சகோதரர்களே, இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையும்குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. அப் 1:71 தெச 4:9மத் 24:36மத் 24:3மாற் 13:30-322 கொரி 9:1யூதா 1:3 இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள். வெளி 16:152 பேது 3:10மத் 24:42-44வெளி 3:3லூக் 12:39-40மத் 25:13மாற் 13:34-35எரே 23:20 சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. லூக் 21:34-35மத் 24:37-39லூக் 17:26-30வெளி 18:7-82 தெச 1:9எபி 2:3சங் 73:18-202 பேது 2:4 சகோதரர்களே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் இருளில் இருக்கிறவர்களில்லையே. 1 யோவா 2:81 பேது 2:9-102 பேது 3:10கொலோ 1:13உபா 19:6உபா 28:15உபா 28:45எரே 42:16 நீங்களெல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாக இருக்கிறீர்கள்; நாம் இரவிற்கும் இருளுக்கும் உரியவர்களல்ல. எபே 5:8அப் 26:18யோவா 12:36லூக் 16:8 ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம். 1 பேது 1:13மத் 24:42லூக் 22:461 பேது 5:8ரோம 13:11-14வெளி 16:151 கொரி 16:13எபே 5:14 தூங்குகிறவர்கள் இரவிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இரவிலே வெறிகொள்ளுவார்கள். ரோம 13:131 கொரி 15:342 பேது 2:13அப் 2:15தானி 5:4-5எபே 5:14ஏசா 21:4-5லூக் 21:34-35 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்புக்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம். ரோம 13:12-131 பேது 1:13எபே 6:11ஏசா 59:17எபி 10:35-361 கொரி 13:13எபி 6:191 தெச 5:5 தேவன் நம்மைத் தண்டிப்பதற்காக நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். 1 தெச 1:101 பேது 2:102 தீமோ 2:10அப் 13:48நீதி 16:41 தெச 3:3ரோம 9:11-231 பேது 2:8 நாம் உயிரோடிருக்கிறவர்களானாலும், மரித்தவர்களானாலும், அவரோடு நாம் ஒன்றாகப் பிழைத்திருப்பதற்காக அவர் நமக்காக மரித்தாரே. ரோம 14:8-91 பேது 3:182 கொரி 5:15எபே 5:2மத் 20:281 பேது 2:241 தெச 4:172 கொரி 5:21 ஆகவே, நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவளர்ச்சி உண்டாகும்படிச் செய்யுங்கள். எபே 4:29ரோம 15:2எபி 10:25எபி 3:131 தெச 4:18ரோம 14:191 கொரி 14:12எபே 4:12
இறுதி அறிவுரைகள்
அன்றியும், சகோதரர்களே, உங்களுக்குள்ளே கடுமையாக உழைத்து, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாக இருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, எபி 13:17எபி 13:71 தீமோ 5:17-181 கொரி 16:181 கொரி 16:161 கொரி 15:10தீத் 1:31 கொரி 3:9 அவர்களுடைய செயல்களின் அடிப்படையில் அவர்களை மிகவும் அன்பாக நினைத்துக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாக இருங்கள். மாற் 9:50எபி 12:141 கொரி 9:7-11கலா 6:6யாக் 3:18யோவா 13:34-351 கொரி 4:1-2எபே 4:3 மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள். 2 தீமோ 4:2ரோம 14:1அப் 20:352 தெச 3:6-7ஏசா 35:3-41 கொரி 13:4-52 தெச 3:11-13கலா 6:1-2 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள். 1 பேது 3:9கலா 6:10லேவி 19:183 யோவா 1:11ரோம 12:17-21எபி 12:141 பேது 3:11-131 பேது 2:22-23 எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள். ரோம 12:12பிலி 4:4மத் 5:122 கொரி 6:10லூக் 10:20 இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள். ரோம 12:12கொலோ 4:2எபே 6:18லூக் 18:1லூக் 21:361 பேது 4:7 எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. எபே 5:20பிலி 4:6கொலோ 3:17எபி 13:15யோபு 1:211 பேது 4:2சங் 34:11 பேது 2:15 ஆவியை அவித்துப்போடாமலிருங்கள். எபே 4:30அப் 7:512 தீமோ 1:61 தீமோ 4:14ஏசா 63:10நெகே 9:30சங் 51:11ஆதி 6:3 தீர்க்கதரிசனங்களை சாதாரணமாக எண்ணாதிருங்கள். 1 கொரி 14:3-61 கொரி 14:11 கொரி 11:41 கொரி 14:37-39எண் 11:25-291 கொரி 14:22-25அப் 19:61 கொரி 12:28 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். 1 யோவா 4:1ரோம 12:2எபே 5:10லூக் 12:57அப் 17:11பிலி 4:8ரோம 12:91 கொரி 2:14-15 தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள். 2 கொரி 6:3பிலி 4:82 கொரி 8:20-211 கொரி 10:31-33ரோம 12:17யாத் 23:71 கொரி 8:131 தெச 4:12 சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. யூதா 1:241 கொரி 1:8-9எபி 4:121 தெச 3:131 பேது 5:10எபே 5:26-27பிலி 1:6பிலி 1:10 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 2 தெச 3:3எண் 23:19உபா 7:91 கொரி 1:91 பேது 5:102 தீமோ 2:13ஏசா 25:1புலம் 3:23 சகோதரர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். எபி 13:18-19பிலி 1:192 கொரி 1:11பிலே 1:22கொலோ 4:3எபே 6:18-20ரோம 15:302 தெச 3:1-3 சகோதரர்கள் எல்லோரையும் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். ரோம 16:161 கொரி 16:20 இந்தக் கடிதம் பரிசுத்தமான சகோதரர்கள் எல்லோருக்கும் வாசிக்கப்படவேண்டுமென்று கர்த்தரின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். கொலோ 4:162 தீமோ 4:11 இராஜா 22:161 தீமோ 1:31 தீமோ 5:211 தீமோ 5:72 நாளாக 18:15அப் 19:13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென். ரோம 16:202 தெச 3:18ரோம 1:7ரோம 16:23