எரேமியா 20

Jeremiah 20
அத்தியாயம் 20

எரேமியாவும் பஸ்கூரும்

எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியனான இம்மேருடைய மகனும், யெகோவாவுடைய ஆலயத்து தலைமை விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது, 1 நாளாக 24:14எஸ்றா 2:37-382இராஜா 25:18நெகே 7:40-412 நாளாக 35:8அப் 4:1அப் 5:24 எரேமியா தீர்க்கதரிசியை பஸ்கூர் அடித்து, அவனைக் யெகோவாவுடைய ஆலயத்தில் பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையில் போட்டான். எரே 37:132 நாளாக 16:10எரே 1:19சகரி 14:101 இராஜா 22:272 நாளாக 24:21ஆமோ 7:10-13எரே 29:26 மறுநாளில் பஸ்கூர் 1 எரேமியாவைக் காவலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: யெகோவா உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர் மீசாபீப் என்று அழைக்கிறார். எரே 20:10எரே 46:5புலம் 2:22சங் 31:13ஏசா 8:3எரே 6:25அப் 16:30அப் 16:35-39 மேலும் யெகோவா: இதோ, நான் உன்னையும், உன் எல்லா நண்பர்களையும் பயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் எதிரிகளின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய்ச் சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான். எரே 29:21எரே 25:9எரே 21:4-10எரே 32:27-31எரே 39:6-72இராஜா 25:7உபா 28:32-34உபா 28:65-67 இந்த நகரத்தின் எல்லாப் பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும், அதின் அருமையான எல்லாப் பொருட்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் எதிரிகள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவைகளைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள். எசேக் 22:25எரே 15:132 நாளாக 36:102இராஜா 20:17-182இராஜா 24:12-162இராஜா 25:13-17எரே 17:3புலம் 1:10 பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் வாசமாயிருக்கிற அனைவரும் சிறைப்பட்டுப்போவீர்கள்; நீயும் உன் கள்ளத் தீர்க்கதரிசனத்திற்கு காதுகொடுத்த உன் நண்பர்கள் அனைவரும் பாபிலோனுக்குப் போய், அங்கே இறந்து, அங்கே அடக்கம் செய்யப்படுவீர்களென்று சொல்லுகிறார் என்றான். எரே 14:14-15புலம் 2:14எசேக் 22:28எரே 20:42 பேது 2:1-3அப் 13:8-11உபா 28:25எசேக் 13:22-23

எரேமியாவின் முறையீடு

யெகோவாவே, என்னை இணங்கச் செய்தீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லோரும் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள். ஓசி 9:7எரே 20:9புலம் 3:14எசேக் 3:14சங் 22:6-7சங் 69:9-121 கொரி 4:9-131 கொரி 9:6 நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் அழிவு என்றும் சத்தமிட்டுச் சொல்கிறேன்; நான் சொன்ன யெகோவாவுடைய வார்த்தை அனுதினமும் எனக்கு நிந்தையும், பரியாசமுமானது. 2 நாளாக 36:16எரே 6:101 பேது 4:14எபி 11:26எபி 13:13எரே 13:13-14எரே 15:1-4எரே 15:13-14 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம் செய்யாமலும் இனிக் யெகோவாவுடைய பெயரில் பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற நெருப்பைப்போல என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து சோர்ந்துபோனேன்; எனக்குப் பொறுக்கமுடியாமல் போனது. சங் 39:3யோபு 32:18-20அப் 4:201 கொரி 9:16-17அப் 17:16எசேக் 3:142 கொரி 5:13-15எரே 6:11 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயம் சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னுடன் சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்வரை காத்திருந்து: ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு, அவனில் கோபத்தைத் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள். சங் 41:9சங் 31:13ஏசா 29:21எரே 18:18அப் 24:13எசேக் 22:9எரே 6:25நீதி 10:18 யெகோவாவோ பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னுடன் இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காததினால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கமுடியாத நிலையான வெட்கம் அவர்களுக்கு உண்டாகும். எரே 1:19எரே 1:8எரே 15:20ஏசா 41:10எரே 17:18சங் 40:14சங் 6:10சங் 35:26 ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள் மனதையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் யெகோவாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் செலுத்திவிட்டேன். எரே 11:20சங் 62:8சங் 54:7எரே 17:10சங் 59:10சங் 139:23சங் 26:2-3சங் 7:9 யெகோவாவைப் பாடுங்கள், யெகோவாவை துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றுகிறார். ஏசா 25:4சங் 69:33சங் 35:9-11சங் 34:6சங் 72:4யாக் 2:5-6சங் 109:30-31 நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக. எரே 15:10யோபு 3:3-16 உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்றும் என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து, அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனிதன் சபிக்கப்படுவானாக. ஆதி 21:5-6எரே 1:5லூக் 1:14 அந்த மனிதன், யெகோவா மனம் மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலையில் அலறுதலையும் மத்தியான வேளையில் கூக்குரலையும் கேட்கக்கடவன். எரே 18:22உபா 29:23எரே 48:3-42 பேது 2:6ஆமோ 1:14ஆமோ 2:2ஆமோ 4:11எசேக் 21:22 என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத கர்ப்பமாக இருப்பதற்காக கர்ப்பத்தில் நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன? யோபு 10:18-19யோபு 3:10-11பிரச 6:3யோபு 3:16 நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாகக்கழிய நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன? யோபு 3:201 பேது 4:14-16யோபு 14:1புலம் 3:11 கொரி 4:9-13சங் 69:19சங் 90:9-102 தீமோ 1:12