தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், 2 கொரி 1:11 கொரி 1:1பிலே 1:11 தெச 1:1பிலி 1:1ரோம 1:11 தெச 3:22 தெச 1:1 கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 2 பேது 1:2எபே 1:11 கொரி 1:2ரோம 1:7வெளி 1:4கலா 1:3சங் 16:31 கொரி 4:17
நன்றிசொல்லுதலும் ஜெபமும்
கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு, 1 தெச 1:22 தீமோ 1:3கொலோ 1:9ரோம 1:8-91 கொரி 1:4பிலி 1:3-51 தெச 3:10-13கொலோ 1:13 பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், எபே 1:152 தெச 1:31 தெச 1:3எபி 6:10பிலே 1:51 யோவா 4:163 யோவா 1:3-4கலா 5:6 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். 1 பேது 1:3-4எபே 1:132 தீமோ 4:8தீத் 1:2கொலோ 1:271 கொரி 15:191 பேது 2:2கொலோ 1:23 அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது; யோவா 15:16பிலி 1:11கொலோ 1:231 பேது 5:12ரோம 10:17-18ரோம 16:26தீத் 2:11-121 பேது 1:2-3 அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்; கொலோ 4:12பிலே 1:23கொலோ 4:7எபி 2:171 கொரி 4:22 தீமோ 2:2எபி 3:21 கொரி 4:17 ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான். ரோம 15:302 தீமோ 1:7கலா 5:22ரோம 5:5கொலோ 1:41 பேது 1:22 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், யாக் 3:17பிலி 1:9-11யாக் 1:5எபே 1:15-201 தெச 5:17கொலோ 4:51 பேது 2:15எபி 13:21 எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும், எபே 4:1எபி 13:212 பேது 1:2-3யோவா 15:161 யோவா 3:221 தெச 4:1எபி 13:16யோவா 15:8 சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம். எபே 3:16பிலி 4:13எபே 4:2எபே 6:10ரோம 5:3-52 கொரி 12:9-102 கொரி 4:7யாக் 1:2-4 ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், அப் 20:32எபே 1:11எபே 1:18அப் 26:18எபே 3:6ரோம 8:171 பேது 1:2-52 கொரி 5:5 இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம். எபே 5:8அப் 26:181 பேது 2:9தீத் 3:3-61 தெச 2:12எபே 6:121 கொரி 6:9-11எபே 4:18 குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. எபே 1:7ரோம 3:24-251 பேது 1:19-20எபி 9:12எபி 9:22வெளி 5:9அப் 13:38-39கலா 3:13
கிறிஸ்து முதன்மையானவர்
அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர். எபி 1:3யோவா 14:9யோவா 1:12 கொரி 4:4யோவா 1:18யோவா 1:14சங் 89:272 கொரி 4:6 ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது. ரோம 11:36யோவா 1:31 கொரி 8:6எபி 2:101 நாளாக 29:11எபி 1:2எபே 1:10ஏசா 44:24 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. எபி 1:31 கொரி 8:6அப் 17:28யோவா 1:1-3யோவா 17:5யோவா 8:58கொலோ 1:15சங் 75:3 அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர். எபே 1:22-23வெளி 1:5எபே 4:15-161 கொரி 15:20-23அப் 26:23மத் 28:18சங் 89:271 கொரி 11:3 எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும், கொலோ 2:9யோவா 1:16எபே 1:23கொலோ 2:3கொலோ 3:11யோவா 3:34எபே 1:3எபே 4:10 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது. 2 கொரி 5:18-21எபே 1:101 யோவா 4:9-10கொலோ 1:21-22எபே 2:13-17எபி 2:17ஏசா 9:6-7ரோம 5:1 முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். எபே 2:12தீத் 3:3-7எபே 2:1-3எபே 4:18ரோம 5:9-10எபே 2:19ரோம 8:7-81 கொரி 6:9-11 நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். எபே 5:27எபே 1:4யூதா 1:24எபி 10:10தீத் 2:14ரோம 7:4எபி 10:202 கொரி 11:2 அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன். எபி 3:14எபி 3:6மத் 24:13-14கலா 6:9எபி 10:38அப் 14:22கொலோ 1:5-6ரோம 10:18
பவுலின் பாடுகள்
இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன். ரோம 5:32 தீமோ 1:82 கொரி 1:5-82 தீமோ 2:9-10பிலி 3:102 கொரி 7:4எபே 3:13யாக் 1:2 ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, எபே 3:2கொலோ 1:23கலா 2:7-82 தீமோ 4:2-51 தெச 3:21 தீமோ 4:6ரோம 15:15-191 கொரி 9:17 உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன். லூக் 8:10ரோம 16:25-26எபே 3:3-101 கொரி 2:72 தீமோ 1:10மத் 13:11மாற் 4:11சங் 25:14 யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். யோவா 14:20ரோம 8:10எபே 3:16-171 யோவா 4:4கலா 2:201 கொரி 3:16வெளி 3:20யோவா 14:17 எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம். எபே 5:27எரே 3:15எபே 4:11-13மத் 5:48கொலோ 3:162 தீமோ 2:24-251 கொரி 2:6கொலோ 1:22 அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன். 1 கொரி 15:10எபே 1:191 கொரி 9:25-27எபே 3:7பிலி 2:132 கொரி 12:9-10கொலோ 2:1எபி 13:21