ஒழுக்கநெறிகள்
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் யெகோவாவாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள். லேவி 11:44-45லேவி 20:71 பேது 1:15-162 கொரி 6:14-16மத் 5:48லேவி 20:262 கொரி 7:1யாத் 19:6 உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை அனுசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. யாத் 20:12எபே 6:1-3யாத் 20:8எபி 12:9எசேக் 22:7-8நீதி 30:17யாத் 21:15யாத் 21:17 சிலைகளை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. லேவி 26:1யாத் 20:23யாத் 34:17சங் 115:4-7உபா 27:151 கொரி 10:141 யோவா 5:21யாத் 20:3-5 “நீங்கள் சமாதானபலியைக் யெகோவாவுக்குச் செலுத்தினால், அதை மன உற்சாகமாகச் செலுத்துங்கள். லேவி 22:19லேவி 22:29லேவி 7:16லேவி 1:32 நாளாக 31:2எபே 2:13-14யாத் 24:5எசேக் 45:15-17 நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைச் சாப்பிடவேண்டும்; மூன்றாம் நாள்வரை மீதியானது நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது. லேவி 7:11-17 மூன்றாம் நாளில் அதில் எதையாகிலும் சாப்பிட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கீகரிக்கப்படமாட்டாது. லேவி 7:18-21ஏசா 1:13ஏசா 65:4ஏசா 66:3எரே 16:18லேவி 22:23லேவி 22:25 அதைச் சாப்பிடுகிறவன் யெகோவாவுக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினதினால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான். லேவி 22:15லேவி 5:1 “நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், லேவி 23:22உபா 24:19-22ரூத் 2:15ரூத் 2:2லேவி 23:10லேவி 23:29 உன் திராட்சைத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை ஏழைகளுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. ஏசா 17:6ஏசா 24:13லேவி 25:6நியாயாதி 8:2எரே 49:9மீகா 7:1ஒபதி 1:5 “நீங்கள் திருடாமலும், வஞ்சனைசெய்யாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள். கொலோ 3:9எபே 4:25யாத் 20:15சங் 101:7சகரி 5:3-4ரோம 3:4உபா 5:19எரே 9:3-5 என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா. யாத் 20:7உபா 5:11லேவி 18:21யாக் 5:12லேவி 6:3மத் 5:33-34லேவி 24:11லேவி 24:15-16 “பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்வரை உன்னிடத்தில் இருக்கக்கூடாது. யாக் 5:4மல்கி 3:5உபா 24:14-15எரே 22:13நீதி 20:10யாத் 22:15யாத் 22:21எசேக் 22:29 செவிடனை நிந்திக்காமலும், குருடனுக்கு முன்னே தடைகளை வைக்காமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் யெகோவா. உபா 27:18லேவி 19:321 பேது 2:17லேவி 25:17ரோம 14:131 கொரி 8:8-13நெகே 5:15வெளி 2:14 “நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக. உபா 1:17உபா 27:19நீதி 24:23யாத் 23:2-3யாத் 23:6-8லேவி 19:35உபா 16:192 நாளாக 19:6-7 உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; 1பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா. யாத் 23:1யாத் 23:7நீதி 20:19எசேக் 22:9நீதி 11:13எரே 6:28எரே 9:41 இராஜா 21:10-13 “உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும். 1 யோவா 2:9லூக் 17:31 யோவா 2:111 யோவா 3:12-15நீதி 26:24-26நீதி 27:5-6கலா 6:1மத் 18:15-17 பழிக்குப்பழி வாங்காமலும் உன் மக்கள்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் யெகோவா. மத் 22:39-40ரோம 13:9மாற் 12:31-34லூக் 10:27-37கலா 5:14யாக் 2:8மத் 19:19மத் 5:43-44 “என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகங்களை வேறு இனத்தோடே பெருகச்செய்யாதே; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த உடையை அணியாதே 2 கொரி 6:14-17உபா 22:9-11மத் 9:16-17கலா 3:9-112 சாமு 13:291 இராஜா 1:33எஸ்றா 2:662 சாமு 18:9 “ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு