விதைக்கிறவனின் உவமை
பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பயணம்செய்து, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைச் சொல்லி பிரசங்கித்து வந்தார். பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள். மத் 4:23ரோம 10:15அப் 10:38அப் 13:32மத் 9:35ஏசா 61:1-3லூக் 2:10-11லூக் 4:18 பொல்லாத ஆவிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் விடுவித்து சுகமாக்கப்பட்ட சில பெண்களும், ஏழு பிசாசுகளின் தொல்லையிலிருந்து விடுதலைபெற்ற மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும், மாற் 16:9மத் 27:55-56மாற் 15:40-41யோவா 19:25அப் 1:14லூக் 23:27லூக் 23:49லூக் 23:55 ஏரோதின் மேலாளரான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்களுடைய ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டுவந்த பல பெண்கள் அவரோடு இருந்தார்கள். 2 கொரி 8:9அப் 9:36-39பிலி 4:221 தீமோ 5:10யோவா 4:46-531 நாளாக 29:14ஏசா 23:18மத் 2:11 எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மக்கள்கூட்டம் அவரிடத்தில் வந்தவுடன், அவர் உவமையாகச் சொன்னது: மாற் 4:1-9மத் 13:2-9 விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைச் சாப்பிட்டுச் சென்றன. எபி 2:1யாக் 1:23-24மாற் 4:15லூக் 8:11-12ஆதி 15:11மாற் 4:26-29மத் 13:18-19மத் 13:24-26 சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோனது. எபி 3:7-8லூக் 8:13மாற் 4:5-6ரோம 2:4-5ஆமோ 6:12எசேக் 36:26எபி 3:15எரே 5:3 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. எரே 4:3லூக் 8:14ஆதி 3:18எபி 6:7-8லூக் 21:34மத் 13:22மத் 13:7மாற் 4:18-19 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கூறினார். மத் 11:15வெளி 2:11வெளி 2:7மத் 13:23மத் 13:8-9மாற் 4:20மாற் 4:8நீதி 20:12 அப்பொழுது அவருடைய சீடர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள். மத் 13:10மத் 13:18மாற் 4:10ஓசி 6:3யோவா 15:15மத் 13:36மத் 15:15மாற் 4:34 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, ஏசா 6:9மாற் 4:11மத் 11:25எரே 5:21ஏசா 44:18மத் 13:11-17அப் 28:26-27கொலோ 2:2
அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,
கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக,
அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. “அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம். 1 பேது 1:23-25மத் 13:19மாற் 4:14-20யாக் 1:211 கொரி 3:6-71 கொரி 3:9-12ஏசா 8:20 வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான். 2 தெச 2:9-14மத் 13:19வெளி 12:9மாற் 4:15நீதி 1:24-26யாக் 1:23-24நீதி 4:5ஏசா 65:11 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமட்டும் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள். ஓசி 6:4யோவா 5:35நீதி 12:122 பேது 2:22எசேக் 33:32யூதா 1:121 கொரி 15:22 பேது 2:20 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடுக்காமல் இருக்கிறார்கள். 1 யோவா 2:15-171 தீமோ 6:9-101 தீமோ 6:17லூக் 21:34மத் 13:22மத் 6:24-25மாற் 4:19லூக் 8:7 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். எபி 10:36கலா 5:22-26கொலோ 1:10லூக் 6:451 யோவா 2:3கொலோ 1:6யாக் 1:22-25யோவா 14:15
விளக்குத்தண்டின்மேல் உள்ள விளக்கு
ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடிவைக்கமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவும் மாட்டான்; உள்ளே நுழைகிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான். லூக் 11:33மத் 5:15-16மாற் 4:21-22அப் 26:18பிலி 2:15-16வெளி 1:20வெளி 11:4 வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளியேவராத மறைபொருளுமில்லை. லூக் 12:2-3மத் 10:26மாற் 4:22பிரச 12:141 கொரி 4:5 ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்றார். மத் 13:12லூக் 19:26மாற் 4:23-25மத் 25:29நீதி 2:2-5எபி 2:1யோவா 15:21 கொரி 14:37
