அப்பொழுது யெகோவாவுடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் முகாமில் ஒரு இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரை அழித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லோரும் சடலங்களாகக் கிடந்தார்கள். 2இராஜா 19:35ஏசா 10:121 தெச 5:2-32 சாமு 24:16ஏசா 10:33-34ஏசா 31:8அப் 12:23ஏசா 33:10-12 அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிராயணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான். யோனா 1:2யோனா 3:3ஆதி 10:11-12ஏசா 31:9ஏசா 37:29ஏசா 37:7யோனா 4:11மத் 12:41 அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் மகன்களாகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் மகனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து ஆட்சிசெய்தான். ஆதி 8:4எரே 51:27எஸ்றா 4:22 நாளாக 32:142 நாளாக 32:192 நாளாக 32:212இராஜா 19:36-37ஏசா 14:12