சகரியா 14

Zechariah 14
அத்தியாயம் 14

யெகோவாவுடைய நாள்

இதோ, யெகோவாவுடைய நியாயதீர்ப்பு நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். ஏசா 13:9வெளி 16:14ஏசா 2:12அப் 2:20ஏசா 13:6மல்கி 4:1யோவே 2:31யோவே 3:14 எருசலேமிற்கு விரோதமாக போரிடச் சகல தேசங்களையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; பெண்கள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனிதர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான மக்களோ நகரத்தைவிட்டு வெளியேற்றப்படுவதில்லை. லூக் 21:20-24ஏசா 13:16ரோம 9:27-29மத் 24:19-22மாற் 13:14மத் 24:15-16கலா 4:26-27ஏசா 65:6-9 யெகோவா புறப்பட்டு, போர்செய்கிற நாளிலே போராடுவதுபோல் அந்த தேசங்களோடே போராடுவார். சகரி 12:9யோவே 3:9-17சகரி 2:8-9செப்ப 3:192 நாளாக 20:15தானி 2:44-45யாத் 15:1-6யோவே 3:2 அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமிற்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் மையத்திலே கிழக்கு மேற்காக எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். மீகா 1:3-4எசேக் 11:23அப் 1:11-12யோவே 3:12-14சகரி 14:10சகரி 14:7ஏசா 64:1-2நாகூ 1:5-6 அப்பொழுது யெகோவாவின் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாக ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய யெகோவா வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். யூதா 1:14-15ஆமோ 1:1மத் 25:31மத் 16:271 தெச 3:132 தெச 1:7-10உபா 33:2ஏசா 29:6 அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருநேரம் பிரகாசமும் ஒருநேரம் மப்புமாயிருக்கும். யோவா 12:46சங் 112:4சங் 97:10-112 பேது 1:19ஏசா 60:1-3நீதி 4:18-19வெளி 11:15கொலோ 1:12 ஒருநாள் உண்டு, அது யெகோவாவுக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். வெளி 22:51 தெச 5:2தானி 12:4ஏசா 30:26வெளி 21:23அப் 1:7அப் 15:18அப் 17:31 அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்திற்கும், பாதி மேற்குச் சமுத்திரத்திற்கும் போய், மழைக்காலத்திற்கும் கோடைக்காலத்திற்கும் இருக்கும். வெளி 22:1-2யோவா 7:38யோவா 4:14யோவா 4:10வெளி 7:16-17யோவே 3:18ஏசா 49:10எசேக் 47:1-12 அப்பொழுது யெகோவா பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். எபே 4:5-6வெளி 11:15தானி 7:27உபா 6:4ஏசா 2:2-4செப்ப 3:9தானி 2:44-45ஏசா 45:22-25 தேசமெல்லாம் கேபாதுவங்கி எருசலேமிற்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாக மாற்றப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் இடத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற இடம்வரை, கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவங்கி ராஜாவின் திராட்சை ஆலைகள்வரை குடியேற்றப்பட்டிருக்கும். யோசு 15:32சகரி 12:61 இராஜா 15:22எரே 30:18எரே 37:13நியாயாதி 20:45நியாயாதி 20:47எரே 38:7 அதிலே மக்கள் வாசம்செய்வார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாகத் தங்கியிருக்கும். வெளி 22:3ஆமோ 9:15எரே 23:5-6வெளி 21:4சகரி 8:8எசேக் 34:22-29எசேக் 37:26ஏசா 26:1 எருசலேமிற்கு விரோதமாக போர்செய்த எல்லா மக்களையும் யெகோவா வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கும்போதும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும். எசேக் 39:17-20ஏசா 66:15-16மீகா 4:11-13எசேக் 38:18-22மீகா 7:16-17சங் 110:5-6சங் 90:11சகரி 12:9 அந்நாளிலே யெகோவால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும். எசேக் 38:21நியாயாதி 7:22சகரி 12:41 சாமு 14:15-232 நாளாக 20:22-24வெளி 17:12-17சகரி 11:6 யூதாவும் எருசலேமிலே போர்செய்யும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் ஆடைகளும் மகா திரளாகக் கூட்டப்படும். ஏசா 23:18சகரி 12:22 நாளாக 14:13-152இராஜா 7:6-18சகரி 10:4-5சகரி 12:5-72 நாளாக 20:25-27எசேக் 39:17-20 அந்த முகாம்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப்போலவே இருக்கும். சகரி 14:12 பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் யெகோவாகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிப்பதற்காக, வருடாவருடம் வருவார்கள். ஏசா 66:23சகரி 14:17-19ஏசா 66:18-21சகரி 8:20-23ஏசா 60:6-9உபா 31:10-13யோவா 1:49யோவா 7:37-39 அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் யெகோவாகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை பெய்வதில்லை. ஆமோ 4:7-8ஏசா 60:12எரே 14:4யாக் 5:17வெளி 11:6உபா 11:17ஆதி 12:31 இராஜா 17:1 எகிப்தின் வம்சம் எருசலேமுக்கு வராமல் சேராமலும்போனால் அவர்களுக்கு மழை பொழியாது, கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத மக்களைக் யெகோவா வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும். உபா 11:10-11சகரி 14:12சகரி 14:15 இது எகிப்தியருடைய பாவத்திற்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல மக்களுடைய பாவத்திற்கும் வரும் தண்டனை. யோவா 3:19 அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்திற்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும். 1 கொரி 3:16-17யாத் 39:301 பேது 2:5ஏசா 23:18லேவி 8:9யாத் 28:33-36யாத் 37:16லேவி 6:28 அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய யெகோவாவின் ஆலயத்திலே எந்தவொரு கானானியனும் 1 இருப்பதில்லை. எசேக் 44:91 கொரி 10:31யோவே 3:17ரோம 14:6-7மாற் 11:15-17வெளி 22:15எபே 2:19-22யோவா 2:15-16