பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ரோம 1:72 தெச 1:1அப் 18:5அப் 20:41 பேது 5:122 கொரி 1:19அப் 16:1-3அப் 17:11
தெசலோனிக்கேயர்களின் விசுவாசத்திற்காக நன்றி சொல்லுதல்
தேவனுக்குப் பிரியமான சகோதரர்களே, உங்களுடைய விசுவாசத்தின் செயல்களையும், உங்களுடைய அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்களுடைய நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, ரோம 1:8-9எபே 1:15-16பிலே 1:4கொலோ 1:3பிலி 1:3-41 கொரி 1:4ரோம 6:17 நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, 1 கொரி 13:13வெளி 2:19கலா 5:6ரோம 8:24-252 தெச 1:111 யோவா 5:3கலா 6:9ரோம 15:13 எங்களுடைய ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல்செய்து, உங்களெல்லோருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். 2 தெச 2:132 பேது 1:10தீத் 3:4-5ரோம 9:25கொலோ 3:12எபே 1:4எபே 2:4-5ரோம 1:7 எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வசனத்தோடுமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியானவரோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாக இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. 2 தெச 3:7-9மாற் 16:201 கொரி 2:2-51 தெச 2:132 தெச 2:141 கொரி 4:201 பேது 1:12கொலோ 2:2 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, 1 கொரி 11:11 கொரி 4:16அப் 13:52கலா 5:222 தெச 3:93 யோவா 1:11எபே 5:1ரோம 5:3-5 இவ்விதமாக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மாதிரிகளானீர்கள். தீத் 2:71 பேது 5:31 தீமோ 4:121 தெச 1:82 கொரி 11:9-10அப் 16:122 கொரி 1:1அப் 1:13 எப்படியென்றால், உங்களிடமிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் பரவியதுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாக இல்லாதபடிக்கு, தேவனைப்பற்றின உங்களுடைய விசுவாசம் எல்லா இடங்களிலும் பிரசித்தமானது. ரோம 1:8ரோம 10:14-182 தெச 1:43 யோவா 1:12ஏசா 52:7வெளி 14:62 தெச 3:1யாத் 18:9 ஏனென்றால், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடம் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், 1 தீமோ 4:101 கொரி 12:2கலா 4:8-91 தெச 2:13சகரி 8:20-23செப்ப 2:111 தெச 2:1அப் 14:15 அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரும், இனிவரும் கோபத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறவருமாக இருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே. 1 தெச 5:9ஏசா 25:8-9ரோம 5:9-10மத் 3:71 தெச 4:16-17அப் 2:241 பேது 1:31 பேது 3:18