மத்தேயு 13

Matthew 13
அத்தியாயம் 13

விதைப்பவனைப்பற்றிய உவமை

இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார். லூக் 8:4-10மத் 13:1-15மாற் 4:1-12மத் 13:36மத் 9:28மாற் 2:13 திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள். லூக் 5:3ஆதி 49:10லூக் 8:4-8மத் 15:30மத் 4:25மாற் 4:1 அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். மாற் 4:2-9மாற் 4:13சங் 78:22 சாமு 12:1-7எசேக் 24:3-14மத் 13:10-13மத் 13:34-35மத் 13:53 அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன. மத் 13:18-19 சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன. எசேக் 36:26எசேக் 11:19சகரி 7:12ஆமோ 6:12மத் 13:20 வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயின. யாக் 1:11-12மத் 13:21லூக் 8:13கொலோ 1:23எபே 3:17ஏசா 49:10கொலோ 2:7மத் 7:26-27 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது. மாற் 4:18-19எரே 4:3-4ஆதி 3:18மத் 13:22 சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன, சில விதைகள் நூறாகவும், சில விதைகள் அறுபதாகவும், சில விதைகள் முப்பதாகவும் பலன் தந்தன. யோவா 15:8லூக் 8:15ஆதி 26:12மத் 13:23கலா 5:22-23பிலி 1:11ரோம 7:18 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார். மத் 11:15வெளி 2:11வெளி 2:7வெளி 2:17மத் 13:16மாற் 4:23மாற் 4:9மாற் 7:14-15 அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள். மாற் 4:33-34மாற் 4:10 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. 1 கொரி 2:9-101 கொரி 2:14மத் 19:11யாக் 1:51 யோவா 2:271 யோவா 2:20கொலோ 1:26-27எபே 1:9 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். மத் 25:29மாற் 4:24-25லூக் 8:18லூக் 19:24-26யோவா 15:2-5மத் 21:43வெளி 2:5ஏசா 5:4-7 அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன். எசேக் 12:2எரே 5:21ஏசா 42:18-202 கொரி 4:3-4உபா 29:3-4யோவா 3:19-20மத் 13:16ஏசா 44:18 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: ஏசா 6:9-10எசேக் 12:22 கொரி 3:14லூக் 8:10அப் 28:25-27மாற் 4:12யோவா 12:39-40ரோம 11:8-10

காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்;

கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

இந்த மக்கள் கண்களினால் காணாமலும், ஏசா 6:10மாற் 4:12சகரி 7:11யோவா 8:43-442 தீமோ 2:25-26ஏசா 29:10-12எரே 17:14மல்கி 4:2

காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும்,

நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக,

அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது;

காதால் மந்தமாகக் கேட்டு,

தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே.

உங்களுடைய கண்கள் காண்கிறதினாலும், உங்களுடைய காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். லூக் 10:23-24எபே 1:17-18மத் 16:17யோவா 20:29அப் 26:182 கொரி 4:6லூக் 2:29-30மத் 5:3-11 அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவா 8:56எபி 11:131 பேது 1:10-12லூக் 10:24எபே 3:5-6எபி 11:39-40 ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். லூக் 8:11-15மத் 13:11-12மாற் 4:13-20 ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். லூக் 8:11-15எபி 2:1மத் 13:381 யோவா 5:18மத் 4:231 யோவா 3:12நீதி 2:1-61 யோவா 2:13-14 கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்; எசேக் 33:31-32சங் 106:12-13யோவா 5:352 நாளாக 24:2ஏசா 58:2சங் 78:34-371 சாமு 11:13-152 நாளாக 24:14 ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். மத் 11:62 பேது 1:8-9எபே 3:17ஓசி 6:4யோவா 15:5-7யோபு 19:28நீதி 12:3யோவா 12:25-26 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். 1 தீமோ 6:17லூக் 8:141 தீமோ 6:9-10மாற் 4:18-19லூக் 12:152 தீமோ 4:10பிரச 5:10-111 யோவா 2:15-16 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார். பிலி 1:11மத் 12:33யோவா 15:16கலா 5:22-23யோவா 15:1-8மத் 13:8சங் 92:13-15கொலோ 1:6

நல்ல விதைகளும், களைகளும்

வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது. மத் 25:1மத் 13:47மத் 20:1மத் 22:2மத் 13:37லூக் 13:20லூக் 13:18மத் 13:33 மனிதர்கள் தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். 1 பேது 5:82 பேது 2:1அப் 20:30-31மத் 13:39எபி 12:15வெளி 12:9மத் 25:52 கொரி 11:13-15 பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. மாற் 4:26-29 வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். ரோம 16:172 கொரி 6:12 கொரி 5:18-201 கொரி 12:28-291 கொரி 16:102 கொரி 6:41 கொரி 1:11-131 கொரி 15:12-34 அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்கள்: நாங்கள்போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள். 1 கொரி 5:3-71 தெச 5:14லூக் 9:49-542 கொரி 2:6-11யூதா 1:22-23 அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களைப் பார்த்து: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். மத் 3:121 தீமோ 5:241 கொரி 4:5யோவா 15:6மல்கி 3:18மத் 13:39-43மத் 25:32லூக் 3:17

