பில்தாதின் வார்த்தைகள்
அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
“அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; கொலோ 1:20வெளி 6:161 நாளாக 29:11-122 கொரி 5:18-21தானி 4:34-37எபே 1:20-21எபே 2:16-17ஏசா 57:19
அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ? யாக் 1:17மத் 5:45தானி 7:10ஆதி 1:14-16ஆதி 1:3-5ஏசா 40:26யோவா 1:4யோவா 1:9
அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ரோம 5:1சங் 130:3யோபு 15:14-16யோபு 4:17-19யோபு 9:2சங் 143:2சங் 51:5வெளி 1:5
பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது; ஏசா 60:19-20யோபு 15:152 கொரி 3:10ஏசா 24:23யோபு 31:26
நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான். ஏசா 41:14சங் 22:6ஆதி 18:27யோபு 4:19யோபு 7:17