ஆபிராமின் அழைப்பு
யெகோவா ஆபிராமை நோக்கி: “நீ உன் பிறந்த தேசத்தையும், உன் இனத்தையும், 1 உன் தகப்பனுடைய வீட்டையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ. எபி 11:8அப் 7:2-6நெகே 9:7ஏசா 51:2யோசு 24:2-3ஆதி 11:31-32லூக் 14:26-33ஆதி 15:7 நான் உன்னைப் பெரிய இனமாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாக இருப்பாய். 2 சாமு 7:9கலா 3:14ஆதி 18:18ஆதி 17:4-6ஆதி 28:3-4ஆதி 35:11ஆதி 46:3ஆதி 26:4 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்மூலம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார். கலா 3:8ஆதி 22:18அப் 3:25-26ஆதி 27:29எண் 24:9ஆதி 26:4ஆதி 28:14ஆதி 18:18 யெகோவா ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடுகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, 75 வயதுள்ளவனாக இருந்தான். எபி 11:8ஆதி 11:31ஆதி 11:27 ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய மகனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சொத்துக்கள் எல்லாவற்றையும், ஆரானிலே வாங்கியிருந்த மக்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்திற்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தைச் சென்றடைந்தார்கள். ஆதி 14:14ஆதி 11:31அப் 7:4எபி 11:8-9ஆதி 10:19ஆதி 14:21ஆதி 46:5-26 ஆபிராம் அந்த தேசத்தில் சுற்றித்திரிந்து சீகேம் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள மோரே என்னும் சமபூமிவரைக்கும் வந்தான்; அந்தக் காலத்திலே கானானியர்கள் அந்த தேசத்தில் இருந்தார்கள். உபா 11:30எபி 11:9ஆதி 13:7ஆதி 35:4ஆதி 10:18-19ஆதி 15:18-21நியாயாதி 7:11 இராஜா 12:1 யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “உன் சந்ததிக்கு 2 இந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்றார். அப்பொழுது அவன் தனக்குக் காட்சியளித்த யெகோவாவுக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். ஆதி 17:8ஆதி 13:15ஆதி 17:1கலா 3:16ஆதி 18:1ஆதி 13:4சங் 105:9-12ஆதி 13:18 பின்பு அவன் அந்த இடத்தைவிட்டு பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். ஆதி 4:26நெகே 11:31ஆதி 21:331 கொரி 1:2ஆதி 13:4ஆதி 28:19அப் 2:21ஆதி 35:15-16 அதற்குப் பிறகு ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பயணம் செய்தான். ஆதி 13:3ஆதி 13:1ஆதி 24:62எபி 11:13-14சங் 105:13
எகிப்தில் ஆபிராமும் சாராளும்
அந்த தேசத்திலே பஞ்சம் உண்டானது; தேசத்திலே பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்குவதற்காக அந்த இடத்திற்குப் போனான். ஆதி 43:1ஆதி 26:1-31 இராஜா 17:1-182இராஜா 4:382இராஜா 6:252இராஜா 7:1-82இராஜா 8:1-22 சாமு 21:1 அவன் எகிப்திற்கு அருகில் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: “நீ பார்ப்பதற்கு அழகுள்ள பெண் என்று எனக்குத் தெரியும். ஆதி 26:7ஆதி 12:14ஆதி 29:17நீதி 21:302 சாமு 11:2ஆதி 39:6-7உன்னத 1:14 எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது, நீ என்னுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடு வைப்பார்கள். ஆதி 20:11ஆதி 26:71 யோவா 1:8-10மத் 10:28நீதி 29:251 சாமு 27:1 ஆகையால், உன்னால் எனக்கு நன்மை உண்டாவதற்கும், உன்னாலே என் உயிர் பிழைப்பதற்கும், நீ உன்னை என்னுடைய சகோதரி என்று சொல்” என்றான். ஆதி 26:7ஆதி 20:12-13ஆதி 20:2ஆதி 20:5எசேக் 18:4எரே 17:5-8ஆதி 11:29ஏசா 57:11 ஆபிராம் எகிப்திற்கு வந்தபோது, எகிப்தியர்கள் அந்தப் பெண்ணை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள். ஆதி 3:6ஆதி 39:7ஆதி 6:2மத் 5:28 பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக்கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்தப் பெண் பார்வோனுடைய அரண்மனைக்குக் கொண்டுபோகப்பட்டாள். ஆதி 20:21 இராஜா 3:12இராஜா 18:21எஸ்த 2:2-16யாத் 2:15யாத் 2:5ஆதி 40:2ஆதி 41:1 அவளால் அவன் ஆபிராமுக்குத் தயவு செய்தான்; அவனுக்கு ஆடுமாடுகளும், ஆண் கழுதைகளும், பெண் கழுதைகளும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், ஒட்டகங்களும் கிடைத்தன. ஆதி 20:14ஆதி 13:2ஆதி 24:35ஆதி 26:14ஆதி 32:13-15ஆதி 32:5யோபு 1:3யோபு 42:12 ஆபிராமுடைய மனைவியாகிய சாராயிக்காகக் யெகோவா தேவன் பார்வோனையும், அவனுடைய வீட்டார்களையும் கொடிய வாதைகளால் வாதித்தார். 1 நாளாக 16:21ஆதி 20:18சங் 105:14-151 நாளாக 21:22எபி 13:4யோபு 34:19 அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: “நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன்னுடைய மனைவி என்று நீ எனக்குத் தெரிவிக்காமல் போனதென்ன? ஆதி 20:9-10ஆதி 26:9-111 சாமு 14:43நீதி 21:1யாத் 32:21ஆதி 3:13ஆதி 31:26ஆதி 4:10 இவளை உன்னுடைய சகோதரி என்று நீ ஏன் சொல்லவேண்டும்? இவளை நான் எனக்கு மனைவியாக்கிக் கொண்டிருப்பேனே; இதோ உன்னுடைய மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ” என்று சொன்னான். பார்வோன் அவனைக் குறித்துத் தன்னுடைய மனிதர்களுக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவனுடைய மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள். நீதி 21:1சங் 105:14-151 சாமு 29:6-11யாத் 18:27