நீதிமொழிகள் 1

Proverbs 1
அத்தியாயம் 1

மையக் கருத்து

தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: நீதி 10:11 நாளாக 22:91 நாளாக 28:5பிரச 1:1நீதி 25:11 இராஜா 2:121 இராஜா 4:31-322 சாமு 12:24-25

இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, நீதி 7:4உபா 4:5-61 இராஜா 3:9-122 தீமோ 3:15-17நீதி 17:16நீதி 16:16நீதி 4:5-7நீதி 8:5

புத்திமதிகளை உணர்ந்து,

விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். நீதி 2:1-9யோபு 22:221 இராஜா 3:28நீதி 8:10-11

இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். நீதி 8:5நீதி 8:17சங் 119:9நீதி 8:12நீதி 8:32நீதி 9:4-6சங் 119:1302 தீமோ 2:22

புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்; நீதி 12:1நீதி 9:91 கொரி 10:15யோபு 34:10யோபு 34:16சங் 119:98-100யோபு 34:342 நாளாக 25:16

விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து;

நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், சங் 78:2மாற் 4:11சங் 49:4அப் 8:30-31எபி 5:14மாற் 4:34பிரச 12:11மத் 13:10-17

ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான்.

யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; யோபு 28:28சங் 111:10நீதி 9:10பிரச 12:13நீதி 15:33நீதி 18:2நீதி 1:22நீதி 1:29-30

மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.

ஞானம் தழுவுவதற்கான அறிவுரைகள்

என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள், நீதி 6:20நீதி 30:17நீதி 5:1-22 தீமோ 1:5நீதி 2:1நீதி 31:1உபா 21:18-21லேவி 19:3

உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே.

அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், தானி 5:29நீதி 4:9ஆதி 41:42நீதி 3:22நீதி 6:20-21எசேக் 16:11ஏசா 3:19உன்னத 1:10

உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும்.

என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும் எபே 5:11நீதி 16:29சங் 1:1நீதி 13:20உபா 13:8ரோம 16:18நீதி 7:21-23நீதி 20:19

நீ சம்மதிக்காதே.

எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து, நீதி 1:18எரே 5:26நீதி 12:6அப் 25:3எரே 18:18-20அப் 23:15எரே 11:19யோவா 15:25

குற்றமில்லாமல் இருக்கிறவர்களை

காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்;

பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; சங் 124:3சங் 28:1ரோம 3:13எரே 51:34புலம் 2:16புலம் 2:5மீகா 3:2-3எண் 16:30-33

குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல்

அவர்களை முழுமையாக விழுங்குவோம்;

விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; 1 தீமோ 6:9-10யோபு 24:2-3லூக் 12:15ஆகா 2:9ஏசா 10:13-14எரே 22:16-17நாகூ 2:12நீதி 1:19

கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.

எங்களோடு பங்காளியாக இரு;

நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்;

என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், சங் 119:101சங் 1:1நீதி 4:14-15நீதி 4:27சங் 26:4-52 கொரி 6:17நீதி 13:20நீதி 9:6

உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக.

அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, ஏசா 59:7நீதி 6:18நீதி 4:16ரோம 3:5

இரத்தம் சிந்த விரைகிறது.

எவ்வகையான பறவையானாலும் சரி, எரே 8:7யோபு 35:11நீதி 7:23ஏசா 1:3

அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது.

இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள், சங் 9:16எஸ்த 7:10நீதி 28:17நீதி 5:22-23சங் 7:14-16மத் 27:4-5சங் 55:23நீதி 9:17-18

தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள்.

பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே; நீதி 15:272 பேது 2:3ஆப 2:9யாக் 5:1-4எரே 22:17-19மீகா 2:1-3நீதி 23:3-41 தீமோ 3:3

இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்.

ஞானத்தைத் தள்ளுதலுக்கு எதிரான எச்சரிக்கை

ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, நீதி 9:3கொலோ 2:31 கொரி 1:24லூக் 11:49நீதி 8:1-51 கொரி 1:30மத் 13:54யோவா 7:37

வீதிகளில் சத்தமிடுகிறது.

அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும், அப் 5:20மத் 10:27மத் 13:2நீதி 9:3யோவா 18:20

நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு,

பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது:

பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, நீதி 1:292 பேது 3:3யோவா 3:20நீதி 5:12சங் 1:1லூக் 19:42மத் 11:29-30மத் 9:13

நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே,

நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; அப் 3:19எசேக் 33:11எசேக் 18:27-30அப் 2:36-38யோவே 2:28ஏசா 32:15ஏசா 55:6-7நீதி 12:1

இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன்,

என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.

நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; ஏசா 65:12ரோம 10:21எரே 7:13ஏசா 66:4எபி 12:25-26எசேக் 8:18மத் 22:5-6சகரி 7:11-12

நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.

என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, லூக் 7:30சங் 81:11நீதி 1:30நீதி 12:1சங் 107:112 நாளாக 36:16நீதி 5:12

என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.

ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து, நீதி 10:24சங் 2:4சங் 37:13லூக் 14:24நீதி 6:15நியாயாதி 10:14

நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன்.

நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும், நீதி 3:25-261 தெச 5:3ஏசா 17:13லூக் 21:23-26லூக் 21:34-35நாகூ 1:3நீதி 10:24-25சங் 58:9

ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும்,

நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன்.

அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; மீகா 3:4ஏசா 1:15யாக் 4:3எரே 11:11சகரி 7:13மத் 25:10-12யோபு 27:91 சாமு 8:18

நான் மறுஉத்திரவு கொடுக்கமாட்டேன்;

அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.

அவர்கள் அறிவை வெறுத்தார்கள், நீதி 6:23யோபு 21:14-15நீதி 1:22எபி 11:25ஏசா 27:11அப் 7:51-54யோவா 3:20லூக் 10:42

யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.

என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; நீதி 1:25சங் 81:11எரே 8:9லூக் 14:18-20சங் 119:173சங் 119:111

என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள்.

ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்; நீதி 14:14எரே 6:19யோபு 4:8நீதி 22:8கலா 6:7-8ஏசா 3:10-11எரே 2:19

தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.

அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், நீதி 8:36எரே 2:19யோவா 3:36எபி 12:25லூக் 16:19-25உபா 32:15-44எபி 12:8யாக் 5:5

மூடரின் பொறுப்பின்மை அவர்களை அழிக்கும்;

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, சங் 25:12-13ஏசா 26:3சங் 112:7-8யோவா 10:27-29நீதி 14:26லூக் 21:9நீதி 8:32-35லூக் 21:19

அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்பான்.