இயேசுவின் தாயாரும், சகோதரர்களும்
அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் வந்தார்கள் மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது, ஆதலால் அவர் அருகில் செல்லமுடியாமல் இருந்தது. மத் 12:46-50மாற் 3:21மாற் 3:31-35 அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள். 1 கொரி 9:5அப் 1:14கலா 1:19யோவா 7:3-6மத் 13:55-56மாற் 6:3 அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக்கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரர்களுமாக இருக்கிறார்கள் என்றார். லூக் 11:27-28யாக் 1:22யோவா 13:171 யோவா 2:293 யோவா 1:11எபி 2:11-132 கொரி 6:18யோவா 15:14-15
இயேசு காற்றையும் கடலையும் அதட்டுதல்
பின்பு ஒருநாள் அவர் தமது சீடர்களோடு படகில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள். மத் 8:23-27மாற் 4:35-41மாற் 6:45லூக் 5:1லூக் 8:23மத் 14:22மாற் 8:13யோவா 6:1 படகில் பயணம்செய்துகொண்டு இருக்கும்போது இயேசு தூங்கிவிட்டார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்களுடைய படகு தண்ணீரினால் நிறைந்து ஆபத்து ஏற்பட்டது. ஏசா 54:11சங் 93:3-4அப் 27:14-20ஏசா 51:9-10லூக் 8:22சங் 107:23-30சங் 124:2-4சங் 148:8 அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, சாகப்போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் தண்ணீரின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டானது. லூக் 4:39சங் 107:25-292 கொரி 1:9-10லூக் 5:5சங் 104:6-9எரே 5:22யோவா 2:2-6நாகூ 1:4 அவர் அவர்களை நோக்கி: உங்களுடைய விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். மத் 8:26மாற் 4:40-41நீதி 30:4யோவா 11:40மத் 14:31ஆதி 1:9-10லூக் 12:28மத் 17:20
இயேசு பிசாசு பிடித்தவனை சுகமாக்குதல்
பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள். மாற் 5:1-20மத் 8:28-34 அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாகப் பிசாசுகள் பிடித்தவனும், ஆடையணியாதவனும், வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவனுமாக இருந்த அந்தப் பட்டணத்து மனிதன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான். மாற் 5:2-51 சாமு 19:24எண் 19:16ஏசா 65:4 அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தமாகச் சொன்னான். மத் 8:292 பேது 2:41 யோவா 3:8அப் 16:16-18ஏசா 27:1யாக் 2:19லூக் 4:33-36லூக் 8:37-38 அந்த அசுத்தஆவி அவனைவிட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி பலகாலமாக அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். 2 தீமோ 2:25-26அப் 19:12-16லூக் 9:39லூக் 9:42மாற் 5:3-5மாற் 5:8மாற் 9:20-26 இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான். மத் 26:53லூக் 8:2மத் 8:29மாற் 16:9மாற் 5:9 தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. மத் 25:41யோபு 1:11யோபு 2:5லூக் 8:28பிலி 2:10-11வெளி 11:7வெளி 17:8வெளி 19:20 அந்த இடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார். ஏசா 65:4ஏசா 66:31 யோவா 4:41 இராஜா 22:22யோவா 19:11யோபு 1:10யோபு 1:12யோபு 2:6 அப்படியே பிசாசுகள் அந்த மனிதனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மரித்தன. 1 பேது 5:8யோவா 8:44லூக் 8:22-23வெளி 9:11 அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். மாற் 5:14அப் 19:16-17மத் 28:11மத் 8:33 அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி மக்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனிதன் ஆடை அணிந்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். லூக் 10:391 யோவா 3:8அப் 22:3சங் 51:10எபி 2:14-15ஏசா 53:12லூக் 8:27ஏசா 49:24-25 