சகரியா 4

Zechariah 4
அத்தியாயம் 4

குத்துவிளக்கும் ஒலிவமரங்களும்

என்னுடன் பேசின தூதன் திரும்பி வந்து தூங்குகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி: தானி 8:18எரே 31:26சகரி 1:9சகரி 1:191 இராஜா 19:5-7லூக் 22:45-46லூக் 9:32சகரி 2:3 நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. வெளி 4:5வெளி 1:12மத் 5:14-16யாத் 25:31-38எரே 52:19சகரி 5:21 நாளாக 28:151 இராஜா 7:49-50 அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். வெளி 11:4ரோம 11:17சகரி 4:14சகரி 4:11-12நியாயாதி 9:9ரோம 11:24 நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். மத் 13:36சகரி 1:9சகரி 6:4தானி 12:8சகரி 1:19சகரி 5:6தானி 7:16-19வெளி 7:13-14 என்னுடன் பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். சகரி 4:131 கொரி 2:12-15மாற் 4:13தானி 2:30ஆதி 41:16சங் 139:6சகரி 1:9 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற யெகோவாவுடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 2 நாளாக 32:7-82 கொரி 10:4-51 கொரி 2:4-5சங் 33:16ஏசா 11:2-4சங் 20:6-8சங் 33:20-21ஓசி 1:7 பெரிய மலையே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார். எரே 51:25சகரி 4:9மீகா 4:1சங் 118:22சங் 114:41 பேது 2:7ஆகா 2:21-23ஏசா 41:15 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் யெகோவா என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய். எஸ்றா 6:14-15சகரி 6:12-13எஸ்றா 5:16எபி 12:2சகரி 6:15எஸ்றா 3:8-13யோவா 17:21யோவா 3:17 அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைசெய்யலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய யெகோவாவுடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலை சந்தோஷமாகப் பார்க்கிறது என்றார். யோபு 8:71 கொரி 1:28-292 நாளாக 16:9மத் 13:31-33ஆகா 2:3நீதி 15:3நீதி 4:18வெளி 5:6 பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்கிற்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன். சகரி 4:3வெளி 11:4 மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாகத் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கச்செய்கிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன். மத் 20:23வெளி 11:4ஆகா 1:1 அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். சகரி 4:5எபி 5:11-12 அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார். வெளி 11:4ஏசா 61:1-3தானி 9:24-26யாத் 40:15சகரி 3:1-7சகரி 6:131 சாமு 10:11 சாமு 16:1