1 இராஜாக்கள் 9

1 Kings 9
அத்தியாயம் 9

சாலொமோனுக்கு யெகோவா காட்சியளித்தல்

சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும் ராஜ அரண்மனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு, 2 நாளாக 7:111 இராஜா 9:191 இராஜா 6:371 இராஜா 7:511 இராஜா 9:11பிரச 2:10பிரச 2:4பிரச 6:9 யெகோவா கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாவது முறையும் அவனுக்குத் தரிசனமானார். 1 இராஜா 3:52 நாளாக 7:121 இராஜா 11:92 நாளாக 1:7-12 யெகோவா அவனை நோக்கி: நீ என்னுடைய சமுகத்தில் செய்த உன்னுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என்னுடைய நாமம் என்றைக்கும் வெளிப்படும்படி, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என்னுடைய கண்களும், இருதயமும் எப்பொழுதும் அங்கே இருக்கும். 1 யோவா 5:141 இராஜா 8:292இராஜா 20:5சங் 10:17சங் 116:1உபா 11:122 நாளாக 6:40சங் 132:13-14 நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என்னுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளும்படி, என்னுடைய சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாக உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடந்தால், 1 இராஜா 15:51 இராஜா 3:14ஆதி 17:11 இராஜா 11:41 இராஜா 11:61 இராஜா 11:381 இராஜா 14:8உபா 28:1 இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் ஆண்மகன் உனக்கு இல்லாமல் போவதில்லை என்று உன்னுடைய தகப்பனாகிய தாவீதோடு நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன்னுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன். 1 இராஜா 2:41 இராஜா 6:122 சாமு 7:122 சாமு 7:161 நாளாக 22:9-101 இராஜா 8:151 இராஜா 8:20சங் 132:11-12 நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்னே வைத்த என்னுடைய கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறு தெய்வங்களை வணங்கி, அவைகளைப் பணிந்துகொண்டால், 1 நாளாக 28:92 சாமு 7:14-161 இராஜா 11:4-101 சாமு 2:302 நாளாக 15:22 நாளாக 7:19-22யோசு 23:15-16சங் 89:30 நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடி அழித்துப்போட்டு, என்னுடைய நாமம் வெளிப்பட நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என்னுடைய பார்வையைவிட்டு அகற்றுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் என்கிற பெயர் எல்லா மக்கள் மத்தியிலும் பழமொழியாகவும் நகைப்பாகவும் இருப்பார்கள். எரே 24:9சங் 44:14உபா 28:37உபா 4:262இராஜா 25:212இராஜா 25:9லேவி 18:24-28லூக் 21:24 அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் 1 கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, இழிவாகப் பேசி: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள். உபா 29:24-26எரே 22:8-92 நாளாக 7:21எரே 19:8எரே 22:28தானி 9:12ஏசா 64:11எரே 49:17 அதற்கு அவர்கள்: தங்கள் முன்னோர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த தங்களுடைய தேவனாகிய யெகோவாவை விட்டு வேறு தெய்வங்களைப் பற்றிக்கொண்டு, அவர்களை வணங்கி தொழுதபடியால், யெகோவா இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரச்செய்தார் என்று சொல்லுவார்கள் என்றார். எரே 2:19எரே 5:192 நாளாக 7:22உபா 29:25-28எரே 2:10-13எசேக் 36:17-20எரே 12:7-8எரே 16:10-13

சாலொமோனின் மற்ற செயல்பாடுகள்

சாலொமோன் யெகோவாவுடைய ஆலயமும் ராஜ அரண்மனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற 20 ஆம் வருடம் முடிவிலே, 1 இராஜா 6:371 இராஜா 9:12 நாளாக 8:1-18 தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாருமரங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள 20 பட்டணங்களைக் கொடுத்தான். 2 நாளாக 8:21 இராஜா 5:6-102 நாளாக 2:162 நாளாக 2:8-10யோசு 20:7 ஈராம் தனக்கு சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்ப்பதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளின்மேல் அவன் பிரியப்படவில்லை. நியாயாதி 14:3எண் 22:34 அதனாலே அவன்: என்னுடைய சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்த நாள்வரை சொல்லி வருகிறபடி காபூல் 2 நாடு என்று பெயரிட்டான். யோசு 19:27ஆமோ 1:91 இராஜா 5:1-2 ஈராம் ராஜாவிற்கு நூற்றிருபது தாலந்து 3 பொன் அனுப்பியிருந்தான். 1 இராஜா 9:111 இராஜா 10:101 இராஜா 10:141 இராஜா 10:211 இராஜா 9:28

