தாவீதின் பாடல்.
யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், எபி 13:6சங் 118:6யாத் 15:22 கொரி 12:9சங் 84:11ரோம 8:31யோவா 8:12மீகா 7:7-8
யாருக்குப் பயப்படுவேன்?
யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர்,
யாருக்கு பயப்படுவேன்?
என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க, சங் 118:12சங் 3:7ஏசா 8:15சங் 14:4சங் 22:16சங் 9:3யோபு 19:22யோவா 18:3-6
என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள்.
எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது; சங் 3:61 பேது 3:14ரோம 8:35-37பிலி 1:282 கொரி 5:6-8ஏசா 41:11-12ஏசா 54:16-17வெளி 2:10
என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன்.
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; சங் 26:8சங் 23:6சங் 65:4சங் 84:10சங் 84:4லூக் 10:42சங் 63:2-5எரே 29:13
நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும்,
அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும்,
நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, நீதி 18:10சங் 31:20சங் 138:7சங் 91:1சங் 119:114சங் 50:15சங் 40:2கொலோ 3:3
என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; சங் 3:3எபி 13:152 சாமு 22:49சங் 107:22ஏசா 12:6எபே 5:19-20வெளி 5:9எரே 33:11
அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு,
யெகோவாவைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன்.
யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, சங் 130:2-4சங் 13:3சங் 5:2சங் 4:1சங் 143:1-2
எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும். என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, சங் 105:4எரே 29:12-13ஏசா 55:6-7சங் 119:58சங் 24:6சங் 63:1-2ஓசி 5:15ஏசா 45:19
உம்முடைய முகத்தையே தேடுவேன் யெகோவாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது.
உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்; சங் 69:17சங் 143:7ஏசா 46:3-4சங் 102:22 தீமோ 4:17-18எபி 13:5எரே 32:40சங் 24:5
நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்;
நீரே எனக்கு உதவி செய்பவர்;
என்னுடைய இரட்சிப்பின் தேவனே,
என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும்.
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், ஏசா 49:15ஏசா 40:11யோவா 16:32மத் 10:362 தீமோ 4:16சங் 69:8மத் 10:21-22யோவா 9:35
யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், சங் 25:4-5சங் 5:8சங் 86:11சங் 26:12சங் 143:8-10நீதி 2:6-9சங் 119:10சங் 64:6
என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும்.
என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்; மத் 26:59-60சங் 31:8சங் 35:11சங் 41:11அப் 6:11-13சங் 35:25அப் 9:1யாத் 20:16
பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும்
எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள்.
நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே 2 கொரி 4:16சங் 142:52 கொரி 4:8-14சங் 56:3சங் 31:19சங் 56:13சங் 42:5சங் 116:9-11
யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன் 1.
யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு, ஏசா 40:31சங் 31:24ஏசா 30:18சங் 130:5சங் 37:34பிலி 4:13ஆப 2:3எபே 6:10
அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார்,
கர்த்தருக்கே காத்திரு.