அப்போஸ்தலருடைய நடபடிகள் 12

Acts 12
அத்தியாயம் 12

பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்படுதல்

அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; மத் 24:9யோவா 15:20மத் 10:17-18யோவா 16:2லூக் 22:53அப் 4:30அப் 9:31 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். எபி 11:37மத் 20:23மத் 4:21-22மாற் 10:35மாற் 10:381 இராஜா 19:11 இராஜா 19:10எரே 26:23 அது யூதர்களுக்குப் பிரியமாக இருக்கிறதென்று அவன் அறிந்து, பேதுருவையும் பிடிக்கப் பின்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாக இருந்தது. யாத் 23:15அப் 24:27யோவா 12:43லேவி 23:6-14அப் 25:9யாத் 12:14-201 கொரி 5:7-8அப் 20:6 அவனைப் பிடித்து சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப்பின்பு மக்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாம் என்று நினைத்து, அவனைக் காவல்காக்கும்படி நான்கு போர்வீரர்கள் அடங்கிய நான்கு படைக் குழுவினரிடம் ஒப்படைத்தான். நீதி 19:21லூக் 22:33லூக் 21:12அப் 4:28யோவா 13:36-38அப் 4:3எஸ்த 3:13எஸ்த 3:6-7 அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காவலில் இருக்கும்போது, சபை மக்கள் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடு ஜெபம்பண்ணினார்கள். 1 கொரி 12:261 தெச 5:17யாக் 5:16எபே 6:18-202 கொரி 1:11மத் 18:19லூக் 18:1அப் 12:12 ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தினநாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு போர்வீரர்கள் நடுவே தூங்கிக் கொண்டிருந்தான்; காவற்காரர்களும் கதவிற்கு முன்னே இருந்து சிறைச்சாலையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். அப் 21:33எபி 13:61 சாமு 23:26-272 தீமோ 1:16எபே 6:20பிலி 4:6-7அப் 28:20அப் 5:23 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாக எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து கழன்று கீழே விழுந்தது. அப் 16:26அப் 5:19சங் 146:7சங் 105:18-20சங் 142:6-7அப் 27:23-24ஆதி 19:15-16சங் 107:14 தூதன் அவனை நோக்கி: உன் ஆடையையும் காலணிகளையும் அணிந்துகொள் என்றான். அவன் அப்படியே செய்தான். தூதன் மறுபடியும் அவனை நோக்கி: உன் மேலாடையைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான். அப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்னேசென்று தூதனால் செய்யப்பட்டது உண்மையென்று தெரியாமல், தான் ஒரு தரிசனம் பார்ப்பதாக நினைத்தான். சங் 126:1எபி 11:8அப் 10:3அப் 26:19ஆதி 45:262 கொரி 12:1-3அப் 10:17அப் 11:5 அவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் காவல்களைக் கடந்து, நகரத்திற்குப்போகிற இரும்புக் கதவின் அருகே வந்தபோது அது தானாக அவர்களுக்குத் திறந்தது; அதன்வழியாக அவர்கள் புறப்பட்டு ஒரு வீதிவழியாக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனைவிட்டுப் போய்விட்டான். அப் 16:26அப் 5:19ஏசா 45:1-2ஆதி 40:3ஆதி 42:17யோவா 20:19எண் 15:34அப் 12:4 பேதுருவிற்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதமக்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படி கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது உண்மையாக புரிந்துகொண்டேன் என்றான். தானி 6:22தானி 3:282 பேது 2:9சங் 34:7அப் 5:19சங் 33:18சங் 97:10லூக் 15:17 அவன் இப்படி புரிந்துகொண்டபின்பு, மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டிற்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். 1 யோவா 5:14-15அப் 12:5அப் 12:25அப் 13:5ஏசா 65:24மத் 18:19-202 தீமோ 4:11அப் 13:13 பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பெயர்கொண்ட ஒரு பெண் யாரென்று கேட்க வந்தாள். அப் 12:16லூக் 13:25யோவா 18:16-17 அவள் பேதுருவின் குரலை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறக்காமல், திரும்ப உள்ளே ஓடிப்போய், பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று சொன்னாள். லூக் 24:41மத் 28:8 அவர்கள்: நீ உளறுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தான் என்று உறுதியாகச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அது பேதுருவுடைய தூதனாக இருக்கலாம் என்றார்கள். மத் 18:10அப் 26:24லூக் 24:11லூக் 24:37-38மாற் 16:11மாற் 16:14ஆதி 48:16யோபு 9:16 பேதுரு தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் கதவைத் திறந்தபோது அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் அவர்களைப் பார்த்து கையசைத்து, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விளக்கி, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரர்களுக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான். அப் 21:40அப் 13:16அப் 19:33அப் 15:13அப் 21:18கலா 1:19கலா 2:12கலா 2:9 பொழுதுவிடிந்தபின்பு பேதுருவைக்குறித்துக் காவலர்களுக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல. அப் 5:22-25அப் 16:27அப் 19:23

ஏரோதுவின் மரணம்

ஏரோது அவனைத் தேடி, அவன் அங்கு இல்லை என்றபோது, காவல்காரர்களை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயா நாட்டைவிட்டு செசரியா பட்டணத்திற்குப்போய், அங்கே தங்கியிருந்தான். அப் 16:27யோவா 12:10-11சங் 37:32-331 இராஜா 20:431 சாமு 23:14அப் 12:4அப் 12:6அப் 21:8 அக்காலத்திலே ஏரோது தீரியர்மேலும் சீதோனியர்மேலும் மிகவும் கோபமாக இருந்தான். தங்களுடைய தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியால், அவர்கள் ஒன்றுசேர்ந்து, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கி, அவன் மூலமாக சமாதானம் கேட்டுக்கொண்டார்கள். எஸ்றா 3:7எசேக் 27:17மத் 11:21-22லூக் 14:31-32லூக் 16:81 இராஜா 5:9-112 நாளாக 2:102 நாளாக 2:15 குறிக்கப்பட்டநாளிலே: ஏரோது ராஜ உடை அணிந்துகொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். அப்பொழுது அனைவரும் இது மனிதனுடைய சத்தமல்ல, இது தேவனுடைய சத்தம்! என்று ஆர்ப்பரித்தார்கள். அப் 14:10-13யூதா 1:16வெளி 13:4தானி 6:7சங் 12:2 அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான். அப் 10:25-26சங் 115:12 தெச 2:4அப் 14:14-151 சாமு 25:38தானி 4:30-37தானி 5:18-242 சாமு 24:16-17 தேவவசனம் வளர்ந்து பெருகியது. அப் 6:72 தெச 3:1அப் 19:20அப் 11:21மத் 16:18கொலோ 1:6அப் 5:39தானி 2:24 பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை முடித்தபின்பு மாற்கு என்னும் மறுபெயர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள். அப் 12:121 பேது 5:13அப் 15:37அப் 11:29-30அப் 4:36அப் 13:1-52