பிசாசுகள் பிடித்திருந்தவன் சுகமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள். மத் 4:24 அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் எல்லோரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படகில் ஏறி, திரும்பிப்போனார். அப் 16:39லூக் 5:81 இராஜா 17:181 சாமு 6:20உபா 5:25யோபு 21:14-15லூக் 10:10-11லூக் 10:16 பிசாசுகள் நீங்கின மனிதன் அவரோடுகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். அப் 9:13-16மாற் 5:18-20சங் 145:3-121 தீமோ 1:13-16உபா 10:20-21யாத் 12:25-27யாத் 13:14-16யாத் 13:8-9 இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் சொல் என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். 1 தீமோ 5:8யோவா 4:29லூக் 17:15-18உபா 10:21தானி 4:1-3தானி 4:34-37மாற் 1:45சங் 126:2-3
மரித்த சிறுமியும் வியாதியுள்ள பெண்ணும்
இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். மத் 9:1மாற் 5:21மாற் 6:20அப் 10:33யோவா 5:35லூக் 19:37-38லூக் 19:48லூக் 19:6 அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பெயருள்ள ஒருவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே மகள் மரணவேதனையில் இருந்தபடியால், மாற் 5:22-43அப் 13:15அப் 18:8லூக் 13:14லூக் 8:49அப் 18:17அப் 9:38யோவா 4:46-49 தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகும்பொழுது மக்கள்கூட்டம் அவரை நெருக்கினார்கள். லூக் 7:12லூக் 8:45மாற் 5:24பிரச 6:12எசேக் 24:16எசேக் 24:25ஆதி 44:20-22யோபு 1:18-19 அப்பொழுது பன்னிரண்டு வருடமாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சுகமாக்கப்படாமலிருந்த ஒரு பெண், மாற் 5:25-26மத் 9:20-22லேவி 15:25-33லூக் 13:162 நாளாக 16:12மாற் 9:21-22ஏசா 2:22ஏசா 55:1-3 அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது. மாற் 5:27-28உபா 22:12அப் 19:12மல்கி 4:2யாத் 15:26யோவா 5:13லூக் 13:13லூக் 7:38 அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லோரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். லூக் 9:13லூக் 5:5மாற் 5:30-32 அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். லூக் 6:19லூக் 5:171 பேது 2:9 அப்பொழுது அந்த பெண் தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா மக்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். மாற் 5:331 கொரி 2:3லூக் 17:15-161 சாமு 16:42 கொரி 7:15அப் 16:29எபி 12:28ஆப 3:16 அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார். லூக் 7:50மத் 9:22எபி 4:2அப் 14:9லூக் 17:19மாற் 5:341 சாமு 1:172 கொரி 6:18 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய மகள் மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான். மாற் 5:35-43ஏசா 7:12லூக் 7:6லூக் 11:7லூக் 8:41-43மத் 9:23-26 இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். யோவா 11:40யோவா 11:25மாற் 5:36மாற் 11:22-24லூக் 8:48ரோம 4:17ஏசா 50:10மாற் 9:23 அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல், 1 இராஜா 17:19-232இராஜா 4:4-6ஏசா 42:2லூக் 9:28மத் 6:5-6மாற் 14:33அப் 9:40லூக் 6:14 எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார். யோவா 11:4லூக் 23:272 சாமு 18:33யாத் 24:17ஆதி 23:2ஆதி 27:34-35எரே 9:17-21யோவா 11:11-13 அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஏசா 53:3லூக் 16:14யோவா 11:39யோவா 19:33-35யோபு 12:4யோபு 17:2மாற் 15:44-45சங் 22:7 எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். எரே 31:32அப் 9:40யோவா 11:43யோவா 5:21யோவா 5:28-29லூக் 7:14-15லூக் 8:51மத் 9:25 அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார். யோவா 11:441 இராஜா 17:21-23லூக் 24:41-43மாற் 5:43 அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மத் 8:4மத் 9:30லூக் 5:14மாற் 5:42-43