மத்தேயு 15

Matthew 15
அத்தியாயம் 15

யூதர்களும் பாரம்பரியமும்

அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து: அப் 23:9லூக் 5:21லூக் 5:30மத் 23:2மத் 5:20மாற் 3:22லூக் 5:17மாற் 7:1-23 உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள். லூக் 11:38மாற் 7:2கொலோ 2:20-23கொலோ 2:8மாற் 7:51 பேது 1:18ஆதி 1:14 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? கொலோ 2:23தீத் 1:14கொலோ 2:8மாற் 7:6-8மத் 7:3-5மாற் 7:13 உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே. யாத் 20:12யாத் 21:17லேவி 20:9உபா 21:18-21உபா 5:16நீதி 23:22லேவி 19:3மத் 19:19 நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து, மாற் 7:10-13அப் 5:29மத் 23:16-18அப் 4:19ஆமோ 7:15-17லேவி 27:9-34நீதி 20:25 உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள். 1 தீமோ 5:8எரே 8:8மாற் 7:13சங் 119:1261 தீமோ 5:161 தீமோ 5:3-4ஓசி 4:6மல்கி 2:7-9 மாயக்காரர்களே, உங்களைக்குறித்து: மாற் 7:6மத் 23:23-29அப் 28:25-27மத் 7:5

இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, ஏசா 29:13எசேக் 33:31அப் 8:211 பேது 3:10எரே 12:2எபி 3:12நீதி 23:26யோவா 1:47

தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்;

அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;

மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, ஏசா 29:13மாற் 7:71 தீமோ 1:4தீத் 1:14கொலோ 2:18-221 தீமோ 4:6-7எபி 13:9ஏசா 58:1-3

வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”

பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள். மாற் 7:14-15கொலோ 1:9லூக் 20:45-47லூக் 24:451 இராஜா 22:28ஏசா 55:3ஏசா 6:9மத் 13:19 வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார். மாற் 7:15மத் 15:18-20யாக் 3:5-81 தீமோ 4:4-5மத் 12:34-37அப் 10:14-15ரோம 14:17லூக் 11:38-41 அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள். 1 கொரி 10:32-331 இராஜா 22:13-142 கொரி 6:3கலா 2:5யாக் 3:17மத் 17:27 அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும். யோவா 15:2ஏசா 60:21யோவா 15:6ஏசா 61:3சங் 92:13மத் 13:40-411 கொரி 3:12-151 கொரி 3:9 அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். லூக் 6:39ஏசா 56:10மத் 23:16-24ஏசா 9:16மல்கி 2:82 பேது 2:1எசேக் 14:9-10ஏசா 42:19 அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான். மத் 13:36யோவா 16:29மாற் 4:34மாற் 7:17 அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா? மத் 16:9மாற் 7:18மாற் 9:32லூக் 9:45மத் 15:10எபி 5:12ஏசா 28:9-10லூக் 18:34 வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? லூக் 6:451 கொரி 6:13மத் 7:19-202இராஜா 10:27கொலோ 2:21-22யாக் 3:6 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும். நீதி 15:28மத் 12:34யாக் 3:6-10மத் 15:11நீதி 10:32நீதி 15:2நீதி 6:121 சாமு 24:13 எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும். மாற் 7:21-23கலா 5:19-21எரே 17:9யாக் 1:13-15தீத் 3:2-6நீதி 4:23ஆதி 6:5எரே 4:14 இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்; கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார். மாற் 7:3-41 கொரி 3:16-171 கொரி 6:18-201 கொரி 6:9-11எபே 5:3-6லூக் 11:38-40மத் 15:2மத் 23:25-26

கானானியப் பெண்ணின் விசுவாசம்

பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். மாற் 7:24-30மத் 11:21-23நியாயாதி 1:31யோசு 13:6யோசு 19:28-29ஆதி 49:13யோசு 11:8மத் 10:5-6 அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். மத் 9:27மத் 17:15மாற் 7:25-26சங் 45:12எசேக் 3:6லூக் 18:38-39சங் 4:1லூக் 17:13 அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். மத் 14:15ஆதி 42:7புலம் 3:8மாற் 10:47-48சங் 28:1உபா 8:2 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார். மத் 10:5-6ரோம 15:8அப் 13:46எரே 50:6-7எசேக் 34:5-6அப் 3:25-26எசேக் 34:16எசேக் 34:23 அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள். ஆதி 32:26ஓசி 12:4மத் 14:33மத் 20:31மாற் 9:22லூக் 18:1-8மத் 8:2மாற் 9:24 அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். மாற் 7:27-28மத் 7:6பிலி 3:2எபே 2:12கலா 2:15அப் 22:21-22வெளி 22:15ரோம 9:4 அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள். எபே 3:8லூக் 16:211 தீமோ 1:13-15யோபு 40:4-5லூக் 15:18-19ரோம 10:12லூக் 18:13லூக் 23:40-42 இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள். மாற் 9:23-24மத் 8:13மத் 9:22மாற் 5:34சங் 145:19யோவா 4:50-53ரோம 4:19-20மத் 8:10

இயேசு நான்காயிரம்பேரைப் போஷித்தல்

இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். மத் 4:18யோவா 6:1மத் 5:1மத் 15:29-31ஏசா 9:1யோவா 21:1யோவா 6:23யோசு 12:3 அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார். லூக் 6:17-19அப் 5:15-16மத் 14:35-36அப் 19:11-12ஏசா 35:5-6சங் 103:3லூக் 7:21-22மத் 11:4-5 ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். மத் 9:8லூக் 18:43ஆதி 32:28லூக் 17:15-18லூக் 7:16மத் 18:8மத் 9:33சங் 50:15 பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார். மத் 9:36அப் 27:33லூக் 12:29-30மத் 14:14-21மாற் 8:1-101 சாமு 30:11-12எபி 4:15லூக் 7:13 அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள். யோவா 6:5-9லூக் 9:13மத் 14:15மாற் 6:37மாற் 8:4-52இராஜா 4:42-44எண் 11:21-22 அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள். மத் 16:9-10யோவா 21:9-10லூக் 24:41-42 அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, யோவா 6:10லூக் 9:14-16மாற் 6:39-40மத் 14:19-21 அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள். லூக் 22:19ரோம 14:6அப் 27:35யோவா 6:111 கொரி 10:311 தீமோ 4:3-41 சாமு 9:13யோவா 6:23 எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள். மத் 14:20-21மாற் 8:19-21சங் 107:9லூக் 1:53மத் 15:33மத் 16:9-10மாற் 8:8-9 பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள். அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார். மாற் 8:10மத் 14:22