பிரதான ஆசாரியனுடைய தரிசனம்
அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் யெகோவாவுடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதம் செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான். லூக் 22:311 பேது 5:8வெளி 12:9-10யோபு 2:1-8சங் 109:6யோபு 1:6-121 நாளாக 21:1ஆகா 1:1 அப்பொழுது யெகோவா 1 சாத்தானை நோக்கி: யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார். ஆமோ 4:11யூதா 1:23யூதா 1:9ரோம 8:331 யோவா 3:8சகரி 1:17ரோம 16:20வெளி 12:9-10 யோசுவாவோ என்றால் அழுக்கு உடை அணிந்தவனாகத் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். ஏசா 64:6எஸ்றா 9:15வெளி 19:8வெளி 7:13-142 நாளாக 30:18-20தானி 9:18மத் 22:11-13 அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு உடைகளைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிடத்திலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த உடையை உடுத்தினேன் என்றார். ஏசா 61:10லூக் 15:22எசேக் 36:25வெளி 7:14வெளி 19:7-8ஏசா 43:25ஏசா 61:3மீகா 7:18 அவன் தலையின்மேல் சுத்தமான தலைப்பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான தலைப்பாகையை அவன் தலையின்மேல் வைத்து, அவனுக்கு ஆடைகளை உடுத்தினார்கள்; யெகோவாவுடைய தூதன் அங்கே நின்றார். சகரி 6:11யாத் 29:6யோபு 29:14யாத் 28:2-4எபி 2:8-9லேவி 8:6-9வெளி 4:10வெளி 4:4 யெகோவாவுடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக: யாத் 23:20-21எரே 11:7அப் 7:35-38ஆதி 22:15-16ஆதி 28:13-17ஆதி 48:15-16ஓசி 12:4ஏசா 63:9 சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் ஆலய வளாகங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன். மத் 19:282 தீமோ 4:1-2எசேக் 44:15-16ஆதி 26:51 தீமோ 6:13-141 கொரி 6:2-31 இராஜா 2:3எரே 15:19-21 இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழர்களும் கேட்கட்டும்; இவர்கள் அடையாளமாயிருக்கிற மனிதர்கள்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரச்செய்வேன். ஏசா 11:1எரே 23:5சகரி 6:12ஏசா 42:1ஏசா 53:2எரே 33:15ஏசா 20:3ஏசா 4:2 இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். சகரி 4:10எரே 50:20வெளி 5:6ஏசா 28:16எரே 31:34சங் 118:221 பேது 2:4-8எபி 9:25-26 அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சைச்செடியின்கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார். 1 இராஜா 4:25மீகா 4:4ஓசி 2:18ஏசா 36:16யோவா 1:45-48சகரி 2:11