“லிவியாதானை 1 தூண்டிலைக்கொண்டு பிடிக்கமுடியுமோ? ஏசா 27:1யோபு 3:8சங் 104:26சங் 74:14
அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கமுடியுமோ?
அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ? ஏசா 37:29எசேக் 29:4-52இராஜா 19:28ஏசா 27:1
குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தமுடியுமோ?
அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பம் செய்யுமோ? ஏசா 30:10நீதி 15:1நீதி 18:23நீதி 25:15சங் 55:21
உன்னை நோக்கி ஆசைவார்த்தைகளைச் சொல்லுமோ?
அது உன்னுடன் உடன்படிக்கை செய்யுமோ? யாத் 21:6உபா 15:171 இராஜா 20:31-34ஆதி 1:28சங் 8:5-6
அதை எல்லா நாட்களும் அடிமைப்படுத்துவாயோ?
ஒரு குருவியுடன் விளையாடுகிறதுபோல், நியாயாதி 16:25-30யோபு 28:11
நீ அதனுடன் விளையாடி,
அதை நீ உன் பெண்களுக்கு அருகில் கட்டிவைப்பாயோ?
மீனவர்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து, நியாயாதி 14:11
அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ?
நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும்,
அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ?
அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; 1 இராஜா 20:112இராஜா 10:4லூக் 14:31-32
இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், 1 சாமு 3:11உபா 28:34ஏசா 28:19லூக் 21:11
அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க, யோபு 9:41 கொரி 10:22ஆதி 49:9எரே 12:5யோபு 3:8யோபு 40:9எண் 24:9சங் 2:11-12
எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? ரோம 11:35சங் 24:11 நாளாக 29:11-14உபா 10:14யோபு 35:7சங் 50:121 கொரி 10:26யாத் 19:5
வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
அதின் உறுப்புகளும், அதின் வீரியமும், ஆதி 1:25
அதின் உடல் இசைவின் அழகும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் எடுக்கக்கூடியவன் யார்? 2இராஜா 19:28யாக் 3:3சங் 32:9
அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்?
அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள். தானி 7:7பிரச 12:4யோபு 38:10நீதி 30:14சங் 57:4சங் 58:6
முத்திரைப் பதிப்புபோல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் கேடகங்களின் அமைப்பு மகா சிறப்பாயிருக்கிறது. எரே 9:23வெளி 5:2-3வெளி 5:5
அவைகள் நடுவே காற்றும் நுழையமுடியாமல்
நெருக்கமாக அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது.
அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு
இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.
அது தும்மும்போது ஒளி வீசும், யோபு 3:9வெளி 1:14
அதின் கண்கள் சூரியஉதயத்தின் புருவங்களைப்போல இருக்கிறது.
அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, சங் 18:8
நெருப்புப்பொறிகள் பறக்கும்.
கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, எரே 1:13-14
அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும்.
அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், சங் 18:8ஆப 3:5ஏசா 30:33சங் 18:12
அதின் வாயிலிருந்து தணல் புறப்படும்.
அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; 1 கொரி 15:55-57ஓசி 13:14யோபு 39:19யோபு 40:16
பயங்கரம் அதற்குமுன் நடனமாடும்.
அதின் உடல் அடுக்குகள்,
அசையாத கெட்டியாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
அதின் நெஞ்சு கல்லைப்போலவும், ஏசா 48:4எரே 5:3சகரி 7:12
எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
அது எழும்பும்போது பலசாலிகள் பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள். யோனா 1:4-6சங் 107:28
அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, யோபு 39:21-24
வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
அது இரும்பை வைக்கோலாகவும்,
வெண்கலத்தை உளுத்த மரமாகவும் நினைக்கும்.
அம்பு அதைத் துரத்தாது; ஆப 1:10யோபு 39:7
கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
அது பெருந்தடிகளை வைக்கோல்களாக எண்ணி, 2 நாளாக 26:14
ஈட்டியின் அசைவை இகழும்.
அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், ஏசா 41:15
அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோல கூர்மையான அவைகளின்மேலும் ஓடும்.
அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து,
கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
அது தனக்குப் பின்னாகப் பாதையை மின்னச்செய்யும்; ஆதி 1:15ஆதி 1:2ஆதி 15:15ஆதி 25:8ஆதி 42:38யோபு 28:14யோபு 38:16யோபு 38:30
ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும்.
பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; யோபு 40:19
அது பயப்படும்விதமாக உண்டாக்கப்பட்டது.
அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாக நினைக்கிறது; எசேக் 29:3சங் 73:6யோபு 26:12யோபு 28:8யாத் 5:2ஏசா 28:1சங் 73:10வெளி 12:1-3
அது அகங்காரமுள்ள உயிரினங்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கிறது” என்றார்.