ஆணுக்கு நியமிக்கப்பட்டவளாக இருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாக விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் காம உணர்வுடன் உடலுறவுகொண்டால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுதந்திரமுள்ளவள் அல்ல. உபா 22:23-24யாத் 21:20-21 அவன் தன் குற்றநிவாரணபலியாக ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன். லேவி 6:6-7லேவி 5:1-6லேவி 5:15 அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும். லேவி 4:20லேவி 4:26 “நீங்கள் அந்த தேசத்தில் வந்து, சாப்பிடத்தக்க பழங்களைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் பழங்களை விருத்தசேதனம் 2 இல்லாதவைகளென்று கருதுவீர்களாக; மூன்று வருடங்கள் அது சாப்பிடப்படாமல், விருத்தசேதனம் இல்லாததாக உங்களுக்கு கருதப்படவேண்டும். அப் 7:51லேவி 22:27எரே 9:25-26யாத் 22:29-30யாத் 6:12எரே 6:10லேவி 12:3லேவி 14:34 பின்பு நான்காம் வருடத்திலே அவைகளின் பழங்களெல்லாம் யெகோவாவுக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாக இருக்கும். உபா 18:4நீதி 3:9உபா 14:28-29எண் 18:12-13உபா 12:17-18 ஐந்தாம் வருடத்திலே அவைகளின் பழங்களைச் சாப்பிடலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. ஆகா 1:9-11பிரச 11:1-2ஆகா 1:4-6ஆகா 2:18-19லேவி 26:3-4மல்கி 3:8-10நீதி 3:9-10 “யாதொன்றையும் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். குறிகேட்காமலும், நாள்பார்க்காமலும் இருப்பீர்களாக. உபா 18:10-142இராஜா 17:172 நாளாக 33:62இராஜா 21:6உபா 12:23லேவி 17:10-14லேவி 3:17லேவி 7:26 உங்கள் தலைமுடியைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும், லேவி 21:5உபா 14:1எசேக் 44:20எரே 48:37ஏசா 15:2எரே 16:6எசேக் 7:18 செத்தவனுக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா. உபா 14:11 இராஜா 18:28லேவி 21:5லேவி 21:1எரே 16:6எரே 48:37மாற் 5:5வெளி 13:16-17 “தேசத்தார் வேசித்தனம்செய்து தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடி உன் மகளை வேசித்தனம்செய்ய விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காதே. உபா 23:17-181 கொரி 6:15லேவி 21:7ஓசி 4:12-14 என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா. லேவி 26:2லேவி 19:3பிரச 5:12 கொரி 6:16யாத் 20:8லேவி 16:2மத் 21:13சங் 89:7 “மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. ஏசா 8:19லேவி 20:272 நாளாக 33:6லேவி 20:6-7உபா 18:10-141 நாளாக 10:132இராஜா 21:61 சாமு 28:3 “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனப்படுத்தி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் யெகோவா. 1 தீமோ 5:1நீதி 16:31புலம் 5:12நீதி 20:29யோபு 32:4யோபு 32:6லேவி 19:14ரோம 13:7 “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். யாத் 22:21யாத் 23:9உபா 24:14எரே 7:6மல்கி 3:5உபா 10:18-19எசேக் 22:29எசேக் 22:7 உங்களிடத்தில் குடியிருக்கிற அந்நியனை இஸ்ரவேலனைப்போல கருதி, நீங்கள் உங்களில் அன்புசெலுத்துவதுபோல அவனிலும் அன்புசெலுத்துவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. உபா 10:19லேவி 19:18யாத் 12:48-49மத் 5:43 “நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக. உபா 25:13உபா 25:15எசேக் 22:12-13லேவி 19:15மத் 7:2மீகா 6:1நீதி 11:1நீதி 16:11 நியாயமான தராசும், நியாயமான நிறைகல்லும், நியாயமான மரக்காலும், நியாயமான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா. யாத் 20:2நீதி 11:1உபா 25:13-15நீதி 20:10 ஆகையால் என்னுடைய கட்டளைகள், நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் யெகோவா என்று சொல்” என்றார். உபா 8:1லேவி 18:4-51 யோவா 3:22-23உபா 5:1சங் 119:34உபா 4:1-2உபா 4:5-6உபா 6:1-2