கடுகுவிதை, புளித்த மாவுபற்றிய உவமைகள்

வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். லூக் 13:18-19மத் 17:20மாற் 4:30-32லூக் 17:6மத் 13:24லூக் 20:9லூக் 19:11 அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார். எசேக் 31:6தானி 4:12எசேக் 17:23-24அப் 21:20தானி 2:44-45ரோம 15:18-19சகரி 8:20-23தானி 2:34-35 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார். கலா 5:91 கொரி 5:6-7லூக் 13:21பிலி 2:13-15ஆதி 18:6நீதி 4:18யோபு 17:9மத் 13:24 இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார்; உவமைகளில்லாமல், அவர்களோடு பேசவில்லை. யோவா 16:25மாற் 4:33-34மத் 13:13 என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. சங் 78:2எபே 3:91 பேது 1:20-21ரோம 16:25-261 கொரி 2:7யோவா 17:24ஆமோ 3:7கொலோ 1:25-26

களைகளைப்பற்றிய விளக்கம்

அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள். யோவா 16:17-20மத் 13:11மத் 13:1மத் 15:15-16மத் 9:28மாற் 6:45மாற் 7:17மாற் 8:9 அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்; 1 கொரி 3:5-7அப் 1:8லூக் 10:16மத் 13:24மத் 13:27மத் 13:41யோவா 13:20யோவா 20:21 நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்; யோவா 8:44அப் 13:10பிலி 3:18-191 யோவா 3:8-101 பேது 1:23ஆதி 3:15யாக் 1:18மத் 13:19 அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். மத் 13:49வெளி 14:15-19மத் 25:31யோவே 3:13வெளி 19:202 தெச 1:7-10மத் 13:25மத் 24:3 ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். மத் 13:39 மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து, மத் 24:312 பேது 2:1-2மத் 18:7வெளி 21:27எபி 1:14எபி 1:6-7மத் 13:49வெளி 5:11-12 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். மத் 13:50லூக் 16:23-24மத் 8:12வெளி 20:10வெளி 20:14-15வெளி 19:20தானி 3:6மாற் 9:43-49 அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும். தானி 12:3லூக் 12:321 கொரி 15:41-54மத் 11:15மத் 25:34வெளி 21:22-23வெளி 21:3-5யாக் 2:5

புதையல், முத்துக்கள்பற்றிய உவமைகள்

அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான். நீதி 2:2-5கொலோ 2:3பிலி 3:7-9மத் 6:21லூக் 14:33எபி 11:24-26மத் 19:29நீதி 16:16 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது. நீதி 8:10-11மத் 16:26நீதி 3:13-18யோபு 28:18மத் 13:24நீதி 8:18-20பிரச 12:13மத் 22:5 அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான். லூக் 18:28-30எபே 3:8அப் 20:24கொலோ 2:3மத் 13:44நீதி 2:41 கொரி 3:21-231 யோவா 5:11-12

வலையைப்பற்றிய உவமை

அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது. யோவா 15:62 தீமோ 3:2-5மத் 22:9-101 யோவா 4:1-62 தீமோ 4:3-4மாற் 1:171 கொரி 10:1-122 கொரி 12:20-21 அது நிறைந்தபோது, மீனவர்கள் அதைக் கரைக்கு இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துவிடுவார்கள். மத் 13:30மத் 3:12மத் 13:40-43 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, வெளி 20:12-15மத் 13:39மத் 24:312 தெச 1:7-10மத் 22:12-14மத் 25:19-33மத் 25:5-12 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார். லூக் 13:27-28வெளி 14:10-11மத் 13:42மத் 8:12மத் 24:50-51வெளி 16:10-11 பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள். மாற் 4:34மத் 13:11மத் 13:191 யோவா 5:20அப் 8:30-31லூக் 9:44-45மத் 15:17மத் 16:11 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இப்படி இருக்கிறபடியால், பரலோகராஜ்யத்திற்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபண்டிதன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான் என்றார். 1 யோவா 2:7-8தீத் 1:92 தீமோ 3:16-172 கொரி 3:4-6மத் 12:35தீத் 2:6-71 தீமோ 3:15-16எஸ்றா 7:10

சொந்த ஊரில் இயேசு

இயேசு இந்த உவமைகளைச் சொல்லிமுடித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு, மத் 7:28மாற் 4:33-35 தாம் வளர்ந்த ஊருக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? யோவா 7:15-16மத் 7:28மாற் 6:1-6லூக் 4:16-30மத் 2:23மத் 4:23சங் 22:22அப் 13:46 இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா? யோவா 6:42மாற் 6:3லூக் 3:23லூக் 4:22மாற் 15:47கலா 1:19யோவா 19:25லூக் 24:10 இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார். யோவா 4:44லூக் 4:24மத் 11:6ஏசா 53:3ஏசா 49:7யோவா 6:611 கொரி 1:23-28அப் 7:51-52 அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை. மாற் 6:5-6ரோம 11:20எபி 3:12-19லூக் 4:25-29எபி 4:6-11