அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல்
எந்த மனிதனும் உயர் அதிகாரம் உள்ளவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்; ஏனென்றால், தேவனாலேயல்லாமல் ஒரு அதிகாரமும் இல்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. தீத் 3:11 பேது 2:13-17தானி 2:21யோவா 19:11நீதி 8:15-16எரே 27:5-8யூதா 1:8தானி 5:18-23 எனவே, அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனையை வரவழைத்துக்கொள்கிறார்கள். 1 பேது 2:13தீத் 3:1யாக் 3:1ரோம 13:5லூக் 20:47மாற் 12:40மத் 23:13எரே 23:8-17 மேலும் அதிகாரிகள் நல்ல செயல்களுக்கு அல்ல, தீய செயல்களுக்கே பயங்கரமாக இருக்கிறார்கள்; எனவே, நீ அதிகாரத்திற்குப் பயப்படாமல் இருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். பிரச 10:4-61 பேது 2:13-14நீதி 14:35நீதி 20:2உபா 25:11 பேது 3:13-14எரே 22:15-18ரோம 13:4 உனக்கு நன்மை உண்டாவதற்காக, அவன் தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் வீணாகப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபத்தின் தண்டனையை வரப்பண்ணுவதற்காக, அவன் நீதியைச் செலுத்துகிற தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறானே. ரோம 12:192 நாளாக 19:6நீதி 24:23-24நீதி 16:14நீதி 20:21 தெச 4:6ஏசா 1:17சங் 82:2-4 எனவே, நீங்கள் கோபத்தின் தண்டனைக்காக மட்டுமில்லை, மனச்சாட்சிக்காகவும் கீழ்ப்படியவேண்டும். 1 பேது 2:19அப் 24:16பிரச 8:21 பேது 2:13-151 சாமு 24:5-6தீத் 3:1-21 பேது 3:16எபி 13:18 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்களே. மத் 22:17-21லூக் 20:21-26லூக் 23:2மத் 17:24-27மாற் 12:14-171 நாளாக 18:142 சாமு 8:5உபா 1:9-17 எனவே எல்லோருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; யாருக்கு வரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு வரியையும், யாருக்கு சொத்துவரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு சொத்துவரியையும் செலுத்துங்கள்; யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்குப் பயப்படுங்கள்; யாருக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அவனுக்கு மதிப்புக் கொடுங்கள். லூக் 20:251 பேது 2:17-18மத் 17:25நீதி 24:211 தீமோ 5:17மத் 22:21எபே 6:51 பேது 3:7
அன்பும் நியாயப்பிரமாணமும்
ஒருவரிலொருவர் அன்பு செலுத்துகிற கடனைத்தவிர, வேறு எதிலும் யாருக்கும் கடன்படாமல் இருங்கள்; அயலகத்தாரிடம் அன்புசெலுத்துகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். ரோம 13:10மத் 22:39-40கலா 5:14மத் 7:12நீதி 3:27-28யோவா 13:34ரோம 13:7யாக் 2:8 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சிக்காமல் இருப்பாயாக என்கிற இந்தக் கட்டளைகளும், வேறு எந்தக் கட்டளையும், உன்னிடத்தில் நீ அன்பாக செலுத்துவதுபோல மற்றவனிடமும் அன்புசெலுத்துவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது. யாத் 20:12-17மத் 22:39மாற் 12:31லூக் 10:27உபா 5:16-21லேவி 19:18மத் 19:18-19ரோம 7:7-8 அன்பு மற்றவனுக்கு தீமை செய்யாது; எனவே, அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது. ரோம 13:8மத் 22:39-401 கொரி 13:4-7 தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரமானது என்று, நாம் நேரத்தை அறிந்தவர்களாக, இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு அருகில் இருந்ததைவிட இப்பொழுது அது நமக்கு மிக அருகில் இருக்கிறது. 1 தெச 5:5-81 பேது 4:7எபே 5:141 கொரி 15:34மத் 24:42-44மாற் 13:35-371 தெச 5:1-32 பேது 3:13-15 இரவு கடந்துபோனது, பகல் அருகில் வந்துவிட்டது; எனவே, இருளின் செயல்களை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். எசேக் 18:31-32எபே 5:112 கொரி 6:7கொலோ 3:8-17எபே 6:11-18யாக் 1:21எபே 4:22ரோம 13:14 களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நடக்காமல், பகலிலே நடக்கிறவர்கள்போல ஒழுங்காக நடப்போம். கலா 5:21எபே 5:181 தெச 4:3-51 பேது 4:3-51 தெச 4:12எபே 5:151 யோவா 2:6லூக் 21:34 தீய இச்சைகளுக்கு இடமாக சரீரத்தைக் கொடுக்காமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள். எபே 4:24கலா 5:16-17கலா 3:271 பேது 2:11கலா 5:24கொலோ 3:10-12ரோம 8:12-131 யோவா 2:15-17