ஏசாயா 38

Isaiah 38
அத்தியாயம் 38

எசேக்கியாவின் வியாதி

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயிலிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரணமடைவீர் என்று யெகோவா சொல்கிறார் என்றான். 2 நாளாக 32:24ஏசா 38:1-82இராஜா 20:1-112 சாமு 17:23யோனா 3:10அப் 9:37ஏசா 37:21பிலி 2:27-30 அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, யெகோவாவை நோக்கி: மத் 6:61 இராஜா 8:30சங் 50:15சங் 91:15 ஆ யெகோவாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்து, எசேக்கியா மிகவும் அழுதான். எபி 5:7எபி 6:10சங் 18:20-27நெகே 13:142 நாளாக 31:20-212 கொரி 1:12உபா 6:18யோவா 1:47 அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான யெகோவாவுடைய வார்த்தையாவது: நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற யெகோவா சொல்கிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களுடன் பதினைந்து வருடங்கள் கூட்டுவேன். 1 யோவா 5:14-15சங் 34:5-6வெளி 7:17லூக் 1:13சங் 147:3சங் 56:82இராஜா 19:202 கொரி 7:6 நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, இந்த நகரத்திற்கு ஆதரவாயிருப்பேன். ஏசா 37:35ஏசா 12:6ஏசா 31:4-52 நாளாக 32:222 தீமோ 4:17 இதோ, ஆகாசுடைய சூரியக்கடிகாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார். ஏசா 37:30நியாயாதி 6:37-392இராஜா 20:8-21ஏசா 7:11-14நியாயாதி 6:17-22ஆதி 9:13ஏசா 38:22 தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி யெகோவா செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடிகாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துக்கோடுகள் திரும்பிற்று. 2இராஜா 20:9-11யோசு 10:12-142 நாளாக 32:24மத் 16:12 நாளாக 32:31 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கி சுகமாமானபோது எழுதிவைத்ததாவது: 1 சாமு 2:1-102 நாளாக 29:30உபா 32:39யாத் 15:1-21ஓசி 6:1-2ஏசா 12:1-6நியாயாதி 5:1-31யோபு 5:18 நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். 2 கொரி 1:9சங் 102:24யோபு 7:7சங் 107:18ஏசா 38:1யோபு 17:11-16யோபு 6:11 யெகோவாவை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளுடன் இருந்து மனிதர்களை நான் காண்பதில்லை. சங் 27:13சங் 116:8-9பிரச 9:5-6யோபு 35:14-15சங் 31:22சங் 6:4-5 என் ஆயுள் மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்து போகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர். 2 கொரி 5:1எபி 1:12சங் 73:142 கொரி 5:42 பேது 1:13-14ஏசா 1:8ஏசா 13:20யாக் 4:14 விடியற்காலம்வரை நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கத்தைப்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர் என்று சொல்லி, தானி 6:24சங் 51:81 இராஜா 13:24-261 கொரி 11:30-32ஓசி 5:14யோபு 10:16-17யோபு 16:12-14சங் 39:10 நாரையைப்போலவும், தகைவிலான் குருவியைப்போலவும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; யெகோவாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்றேன். ஏசா 59:11சங் 69:3எசேக் 7:16யோபு 30:29நாகூ 2:7சங் 119:122-123சங் 123:1-4யோபு 17:3 நான் என்ன சொல்வேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்; என் ஆயுளின் வருடங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன். 1 இராஜா 21:27யோபு 7:11யோபு 10:11 சாமு 1:102இராஜா 4:27எஸ்றா 9:10யோவா 12:27யோபு 21:25 ஆண்டவரே, இவைகளினால் மனிதர்கள் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னை சுகமடையவும் பிழைக்கவும்செய்தீர். 1 கொரி 11:32எபி 12:10-11மத் 4:4சங் 119:25உபா 8:3ஏசா 64:5யோபு 33:19-282 கொரி 4:17 இதோ, சமாதானத்திற்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர். ஏசா 43:25யோனா 2:6மீகா 7:18-19எரே 31:34சங் 30:3சங் 86:13யோபு 3:25-26சங் 30:6-7 பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. பிரச 9:10சங் 30:9சங் 6:5சங் 115:17-18சங் 88:10-11எண் 16:33லூக் 16:26-31மத் 25:46 நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான். உபா 6:7சங் 119:175உபா 4:9சங் 78:3-6உபா 11:19யாத் 12:26-27யாத் 13:14-15ஆதி 18:19 யெகோவா என்னை காப்பாற்ற வந்தார்; ஆகையால் எங்கள் உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான். சங் 116:2சங் 145:2சங் 150:4ஆப 3:19சங் 116:17-19சங் 27:5-6சங் 30:11-12சங் 33:2 அத்திப்பழத்து அடையைக் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போடுங்கள்; அப்பொழுது பிழைப்பார் என்று ஏசாயா சொல்லியிருந்தான். 2இராஜா 20:7-8யோவா 9:6மாற் 7:33 அப்பொழுது எசேக்கியா: நான் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான். 1 2இராஜா 20:8யோவா 5:14சங் 118:18-19சங் 122:1சங் 42:1-2சங் 84:1-2சங் 84:10-12