பிடித்த கூலியில்லா வேலையாட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் யெகோவாவுடைய ஆலயத்தையும், தன்னுடைய அரண்மனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான். 1 இராஜா 5:131 இராஜா 9:242 சாமு 5:9யோசு 17:11யோசு 11:1யோசு 19:36நியாயாதி 1:29யோசு 16:10 கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர் பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியர்களைக் கொன்றுபோட்டு, அதை சாலொமோனின் மனைவியாகிய தன்னுடைய மகளுக்கு சீதனமாகக் கொடுத்திருந்தான். 1 இராஜா 3:11 இராஜா 7:81 இராஜா 9:24யோசு 16:10 சாலொமோன் அந்தக் கேசேர் பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும், யோசு 16:3யோசு 21:222 நாளாக 8:4-18யோசு 10:10யோசு 19:44 பாலாத்தையும், வனாந்திரத்திலுள்ள தாமாரையும், யோசு 19:442 நாளாக 8:4 தனக்கு இருக்கிற எல்லாவற்றையும் சேமித்துவைக்கும் எல்லாப் பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர்கள் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாட்சி செய்த தேசமெங்கும் தனக்கு விருப்பமானதையெல்லாம் கட்டினான். 1 இராஜா 9:11 இராஜா 10:261 இராஜா 4:26-282 நாளாக 1:14பிரச 2:10பிரச 6:9யாத் 1:11 இஸ்ரவேல் மக்கள் அழிக்காமல் மீதியாக விட்டிருந்த இஸ்ரவேல் மக்களல்லாத எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுமான எல்லா மக்களிலும், 2 நாளாக 8:7-18உபா 7:1-3யாத் 23:23யாத் 23:28-33யாத் 34:11-12ஆதி 15:19-21 அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீதியாக இருந்த எல்லா மக்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்த நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, கூலியில்லாமல் வேலைசெய்ய அடிமைப்படுத்திக்கொண்டான். நியாயாதி 1:21யோசு 15:63யோசு 17:12ஆதி 9:25-26எஸ்றா 2:55-58நெகே 11:3நெகே 7:571 இராஜா 5:13 இஸ்ரவேல் மக்களில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தவீரர்களும், அவனுக்குப் பணிவிடைக்காரர்களும், பிரபுக்களும், படைத்தலைவர்களும், இரதவீரர்களும், குதிரைவீரர்களுமாக இருந்தார்கள். லேவி 25:391 இராஜா 4:1-271 சாமு 8:11-122 நாளாக 8:9-10 550 பேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிப்பதற்குத் தலைமையான விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள். 1 இராஜா 5:162 நாளாக 8:102 நாளாக 2:18 பார்வோனின் மகள், தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன்னுடைய மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோ 4பட்டணத்தைக் கட்டினான். 1 இராஜா 7:81 இராஜா 11:272 நாளாக 32:52 சாமு 5:91 இராஜா 3:11 இராஜா 9:15-162 நாளாக 8:11 சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டி முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் ஒரு வருடத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, யெகோவாவின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபம் காட்டிவந்தான். 2 நாளாக 8:12-132 நாளாக 8:16உபா 16:16யாத் 23:14-171 நாளாக 23:131 இராஜா 6:382 நாளாக 26:16-212 நாளாக 29:11

ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் செங்கடலின் கரையிலே ஏலாத்திற்கு அருகிலுள்ள எசியோன் கேபேரிலே கப்பல்களைச் செய்தான். 1 இராஜா 22:48உபா 2:8எண் 33:352 நாளாக 8:11-122 நாளாக 8:17-182இராஜா 14:22 அந்தக் கப்பல்களில், கடல் பயணத்தில் பழகின கப்பலாட்களாகிய தன்னுடைய வேலைக்காரர்களை ஈராம் சாலொமோனுடைய வேலைக்காரர்களோடு அனுப்பினான். 1 இராஜா 10:111 இராஜா 5:61 இராஜா 5:91 இராஜா 22:492 நாளாக 20:36-37 அவர்கள் ஓப்பீருக்குப்போய், அந்த இடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து 5 பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடம் கொண்டுவந்தார்கள். 1 நாளாக 29:42 நாளாக 8:181 இராஜா 10:11ஏசா 13:12யோபு 22:24யோபு 28:16சங் 45:92 நாளாக 9:10