தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, உலகமெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது. எசேக் 12:151 பேது 1:1யோவா 7:35அப் 8:1அப் 26:7அப் 15:13அப் 15:23உபா 28:64
சோதனைகளும் விசுவாசத்தின் பரீட்சையும்
என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது, 1 பேது 1:6-8யாக் 1:122 கொரி 12:9-10மத் 5:10-12லூக் 6:22-23பிலி 1:292 பேது 2:9ரோம 8:17-18 உங்களுடைய விசுவாசத்தின் பரீட்சையானது சகிப்புத்தன்மையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். ரோம 5:3-4எபி 10:36கொலோ 1:112 கொரி 4:17ரோம 8:281 பேது 1:72 பேது 1:6ரோம 15:4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும். 1 பேது 5:10லூக் 21:19மத் 5:482 தீமோ 3:17கலா 6:9எபி 13:21யாக் 5:7-11ஆப 2:3 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். நீதி 2:3-6யோவா 15:7எரே 29:12-13நீதி 3:5-71 யோவா 5:14-152 நாளாக 1:10மத் 7:7-11யாக் 3:17 ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான். மத் 21:21-22எபி 11:6மாற் 11:22-24எபே 4:14எபி 10:23எபி 13:91 தீமோ 2:82 பேது 2:17 அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக. யாக் 4:3நீதி 15:8ஏசா 1:15ஏசா 58:3-4நீதி 21:27 ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான். 1 இராஜா 18:21மத் 6:24யாக் 4:8ஏசா 29:132 பேது 2:142இராஜா 17:412 பேது 3:162இராஜா 17:33
ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும். எரே 9:23-24யாக் 2:5-6நீதி 19:12 கொரி 6:10சங் 113:7-8சங் 62:9வெளி 2:9லூக் 1:52 ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான். 1 பேது 1:241 யோவா 2:17யோபு 14:21 தீமோ 6:17மத் 5:3சங் 103:15ஏசா 40:6யாக் 4:14 சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் அழிந்துபோவான். ஏசா 40:7-8சங் 37:35-36லூக் 16:19-25மாற் 4:6யாக் 5:1-7சங் 49:6-14லூக் 12:16-21மத் 13:6 சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்தபின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான். 1 பேது 5:101 பேது 1:6-8வெளி 2:10யாக் 5:11ரோம 8:28மத் 10:221 கொரி 9:252 தீமோ 4:8 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் இருப்பானாக; தேவன் தீமைகளினால் சோதிக்கப்படுகிறவர் இல்லை, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் இல்லை. யாக் 1:12ஆப 2:12-13ரோம 9:19-20ஆதி 3:12யாக் 1:2ஏசா 63:17 அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். மாற் 7:21-22எபே 4:22மத் 15:18எபி 3:13நீதி 4:23ரோம 7:13யாக் 4:1-2மத் 5:28 பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும். சங் 7:14யோபு 15:35ரோம 5:12-21ஆதி 2:17ஏசா 59:4ஆதி 3:6ரோம 6:21-23மீகா 2:1-3 என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம். கலா 6:7யாக் 1:19கொலோ 2:8கொலோ 2:4எபி 13:1பிலி 2:121 கொரி 6:92 தீமோ 2:18 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை. யோவா 3:27மத் 7:11எபி 13:8யோவா 8:12எண் 23:19சங் 84:111 யோவா 1:5நீதி 2:6 அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார். ரோம 8:29-311 பேது 1:23யோவா 3:3-5யோவா 1:131 பேது 1:32 தெச 2:13-14எபே 2:4-5வெளி 14:4
வசனத்தின்படி செய்தல்
ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்; நீதி 17:27நீதி 21:23நீதி 14:29நீதி 10:19நீதி 18:13நீதி 13:3எபே 4:26நீதி 16:32 மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. 2 தீமோ 2:24-25எபே 4:26யாக் 3:17-18எண் 20:11-12 ஆகவே, நீங்கள் எல்லாவித பாவமான அசுத்தங்களையும் கொடிய தீயகுணத்தையும் அகற்றிவிட்டு, உங்களுடைய உள்ளத்தில் நாட்டப்பட்டதாகவும், உங்களுடைய ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும் இருக்கிற திருவசனத்தைச் சாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள். எபே 4:221 பேது 2:11எபே 1:13யோவா 6:63சங் 25:9கொலோ 3:5-81 பேது 2:1எபி 12:1 அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள். ரோம 2:13லூக் 6:46-48யோவா 13:17யாக் 4:171 யோவா 2:3லூக் 11:28யாக் 2:14-20மத் 12:50 ஏனென்றால், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாக இருப்பான்; மத் 7:26-27யாக் 2:14-26எசேக் 33:31-32லூக் 6:47எரே 44:16லூக் 6:7 அவன் தன்னைத்தானே பார்த்து, அந்த இடத்தைவிட்டுப் போனவுடனே, தன் சாயல் என்னவென்பதை மறந்துவிடுவான். 2 பேது 3:11லூக் 1:66லூக் 7:391 தெச 1:5நியாயாதி 8:18மத் 8:27 ஆனால், சுதந்திரம் கொடுக்கிற பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவன் கேட்கிறதை மறக்கிறவனாக இல்லாமல், அதைச் செய்கிறவனாக இருப்பதினால் அவன் பாக்கியவானாக இருப்பான். லூக் 11:28யோவா 13:172 கொரி 3:17-181 பேது 2:16லூக் 6:47-49கலா 5:1யாக் 2:12யோவா 8:31-32 உங்களில் ஒருவன் தன் நாக்கை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றி, தன்னை தேவபக்தியுள்ளவனென்று நினைத்தால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். எபே 4:29சங் 141:31 பேது 3:10எபே 5:4நீதி 19:1சங் 34:13நீதி 10:31நீதி 10:19 திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற பாடுகளிலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுவதே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக குற்றமில்லாத சுத்தமான பக்தியாக இருக்கிறது. ஏசா 1:16-171 யோவா 3:17-19கலா 6:9-10ரோம 12:2மத் 25:34-46ஏசா 58:6-71 யோவா 2:15-17யோபு 31:15-20