சங்கீதங்கள் 10

Psalms 10
சங்கீதம் 10

யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? சங் 22:1சங் 27:9சங் 13:1-3எரே 14:8யோபு 13:24சங் 44:24சங் 46:1சங் 30:7

துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் சங் 59:12சங் 36:11சங் 7:16நீதி 5:22சங் 31:18சங் 119:122ஏசா 10:12-13சங் 140:5

ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்;

அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.

துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான், சங் 94:4லூக் 12:19சகரி 11:5-8மீகா 6:10-12உபா 29:19யாத் 15:9ஏசா 37:23யோபு 31:24

பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.

துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்; சங் 14:1-2ரோம 1:28அப் 8:22ஆதி 6:5உபா 8:14ரோம 1:21யாத் 5:2ஏசா 65:2

அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.

அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; ஏசா 26:11ஓசி 14:9சங் 12:5சங் 92:5-61 இராஜா 20:10-111 இராஜா 20:132 சாமு 5:6ஓசி 9:9

உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன;

தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான்.

நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை பிரச 8:11ஏசா 56:12மத் 24:481 தெச 5:3நாகூ 1:10சங் 11:1சங் 15:5வெளி 18:7

என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், சங் 7:14சங் 140:9சங் 140:3சங் 59:12சங் 64:3யாக் 3:6-8எரே 9:3யோபு 20:12

கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது;

அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.

கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து, ஆப 3:141 சாமு 22:18எரே 22:171 சாமு 23:232இராஜா 21:16லூக் 8:1நீதி 1:11-12நீதி 6:12-13

மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்;

திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.

தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்; சங் 17:12சங் 59:3மீகா 7:2சங் 35:10ஆமோ 2:6-7ஆமோ 3:4ஆமோ 5:11-12எசேக் 22:29

ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.

திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான். 1 சாமு 18:21-261 சாமு 23:21-221 சாமு 2:362 சாமு 15:5

தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து, எசேக் 8:12சங் 94:7சங் 10:6சங் 73:11பிரச 8:11எசேக் 9:9சங் 64:5யோபு 22:13-14

எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்;

தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.

யெகோவாவே, எழுந்தருளும்; மீகா 5:9சங் 9:12சங் 94:2ஏசா 33:10சங் 17:7ஏசா 26:11சங் 3:7சங் 7:6

தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்;

ஏழைகளை மறக்காமலிரும்.

துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து, லூக் 10:161 தெச 4:82 நாளாக 24:222 சாமு 12:9-10எண் 11:20சங் 74:10சங் 74:18ஆதி 42:22

நீர் கேட்டு விசாரிப்பதில்லை;

என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்?

அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும், சங் 68:5சங் 146:9சங் 55:22உபா 10:181 பேது 4:19ஓசி 14:3எரே 49:111 பேது 5:7

துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே;

நீர் பதிலளிப்பீர்;

ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்;

திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.

துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; யோபு 38:15சங் 37:17செப்ப 1:12சங் 7:9எசேக் 30:21-22எரே 2:34சகரி 11:17எசேக் 23:48

அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.

யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்; எரே 10:10சங் 29:101 தீமோ 1:17தானி 4:34தானி 6:26உபா 8:20சங் 145:131 தீமோ 6:15-16

அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.

யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; சங் 145:192 நாளாக 34:27சங் 34:151 பேது 3:12ஏசா 65:24சங் 37:41 நாளாக 29:182 நாளாக 33:12-13

அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர்.

மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல், சங் 9:9சங் 82:3ஏசா 11:41 கொரி 15:47-48லூக் 18:7-8சங் 17:14லூக் 16:25பிலி 3:18-19

தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும்

ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய

உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.