வெளிப்படுத்தின விசேஷம் 12

Revelation 12
அத்தியாயம் 12

பெண்ணும் இராட்சசப் பாம்பும்

அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு பெண் சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் தலையின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. லூக் 21:25எபே 5:32ஏசா 62:3லூக் 21:11ஏசா 60:19-20ஏசா 54:5-7சங் 84:11உன்னத 6:10 அவள் கர்ப்பவதியாக இருந்து, பிரசவவேதனையடைந்து, குழந்தைபெறும்படி கதறி அழுதாள். யோவா 16:21கலா 4:19ஏசா 66:7-9மீகா 5:3வெளி 12:4ஏசா 53:11கலா 4:27ஏசா 54:1 அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு கிரீடங்களையுடைய சிவப்பான பெரிய இராட்சசப் பாம்பு இருந்தது. வெளி 17:12தானி 7:24வெளி 12:9தானி 7:20வெளி 17:16வெளி 12:1வெளி 12:4வெளி 17:3-4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளியது; பிரசவவேதனைப்படுகிற அந்தப் பெண் குழந்தைபெற்றவுடனே, அவளுடைய குழந்தையைக் கொன்றுபோடுவதற்காக அந்த இராட்சசப் பாம்பு அவளுக்கு முன்பாக நின்றது. தானி 8:9-12வெளி 12:9யோவா 8:44வெளி 12:2-31 பேது 5:8யாத் 1:16மத் 2:3-16வெளி 8:7 எல்லா தேசங்களையும் இரும்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய குழந்தை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. வெளி 19:15வெளி 2:26-27சங் 2:9-10வெளி 12:2ஏசா 7:14மத் 1:25மீகா 5:3வெளி 11:12 அந்தப் பெண் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள்; அவளை ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அங்கே இருந்தது. வெளி 11:2-3வெளி 13:5வெளி 12:141 இராஜா 17:3-6வெளி 12:41 இராஜா 19:4-8மத் 4:111 இராஜா 17:9-16 வானத்திலே யுத்தம் உண்டானது; அந்த யுத்தத்தில் மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் இராட்சசப் பாம்போடு யுத்தம்பண்ணினார்கள்; இராட்சசப் பாம்பும் அதைச் சேர்ந்த தூதர்களும் யுத்தம்பண்ணியும் வெற்றி பெறமுடியவில்லை. யூதா 1:9தானி 12:1எபே 6:122 பேது 2:4தானி 10:13தானி 10:21வெளி 20:2வெளி 12:3-4 பரலோகத்தில் அவர்கள் இருந்த இடமும் காணாமல்போனது. சங் 37:10வெளி 12:11எரே 1:19யூதா 1:6அப் 1:25எரே 5:22யோபு 20:9யோபு 27:21-23 உலகம் முழுவதையும் ஏமாற்றுகிறவன் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய பெரிய இராட்சசப் பாம்பு தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதோடு அதைச் சேர்ந்த தூதர்களும் தள்ளப்பட்டார்கள். லூக் 10:18யோவா 12:31வெளி 20:101 யோவா 5:19ஏசா 14:122 கொரி 4:4யோபு 2:1-2வெளி 20:2-3 அப்பொழுது வானத்திலே ஒரு பெரியசத்தம் உண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சாட்டும்படி அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தூக்கி எறியப்பட்டான். லூக் 22:31சகரி 3:1-2வெளி 11:15தானி 2:441 நாளாக 29:11மத் 28:18யோபு 1:11யோபு 1:9 மரணம் சம்பவிக்கிறதாக இருந்தாலும் அதற்குத் தப்பிப்பதற்காக தங்களுடைய உயிரையும் பார்க்காமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்களுடைய சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். 2 கொரி 10:3-5யோவா 16:331 யோவா 5:51 கொரி 15:57ரோம 16:20அப் 20:24வெளி 2:26எபி 2:14-15 எனவே, பரலோகங்களே! அவைகளில் வசிக்கிறவர்களே! களிகூருங்கள். ஆனால், பூமியிலும் கடலிலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலம்மட்டும் இருக்கிறதைத் தெரிந்து, அதிக கோபப்பட்டு, உங்களிடம் இறங்கினதினால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்வதைக்கேட்டேன். ஏசா 49:13சங் 96:11-13வெளி 18:20வெளி 8:13வெளி 10:6லூக் 15:10சங் 148:1-4வெளி 19:1-7 இராட்சசப் பாம்பானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துன்பப்படுத்தினது. ஆதி 3:15யோவா 16:33வெளி 12:3-5சங் 37:12-14 அந்தப் பெண் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாக வனாந்திரத்தில் உள்ள தன் இடத்திற்குப் பறந்துபோவதற்காக பெரிய கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. யாத் 19:4ஏசா 40:31வெளி 12:6தானி 12:7தானி 7:25உபா 32:11-12சங் 55:6வெளி 11:2-3 அப்பொழுது அந்தப் பெண்ணை வெள்ளம் அடித்துக்கொண்டுபோகும்படி பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற தண்ணீரை அவளுக்குப் பின்பாக ஊற்றிவிட்டது. ஏசா 8:7ஏசா 59:19சங் 18:4சங் 65:7ஏசா 28:2சங் 93:3-4வெளி 17:15 ஆனால், பூமியானது பெண்ணுக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, இராட்சசப் பாம்பு தன் வாயிலிருந்து ஊற்றின தண்ணீரை விழுங்கினது. 1 இராஜா 17:6யாத் 12:35-362இராஜா 8:9 அப்பொழுது இராட்சசப் பாம்பு பெண்ணின்மேல் கோபப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய வம்சத்தின் மற்ற பிள்ளைகளோடு யுத்தம்பண்ணப் போனது. வெளி 14:12ஆதி 3:15வெளி 19:10வெளி 1:2வெளி 11:7வெளி 6:9வெளி 13:7தானி 7:23-26