மாற்கு 5

Mark 5
அத்தியாயம் 5

அசுத்தஆவிகள் பிடித்திருந்த மனிதனை சுகப்படுத்துதல்

பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையில் உள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தார்கள். லூக் 8:26-39மத் 8:28-34மாற் 4:35 அவர் படகில் இருந்து இறங்கினவுடனே, அசுத்தஆவியுள்ள ஒரு மனிதன் கல்லறைகளில் இருந்து அவருக்கு எதிராகவந்தான். மாற் 1:23ஏசா 65:4மாற் 5:8லூக் 9:42லூக் 8:27மாற் 1:26மாற் 3:30மாற் 4:1 அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான்; அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை. ஏசா 65:4லூக் 8:29தானி 4:32-33மாற் 9:18-22 அவன் பலமுறை விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டும், சங்கிலிகளைத் தகர்த்து, விலங்குகளை உடைத்துப்போடுவான்; அவனை அடக்க ஒருவனுக்கும் முடியவில்லை. யாக் 3:7-8 அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, சத்தம்போட்டு, கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான். 1 இராஜா 18:28யோபு 2:7-8யோவா 8:44 அவன் இயேசுவைத் தூரத்திலே பார்த்தபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு: யாக் 2:19சங் 66:3லூக் 4:41சங் 72:9அப் 16:17 இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தவேண்டாம் என்று தேவனுடைய பெயரில் உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். மத் 8:29அப் 16:17யூதா 1:6மத் 26:63அப் 19:13லூக் 8:28மத் 4:3மாற் 3:11 ஏனென்றால், அவர் அவனைப் பார்த்து: அசுத்தஆவியே, இந்த மனிதனைவிட்டு வெளியே போ என்று சொல்லியிருந்தார். அப் 16:18மாற் 1:25மாற் 9:25-26 அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகர் இருப்பதினால் என் பெயர் லேகியோன் என்று சொல்லி, லூக் 8:30மாற் 5:15மத் 26:53லூக் 11:21-26மத் 12:45 தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடவேண்டாம் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான். மாற் 3:22மாற் 5:13 அப்பொழுது, அந்த இடத்தில் மலையின் அருகில் அநேக பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. உபா 14:8ஏசா 65:4ஏசா 66:3லேவி 11:7-8லூக் 8:32மத் 8:30 அந்தப் பிசாசுகள் அவரைப் பார்த்து: பன்றிகளுக்குள்ளே போக, அவைகளுக்குள் எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. 1 பேது 5:82 கொரி 2:11யோபு 1:10-12லூக் 22:31-32யோபு 2:5 இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்தஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போனது; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்துபோனது. 1 இராஜா 22:221 பேது 3:22யோவா 8:44யோபு 2:6மத் 8:32யோபு 1:12வெளி 13:5-7வெளி 20:7 பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது நடந்தவைகளைப் பார்ப்பதற்காக மக்கள் புறப்பட்டு; லூக் 8:34மத் 8:33 இயேசுவிடம் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் புத்தி தெளிந்து, உடை அணிந்து, உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பயந்தார்கள். கொலோ 1:132 தீமோ 1:71 சாமு 6:20-211 சாமு 16:4ஏசா 49:24-25லூக் 8:27மாற் 5:91 நாளாக 15:13 பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் நடந்தவைகளைப் பார்த்தவர்களும் அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்கள். அப்பொழுது தங்களுடைய எல்லைகளைவிட்டுப் போகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். மத் 8:34மாற் 1:24லூக் 8:37அப் 16:39ஆதி 26:16யோபு 21:14-15லூக் 5:8மாற் 5:7 அப்படியே அவர் படகில் ஏறும்பொழுது, பிசாசு பிடித்திருந்தவன், இயேசுவோடு வருவதற்கு தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான். லூக் 8:38-39பிலி 1:23-24மாற் 5:17லூக் 23:42-43மாற் 5:7சங் 116:12லூக் 17:15-17 இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்காமல்: நீ உன் குடும்பத்தாரிடம் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு மனமிறங்கி, உனக்குச் செய்தவைகளை எல்லாம் அவர்களுக்குச் சொல் என்று சொன்னார். சங் 66:16யோவா 4:29தானி 4:1-3தானி 6:25-27ஏசா 38:9-20அப் 22:1-21அப் 26:4-29தானி 4:37 அப்படியே அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளை எல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தப்படுத்தினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். மத் 4:25மாற் 7:31

