1 இராஜாக்கள் 14

1 Kings 14
அத்தியாயம் 14

யெரொபெயாமுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்தல்

அக்காலத்திலே யெரொபெயாமின் மகனாகிய அபியா வியாதியில் படுத்தான். 1 இராஜா 13:33-341 இராஜா 14:12-131 சாமு 31:21 சாமு 4:19-202 சாமு 12:15யாத் 20:5 அப்பொழுது யெரொபெயாம் தன்னுடைய மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடி வேஷம் மாறி சீலோவுக்குப் போ; இந்த மக்களின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடு சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான். 1 இராஜா 11:29-381 சாமு 28:82 சாமு 14:22 நாளாக 18:291 இராஜா 14:5-61 இராஜா 22:30யோசு 18:1லூக் 12:2 நீ உன்னுடைய கையிலே பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடம் போ; பிள்ளைக்கு நடக்கப்போகிறது என்னவென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான். 1 சாமு 9:7-81 இராஜா 13:72இராஜா 4:422இராஜா 1:22இராஜா 5:152இராஜா 5:52இராஜா 8:7-9யோவா 11:3 யெரொபெயாமின் மனைவி அப்படியே செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்; அகியாவோ முதிர் வயதானதால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கமுடியாமல் இருந்தான். 1 இராஜா 11:291 சாமு 3:21 சாமு 4:151 இராஜா 14:21 சாமு 4:3-4உபா 34:7பிரச 12:3ஆதி 27:1 யெகோவா அகியாவினிடம்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாக இருக்கிற தன்னுடைய மகனுக்காக உன்னிடம் ஒரு ஆலோசனை கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்னபடியாகச் சொல்லவேண்டும்; அவள் உள்ளே நுழைகிறபோது, தன்னை வேறு பெண்ணாகக் காட்டுவாள் என்றார். 2இராஜா 4:272இராஜா 6:8-12ஆமோ 3:7நீதி 21:30சங் 139:1-4அப் 10:19-20 எனவே, வாசற்படிக்குள் நுழையும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை வேறு பெண்ணாக ஏன் காட்டுகிறாய்? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன். 1 இராஜா 13:20-221 இராஜா 14:10-111 இராஜா 14:21 இராஜா 14:51 இராஜா 20:421 இராஜா 21:18-241 இராஜா 22:81 சாமு 15:16 நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்; மக்களிடத்திலிருந்து உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின்மேல் அதிபதியாக வைத்தேன். 1 இராஜா 16:22 சாமு 12:7-81 இராஜா 12:241 சாமு 15:161 சாமு 2:27-30 நான் ராஜ்ஜியபாரத்தை தாவீது வீட்டாரினுடைய கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, என்னுடைய பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன்னுடைய முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என்னுடைய ஊழியனாகிய தாவீதைப்போல நீ இல்லாமல், 1 இராஜா 15:51 இராஜா 11:33-382 நாளாக 28:1அப் 13:22அப் 13:361 இராஜா 11:30-311 இராஜா 3:142 நாளாக 17:3 உனக்கு முன்னே இருந்த எல்லோரையும்விட பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தெய்வங்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் ஏற்படுத்தி, என்னை உனக்குப் பின்னே தள்ளிவிட்டாய். எசேக் 23:35நெகே 9:26சங் 50:171 இராஜா 12:282 நாளாக 11:15யாத் 34:171 கொரி 10:22எசேக் 8:17 ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் தீங்கை வரச்செய்து, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் கூட இல்லாதபடி, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் அழித்து, குப்பை கழித்துப்போடப்படுவதுபோல யெரொபெயாமுக்கு பின்வருபவர்களை அவர்கள் முழுவதும் அழியும்வரை கழித்துப்போடுவேன் என்றார். 1 இராஜா 21:212இராஜா 14:26உபா 32:362இராஜா 9:8-91 இராஜா 15:25-301 இராஜா 16:111 சாமு 2:301 சாமு 25:22 யெரொபெயாமின் குடும்பத்தார்களில் பட்டணத்தில் சாகிறவனை நாய்கள் சாப்பிடும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் சாப்பிடும்; யெகோவா இதை உரைத்தார். 1 இராஜா 16:41 இராஜா 21:23-24எரே 15:3வெளி 19:17-181 இராஜா 21:19எசேக் 39:17-19ஏசா 66:24 ஆகையால் நீ எழுந்து, உன்னுடைய வீட்டுக்குப்போ, உன்னுடைய கால்கள் பட்டணத்திற்குள் நுழையும்போது பிள்ளை செத்துப்போவான். 1 இராஜா 14:16-171 இராஜா 14:32இராஜா 1:162இராஜா 1:6யோவா 4:50-52 அவனுக்காக இஸ்ரவேலர்கள் எல்லோரும் துக்கம் கொண்டாடி அவனை அடக்கம் செய்வார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக அவனிடம் நல்ல காரியம் காணப்பட்டதால், யெரொபெயாமின் வீட்டாரில் அவன் ஒருவனே கல்லறைக்குப்போவான். 2 நாளாக 19:32 நாளாக 12:122 பேது 2:8-9எசேக் 18:14-32எரே 22:10எரே 22:18யோபு 19:28எண் 20:29 ஆனாலும் யெகோவா தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பச்செய்வார்; அவன் அந்த நாளிலே யெரொபெயாமின் வீட்டாரை அழிப்பான்; இப்போதே இது நடக்கும். 1 இராஜா 15:27-292 பேது 2:3பிரச 8:11எசேக் 12:22-28எசேக் 7:2-7யாக் 5:9 தண்ணீரில் நாணல் அசைகிறதுபோல, யெகோவா இஸ்ரவேலை முறித்து அசையச்செய்து, அவர்களுடைய முன்னோர்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடு பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, யெகோவாவுக்குக் கோபம் உண்டாக்கியதால், அவர்களை ஐபிராத்து நதிக்கு மறுபுறம் சிதறடித்து, யோசு 23:15-16சங் 52:52இராஜா 15:29உபா 12:3-4யாத் 34:13-14நீதி 2:221 இராஜா 14:23-241 இராஜா 14:9 யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவத்தினால் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான். 1 இராஜா 13:341 இராஜா 15:301 இராஜா 15:341 இராஜா 16:21 இராஜா 12:30யாத் 32:21யாத் 32:35ஓசி 5:11-12 அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வரும்போது பிள்ளை செத்துப்போனான். 1 இராஜா 15:331 இராஜா 15:211 இராஜா 16:151 இராஜா 16:23உன்னத 6:41 இராஜா 14:12-131 இராஜா 16:6-91 சாமு 2:20-34 யெகோவா தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்செய்து, இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்காகத் துக்கம் அனுசரித்தார்கள். 1 இராஜா 14:13

