பரிசுத்த ஆவியானவரின் வரங்கள்
அன்றியும், சகோதரர்களே, ஆவியானவருக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாமலிருக்க எனக்கு மனதில்லை. 1 கொரி 12:4-11எபே 4:111 கொரி 14:1-181 கொரி 14:372 பேது 3:81 கொரி 10:11 தெச 4:132 கொரி 1:8 நீங்கள் தேவனை அறியாதவர்களாக இருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. 1 பேது 4:31 தெச 1:9சங் 115:5கலா 4:8எபே 2:11-121 கொரி 6:11ஆப 2:18-19எரே 10:5 ஆதலால், தேவனுடைய ஆவியானவராலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவன் என்று சொல்லமாட்டான் என்றும், பரிசுத்த ஆவியானவரைத்தவிர வேறு ஒருவனும் இயேசுவைக் கர்த்தரென்று சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 1 யோவா 4:2-3மத் 16:16-17ரோம 10:92 கொரி 3:5யோவா 13:131 கொரி 8:6யோவா 15:26மத் 22:43 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. 1 பேது 4:101 கொரி 12:28ரோம 12:4-61 கொரி 12:8-11எபி 2:4எபே 4:4-6எபே 4:11 ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. எபே 4:11-12ரோம 12:6-8ரோம 14:8-91 கொரி 8:6மத் 23:101 கொரி 12:28-29அப் 10:36பிலி 2:11 கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லோருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. 1 கொரி 3:71 கொரி 12:11எபி 13:21யோவா 5:17கொலோ 1:29கொலோ 3:11எபே 4:6பிலி 2:13 ஒவ்வொருவனுக்கும் அருளப்பட்ட ஆவியானவரின் வரங்கள் அனைவருடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. 1 பேது 4:10-11ரோம 12:6-81 கொரி 14:191 கொரி 14:121 கொரி 14:171 கொரி 14:22-26எபே 4:7-121 கொரி 14:5 எப்படியென்றால், ஒருவனுக்கு ஆவியானவராலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே அறிவை உணர்த்தும் வசனமும், நீதி 2:61 கொரி 2:6-10எபே 1:17-181 கொரி 1:52 கொரி 8:7சங் 143:101 கொரி 1:30ஆதி 41:38-39 வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே குணமாக்கும் வரங்களும், யாக் 5:14-152 கொரி 4:13எபே 2:8எபி 11:331 கொரி 13:2மத் 17:19-201 கொரி 12:28மத் 21:21 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல மொழிகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு மொழிகளை வியாக்கியானம் செய்தலும் அளிக்கப்படுகிறது. 1 கொரி 14:391 யோவா 4:1மாற் 16:171 கொரி 12:28-301 கொரி 14:31-32யோவே 2:281 கொரி 14:26-29கலா 3:5 இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது விருப்பத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார். 1 கொரி 12:4எபி 2:42 கொரி 10:131 கொரி 12:6எபே 4:71 கொரி 7:171 கொரி 7:7தானி 4:35
கிறிஸ்துவின் சரீரம்
எப்படியென்றால், சரீரம் ஒன்று, அதற்கு உறுப்புகள் அநேகம்; ஒரே சரீரத்தின் உறுப்புகளெல்லாம் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றாகவே இருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். ரோம 12:4-5கொலோ 3:151 கொரி 12:27எபே 4:15-16கொலோ 2:19எபே 5:301 கொரி 10:17எபே 4:4 நாம் யூதர்களானாலும், கிரேக்கர்களானாலும், அடிமைகளானாலும், சுயாதீனர்களானாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டு, எல்லோரும் ஒரே ஆவியானவருக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம். எபே 4:5கொலோ 3:11கலா 3:28யோவா 7:37-391 பேது 3:21ரோம 6:3-6அப் 1:5எபே 2:11-22 சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது. 1 கொரி 12:27-281 கொரி 12:121 கொரி 12:19எபே 4:25 காலானது நான் கையாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ? நியாயாதி 9:8-152இராஜா 14:9 காதானது நான் கண்ணாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ? ரோம 12:31 கொரி 12:22பிலி 2:3ரோம 12:10 சரீரம் முழுவதும் கண்ணாக இருந்தால், கேட்கும் திறன் எங்கே? அது முழுவதும் காதாக இருந்தால், மோப்பம் செய்யும் திறன் எங்கே? சங் 139:13-161 கொரி 12:21நீதி 20:12சங் 94:91 கொரி 12:291 சாமு 9:9 தேவன் தமது விருப்பத்தின்படி உறுப்புகள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். 1 கொரி 12:28ரோம 12:31 கொரி 12:111 கொரி 3:5லூக் 12:321 கொரி 12:24லூக் 10:21சங் 135:6 அவையெல்லாம் ஒரே உறுப்பாக இருந்தால், சரீரம் எங்கே? உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே. 1 கொரி 12:141 கொரி 12:12 கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு தேவையில்லையென்றும்; தலையானது கால்களைப் பார்த்து: நீங்கள் எனக்குத் தேவையில்லையென்றும் சொல்லமுடியாது. எஸ்றா 10:1-5நெகே 4:16-21யோபு 29:111 சாமு 25:32எண் 10:31-32 சரீர உறுப்புகளில் பலவீனமுள்ளவைகளாகக் காணப்படுகிறவைகளே மிகவும் தேவையானவைகளாக இருக்கிறது. நீதி 14:28பிரச 9:14-15பிரச 4:9-122 கொரி 1:11பிரச 5:9தீத் 2:9-10 மேலும், சரீர உறுப்புகளில் கனவீனமாகக் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; ஆதி 3:21ஆதி 3:7 நம்மில் இலட்சணமானவைகளுக்கு அலங்கரிப்பு தேவையில்லை. ஆதி 2:25ஆதி 3:11 சரீரத்திலே பிரிவினை உண்டாகாமல், உறுப்புகள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாக இருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். 2 கொரி 13:111 கொரி 1:10-12யோவா 17:21-262 கொரி 8:161 கொரி 3:32 கொரி 7:12 ஆதலால் ஒரு உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து பாடுபடும்; ஒரு உறுப்பு மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து சந்தோஷப்படும். ரோம 12:15கலா 6:2எபி 13:31 பேது 3:82 கொரி 11:28-29 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாகவும், தனித்தனியே உறுப்புகளாகவும் இருக்கிறீர்கள். எபே 4:12எபே 5:30கொலோ 1:24ரோம 12:51 கொரி 12:121 கொரி 12:14-20எபே 1:23எபே 5:23 தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், உதவி செய்யும் ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித அந்நிய மொழிகளையும் ஏற்படுத்தினார். எபே 4:11-13ரோம 12:6-81 கொரி 12:181 கொரி 12:7-111 தீமோ 5:17எபே 2:20எபே 3:5எபி 13:24 எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் தீர்க்கதரிசிகளா? எல்லோரும் போதகர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? 1 கொரி 12:4-111 கொரி 12:14-20 எல்லோரும் குணமாக்கும் வரங்களை உடையவர்களா? எல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் வியாக்கியானம் செய்கிறார்களா? 1 கொரி 12:10 இப்படியிருக்க, முக்கியமான வரங்களை விரும்புங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன். 1 கொரி 13:11 கொரி 14:39மத் 5:6பிலி 3:81 கொரி 8:1லூக் 10:42எபி 11:4