மரித்த சிறுமியும், வியாதியுள்ள பெண்ணும்

இயேசு படகில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்தில் இருந்தபோது, அநேக மக்கள் அவரிடம் கூடிவந்தார்கள். மத் 9:1மாற் 4:1லூக் 8:40 அப்பொழுது, ஜெப ஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: லூக் 13:14அப் 13:15அப் 18:17அப் 18:8மாற் 5:35-36லூக் 5:8மத் 9:18-26மாற் 5:33 என் மகள் மரணவேதனைப்படுகிறாள், அவள் சுகமடைய, நீர் வந்து, அவள்மேல் உமது கரங்களை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான். லூக் 13:13லூக் 4:40மாற் 16:18அப் 28:82இராஜா 5:112 சாமு 12:15-16யாக் 5:14-15லூக் 4:38 அவர் அவனோடுகூட போனார். அநேக மக்கள் அவருக்குப் பின்னேசென்று, அவரை நெருக்கினார்கள். மாற் 5:31லூக் 7:6மாற் 3:20மாற் 3:9-10அப் 10:38லூக் 12:1லூக் 19:3லூக் 8:42 அப்பொழுது பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே அவதிப்பட்ட ஒரு பெண், லேவி 15:25-27லூக் 8:43-44மத் 9:20-22லேவி 15:19-20யோவா 5:5-6லூக் 13:11அப் 4:22அப் 9:33-34 அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது, எரே 30:12-13எரே 8:22யோபு 13:4சங் 108:12எரே 51:8 இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகம் பெறுவேன் என்று சொல்லி; அப் 19:12அப் 5:15மத் 14:36மாற் 6:562இராஜா 13:21 மக்கள் கூட்டத்தின் உள்ளே அவருக்குப் பின்பக்கத்தில் வந்து, அவருடைய ஆடையைத் தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது; அந்த வேதனை நீங்கி சுகம் பெற்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். மாற் 5:34மாற் 3:10சங் 103:3சங் 30:2யாத் 15:26சங் 107:20சங் 147:31 இராஜா 8:37 உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து, மக்கள்கூட்டத்தில் திரும்பி: என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார். லூக் 6:19லூக் 8:46லூக் 5:171 பேது 2:9 அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். லூக் 8:45லூக் 9:12 இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள். லூக் 8:47லூக் 1:12லூக் 1:29மாற் 4:41சங் 103:2-5சங் 116:12-14சங் 30:2சங் 66:16 அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடு போய், உன் வேதனை நீங்கி, சுகமாக இரு என்றார். லூக் 8:48மத் 9:22லூக் 7:50லூக் 18:42மாற் 5:29அப் 14:9லூக் 17:19மத் 9:2 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய மகள் மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறாய் என்றார்கள். யோவா 11:39லூக் 8:49யோவா 11:28யோவா 5:25லூக் 7:6-7மாற் 10:17மாற் 5:22யோவா 11:21 அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத்தலைவனைப் பார்த்து: பயப்படாதே, விசுவாசம் உள்ளவனாக இரு என்று சொல்லி; லூக் 8:50மத் 9:28-29யோவா 11:40மாற் 9:23ரோம 4:18-24மாற் 5:34யோவா 4:48-502 நாளாக 20:20 வேறுயாரையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளாமல், பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோனார்; அப் 9:40மாற் 14:332 கொரி 13:1மாற் 9:2லூக் 8:51 ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிற்கு வந்து, அங்கே சத்தமிடுகிற மக்களையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, லூக் 8:52-53மத் 9:23-24அப் 9:39எரே 9:17-20மத் 11:17மாற் 5:22 உள்ளே சென்று: நீங்கள் சத்தமிட்டு அழுகிறது ஏன்? பிள்ளை மரிக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அப் 20:101 தெச 5:101 கொரி 11:301 தெச 4:13-14தானி 12:2யோவா 11:11-13 அதற்காக அவரைப் பார்த்து சிரித்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடு வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளை இருந்த அறைக்குள் சென்று, நெகே 2:192இராஜா 4:33அப் 17:32ஆதி 19:14யோபு 12:4லூக் 16:14லூக் 8:53-54மத் 7:6 பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு; சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம். மாற் 1:31லூக் 7:14-15யோவா 5:28-29லூக் 8:54-55அப் 9:40-41பிலி 3:21ஆதி 1:3யோவா 11:43-44 உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாக இருந்தாள். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். அப் 3:10-13மாற் 1:27மாற் 4:41மாற் 6:51மாற் 7:37 அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னார். மத் 8:4மாற் 7:36மத் 9:30மாற் 1:43யோவா 5:41லூக் 5:14லூக் 8:56மத் 12:16-18