இறுதி ஜெபமும் வாழ்த்துக்களும்
சகோதர அன்பு நிலைத்திருக்கட்டும். 1 யோவா 4:201 பேது 3:81 பேது 1:221 பேது 2:172 பேது 1:71 யோவா 2:9-102 யோவா 1:5-6எபி 10:24 அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு. மத் 25:35ஆதி 18:11 பேது 4:9ரோம 12:13மத் 25:43மத் 25:40லேவி 19:341 இராஜா 17:10-16 சிறைச்சாலையில் இருக்கிறவர்களோடு நீங்களும் சிறைச்சாலையிலே இருக்கிறவர்களைப்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; அவர்களுடைய சரீரங்களைப்போல உங்களுடைய சரீரங்களும் தீங்கு அனுபவித்ததாக நினைத்து, தீங்கு அனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். மத் 25:36எபி 10:34ரோம 12:151 கொரி 12:26கொலோ 4:181 பேது 3:8கலா 6:1-2மத் 25:43 திருமணம் எல்லோருக்குள்ளும் கனமுள்ளதாகவும், பரிசுத்தமாகவும் இருப்பதாக; வேசிக்கள்ளர்களையும் விபசாரக்காரர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார். ஆதி 2:24நீதி 5:15-231 கொரி 7:2-16கலா 5:19ஆதி 1:27-281 கொரி 6:9கலா 5:211 கொரி 5:13 நீங்கள் பணஆசை இல்லாதவர்களாக நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகளே போதும் என்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. உபா 31:8யோசு 1:5உபா 31:61 சாமு 12:22ஏசா 41:17சங் 37:25ஏசா 41:101 நாளாக 28:20 அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. சங் 118:6-9ஏசா 41:10ரோம 8:31சங் 27:1-3சங் 124:8எபி 4:16சங் 56:4சங் 56:11-12 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். 1 தெச 5:12-13எபி 13:17பிலி 3:17எபி 6:121 தெச 1:61 தெச 2:131 தீமோ 3:5அப் 14:23 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். மல்கி 3:6யாக் 1:17வெளி 1:8ஏசா 44:6எபி 1:12சங் 102:27-28சங் 90:2சங் 103:17 பலவிதமான அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல் இருங்கள். உணவுபொருட்களால் இல்லை, கிருபையினாலே இருதயம் உறுதிப்படுத்தப்படுகிறது நல்லது; உணவுபொருட்களால் பயனில்லையே. எபே 4:141 தீமோ 6:3-5எபே 5:61 யோவா 4:1ரோம 14:6அப் 20:30கலா 1:6-9மத் 24:4 நமக்கு ஒரு பலிபீடம் உண்டு, அங்குள்ளவைகளைச் சாப்பிடுகிறதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரம் இல்லை. 1 கொரி 10:201 கொரி 5:7-81 கொரி 9:131 கொரி 10:17-18எண் 7:5எண் 3:7-8 ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களுக்காகப் பரிசுத்த இடத்திற்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் முகாமிற்கு வெளியே சுட்டெரிக்கப்படும். லேவி 16:27யாத் 29:14லேவி 9:11எண் 19:3லேவி 6:30லேவி 16:14-19லேவி 4:11-12லேவி 4:16-21 அப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே மக்களைப் பரிசுத்தம் பண்ணுவதற்காக நகர வாசலுக்கு வெளியே பாடுகள்பட்டார். எபி 9:12-14யோவா 19:17-18மாற் 15:20-241 கொரி 6:11அப் 7:58எபே 5:26எபி 10:29யோவா 19:34 ஆகவே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம். எபி 11:261 பேது 4:14-16அப் 5:41லூக் 6:22மத் 16:241 கொரி 4:10-132 கொரி 12:10மத் 27:39-44 நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம். பிலி 3:20கொலோ 3:1-3எபி 11:12-16எபி 12:222 பேது 3:13-14எபே 2:192 கொரி 4:17எபி 11:9-10 ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம். சங் 107:21-22சங் 50:14ரோம 12:1சங் 145:1-211 பேது 2:5ஓசி 14:2எபே 5:19-20ஏசா 57:19 அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார். 2 தெச 3:13கலா 6:10ரோம 12:13எபி 6:10எபி 13:1-21 தீமோ 6:18எபே 4:282 கொரி 9:12-13 உங்களை நடத்துகிறவர்கள், உங்களுடைய ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாக விழித்திருக்கிறதினால், அவர்கள் துக்கத்தோடு இல்லை, சந்தோஷத்தோடு அதைச் செய்வதற்காக, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கி இருங்கள்; அவர்கள் துக்கத்தோடு அதைச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்காது. 1 தெச 5:12-131 தீமோ 5:17எபி 13:71 பேது 5:5அப் 20:281 பேது 5:2-31 கொரி 16:16எரே 13:17 எங்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்; நாங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக எல்லாவற்றிலும் யோக்கியமாக நடக்க விரும்புகிறோம் என்று உறுதியாக நம்புகிறோம். 1 தெச 5:252 தெச 3:11 தீமோ 1:5கொலோ 4:3அப் 24:16ரோம 15:301 பேது 2:121 பேது 3:16 நான் மிகவும் சீக்கிரமாக உங்களிடம் வருவதற்கு நீங்கள் தேவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களை அதிகமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன். பிலே 1:22ரோம 1:10-12ரோம 15:31-32 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், யோவா 10:11எபி 10:22சங் 23:1ரோம 15:33யோவா 10:142 தெச 3:16எசேக் 37:26சகரி 9:11 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். பிலி 2:132 தெச 2:17பிலி 4:131 பேது 5:10-111 பேது 2:52 தீமோ 4:18பிலி 1:111 தெச 5:23 சகோதரர்களே, நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாக ஏற்றுக்கொள்ள உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். 1 பேது 5:122 கொரி 6:1எபி 3:1கலா 6:112 கொரி 5:20எபி 10:19-39எபி 12:1-2எபி 13:1-3 சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டான் என்று தெரிந்துகொள்ளுங்கள்; அவன் சீக்கிரமாக வந்தால், நான் அவனோடுகூட வந்து, உங்களைப் பார்ப்பேன். 1 தெச 3:2பிலே 1:12 தீமோ 1:81 தீமோ 6:12அப் 16:1-3பிலே 1:22வெளி 7:14ரோம 15:25 உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். எபி 13:17எபி 13:7அப் 18:2பிலே 1:52 கொரி 1:12 கொரி 13:13கொலோ 1:2பிலி 4:22 கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். கொலோ 4:182 தீமோ 4:22எபே 6:24வெளி 22:21ரோம 16:20தீத் 3:15ரோம 1:7ரோம 16:23