தேவனுடைய விருப்பத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், ரோம 1:1எபே 1:12 கொரி 1:1அப் 18:17அப் 22:21கொலோ 1:11 கொரி 9:1-21 தீமோ 1:1 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாகவும் இருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் அவர்களுக்கும் ஆண்டவராக இருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: ரோம 1:71 கொரி 6:9-111 கொரி 1:30அப் 26:181 பேது 1:15-161 தெச 4:7எபி 13:122 கொரி 4:5 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ரோம 1:71 பேது 1:22 கொரி 1:2எபே 1:2
நன்றிசெலுத்துதல்
கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே உறுதிப்படுத்தப்பட்டபடியே, ரோம 1:8யோவா 14:261 தீமோ 1:14யோவா 14:14யோவா 14:16யோவா 15:26ரோம 6:171 கொரி 1:3 நீங்கள் இயேசுகிறிஸ்துவிற்குள்ளாக எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், முழு நிறைவுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், 2 கொரி 9:112 கொரி 8:7கொலோ 2:3பிலி 1:9ரோம 15:141 கொரி 12:8யாக் 3:132 பேது 3:18 அவர் மூலமாக உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 2 தீமோ 1:8வெளி 1:21 தீமோ 2:61 கொரி 2:1-22 கொரி 12:12அப் 20:24வெளி 19:10ரோம 15:19 அப்படியே நீங்கள் எந்த ஒரு வரத்திலும் குறைவில்லாதவர்களாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். பிலி 3:202 பேது 3:121 யோவா 3:2எபி 9:281 பேது 4:13யூதா 1:21லூக் 17:30ரோம 8:19 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இறுதிவரைக்கும் அவர் உங்களை உறுதிப்படுத்துவார். 1 தெச 5:23-241 தெச 3:13கொலோ 1:22பிலி 1:6யூதா 1:24-252 தெச 3:3எபே 5:27ரோம 16:25 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். 2 தெச 3:3எபி 10:23உபா 7:91 யோவா 1:31 கொரி 10:13உபா 32:4ரோம 8:28ஏசா 49:7
கொரிந்து சபையில் பிரிவினைகள்
சகோதரர்களே, நீங்களெல்லோரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகள் இல்லாமல் ஒரே மனதும் ஒரே யோசனையும் உள்ளவர்களாகச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். பிலி 2:1-4எபே 4:1-71 கொரி 12:25ரோம 12:16யாக் 3:13-182 கொரி 13:11எபே 4:31-32சங் 133:1 ஏனென்றால், என் சகோதரர்களே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. 1 தீமோ 6:42 தீமோ 2:23-25கலா 5:26நீதி 18:61 கொரி 3:31 சாமு 25:14-172 கொரி 12:20கலா 5:15 உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். மத் 23:9-101 கொரி 3:21-23யோவா 1:421 கொரி 3:4-61 கொரி 15:51 கொரி 15:501 கொரி 16:121 கொரி 4:6 கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? எபே 4:52 கொரி 11:4அப் 2:381 கொரி 10:2அப் 10:48அப் 19:52 கொரி 5:14-15கலா 1:7 என் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன் என்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, அப் 18:8ரோம 16:231 கொரி 1:41 கொரி 14:181 தெச 5:182 கொரி 2:143 யோவா 1:1-4கொலோ 3:15 நான் கிறிஸ்புவிற்கும் காயுவிற்கும்தவிர, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை; இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 2 கொரி 11:2யோவா 3:28-29யோவா 7:18 ஸ்தேவானுடைய குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் வேறு யாருக்காவது நான் ஞானஸ்நானம் கொடுத்தேனோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. 1 கொரி 16:151 கொரி 16:17அப் 16:15அப் 16:33 ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாகப் போகாதபடிக்கு, மனித ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார். 1 கொரி 2:11 கொரி 2:132 பேது 1:161 கொரி 2:4-52 கொரி 10:102 கொரி 4:2யோவா 4:22 கொரி 10:3-4
தேவபெலனும், தேவஞானமும்
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது. 1 கொரி 2:14ரோம 1:162 தெச 2:101 கொரி 1:23-252 கொரி 4:31 கொரி 1:212 கொரி 2:15-161 கொரி 3:19 அந்தப்படி: ஏசா 29:14எரே 8:91 கொரி 3:19யோபு 5:12-13ஏசா 19:11ஏசா 19:3
“ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து,
புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது.
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? ரோம 1:221 கொரி 3:19யோபு 12:171 கொரி 1:19ஏசா 44:25யோபு 12:241 கொரி 2:62 சாமு 15:31 எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது. லூக் 10:21மத் 11:25ரோம 1:20-221 கொரி 1:24எபே 3:10தானி 2:20ரோம 1:28ரோம 11:33 யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்; மத் 16:1-4அப் 17:18-21யோவா 2:18லூக் 11:16மத் 12:38-39மாற் 8:11லூக் 11:20யோவா 4:28 நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார். 1 கொரி 2:141 கொரி 2:21 பேது 2:8கலா 5:11ஏசா 8:14-151 கொரி 1:18லூக் 2:34மத் 11:6 ஆனாலும் யூதர்களானாலும் கிரேக்கர்களானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார். 1 கொரி 1:30கொலோ 2:31 கொரி 1:181 கொரி 1:9ரோம 1:16ரோம 8:28-30ரோம 1:4லூக் 7:35 இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய பலவீனம் எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது. ரோம 11:33-361 கொரி 1:18சகரி 4:6-72 கொரி 13:41 கொரி 1:27-29நியாயாதி 7:2-8சகரி 12:7-81 இராஜா 20:14-22 எப்படியென்றால், சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மனிதர் பார்வையில் ஞானிகள் அநேகர் இல்லை, வல்லவர்கள் அநேகர் இல்லை, பிரபுக்கள் அநேகர் இல்லை. யாக் 2:51 கொரி 3:18-20யாக் 1:9-111 கொரி 2:8மத் 11:25-261 கொரி 1:20லூக் 10:21லூக் 18:24-25 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். யாக் 2:5மத் 11:251 கொரி 1:20சங் 8:2லூக் 21:15ஏசா 29:142 கொரி 10:4-5அப் 4:11-21 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாக எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். யோபு 34:24ரோம 4:17ஏசா 2:11யோபு 34:19-20ஏசா 2:17ஏசா 41:12தானி 2:34-35ஏசா 17:13-14 மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். ரோம 3:27எபே 2:9எரே 9:231 கொரி 1:311 கொரி 4:7ரோம 15:17ரோம 3:191 கொரி 5:6 அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவிற்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, எபே 1:7பிலி 3:9ரோம 8:11 கொரி 1:21 கொரி 6:11கொலோ 1:14எபே 2:10யோவா 14:6 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். எரே 9:23-242 கொரி 10:17பிலி 3:3சங் 105:3ஏசா 41:161 நாளாக 16:10ஏசா 45:25எரே 4:2