யெரொபெயாம் யுத்தம்செய்ததும் ஆட்சி செய்ததுமான அவனுடைய மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. 2 நாளாக 13:2-201 நாளாக 27:241 இராஜா 14:29-301 இராஜா 15:311 இராஜா 16:141 இராஜா 16:201 இராஜா 16:271 இராஜா 16:5 யெரொபெயாம் 22 வருடங்கள் ஆட்சிசெய்தான்; அவன் இறந்து தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அவனுடைய மகனாகிய நாதாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான். யோபு 14:121 இராஜா 11:431 இராஜா 2:10சங் 3:51 இராஜா 15:25-31சங் 4:8

யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம்

சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது 41 வயதாக இருந்து, யெகோவா தம்முடைய நாமம் வெளிப்படும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே 17 வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாயின் பெயர் நாகமாள். 2 நாளாக 12:131 இராஜா 11:361 இராஜா 14:311 இராஜா 11:321 இராஜா 11:431 இராஜா 8:161 இராஜா 8:442 நாளாக 13:7 யூதா மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தாங்கள் செய்து வருகிற தங்களுடைய பாவங்களினால் தங்களுடைய பிதாக்கள் செய்த எல்லாவற்றையும்விட அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள். 1 கொரி 10:222 நாளாக 12:1சங் 78:581 இராஜா 14:91 இராஜா 16:302 நாளாக 12:142இராஜா 17:19உபா 29:28 அவர்களும் உயர்ந்த எல்லா மேட்டின் மேலும், பச்சையான எல்லா மரத்தின் கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்புவிக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள். உபா 12:2ஏசா 57:52இராஜா 17:9-10எசேக் 16:24-251 இராஜா 14:151 இராஜா 3:22 நாளாக 28:42இராஜா 21:3-7 தேசத்திலே ஆண் விபசாரக்காரர்களும் இருந்தார்கள்; யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட தேசங்களுடைய அருவருப்புகளின்படியெல்லாம் செய்தார்கள். உபா 23:171 கொரி 6:91 இராஜா 15:122இராஜா 23:71 இராஜா 22:46ஆதி 19:5நியாயாதி 19:22ரோம 1:24-27 ரெகொபெயாம் அரசாட்சிசெய்யும் ஐந்தாம் வருடத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு எதிராக வந்து, 1 இராஜா 11:402 நாளாக 12:2-42 நாளாக 12:9 யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்த பொன் கேடகங்கள் ஆகிய எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான். 1 இராஜா 15:182 நாளாக 9:15-161 இராஜா 10:16-171 இராஜா 7:512 நாளாக 12:9-112இராஜா 24:13பிரச 2:18-19நீதி 23:5 அவைகளுக்கு பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கல கேடகங்களைச் செய்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற காவற்காரர்களுடைய தளபதிகளின் கைகளில் ஒப்புவித்தான். 1 சாமு 22:171 சாமு 8:111 இராஜா 14:11 இராஜா 14:51 இராஜா 18:462 சாமு 15:1புலம் 4:1-2 ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையும்போது, அரண்மனைக் காவலர்கள் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பத் தங்களுடைய அறையிலே வைப்பார்கள். 2 நாளாக 12:11 ரெகொபெயாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. 1 இராஜா 11:411 இராஜா 14:191 இராஜா 15:231 இராஜா 22:452 நாளாக 12:15-16 ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 1 இராஜா 12:211 இராஜா 12:241 இராஜா 15:6-72 நாளாக 12:15 ரெகொபெயாம் இறந்து தன்னுடைய முன்னோர்களோடு தாவீதின் நகரத்தில் தன்னுடைய பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாய்க்கு நாகமாள் என்று பெயர்; அவனுடைய மகனாகிய அபியாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான். 2 நாளாக 12:16மத் 1:71 நாளாக 3:101 இராஜா 11:431 இராஜா 14:20-211 இராஜா 15:241 இராஜா 15:31 இராஜா 22:50