நீதிமொழிகள் 12

Proverbs 12
அத்தியாயம் 12

ஞானியின் செயல்கள்

புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; நீதி 15:10நீதி 9:7-8சங் 119:97-100நீதி 18:1நீதி 5:12-13நீதி 8:17சங் 32:9சங் 92:6

கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.

நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; நீதி 8:35அப் 11:24சங் 112:5ரோம 5:7ஏசா 32:5-7நீதி 1:31பிரச 8:8நீதி 6:18

கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார்.

துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; நீதி 10:25எபே 3:17கொலோ 2:7நீதி 12:12யோபு 27:16-18சங் 125:1-2யோபு 5:3-5சங் 15:5

நீதிமான்களுடைய வேரோ அசையாது.

குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; நீதி 31:10-25நீதி 14:1நீதி 14:30நீதி 19:13-141 கொரி 11:11நீதி 21:19நீதி 21:9நீதி 27:15-16

அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள்.

நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; சங் 139:23ஏசா 55:7எரே 4:14சங் 140:1-3சங் 41:6-71 கொரி 4:52 கொரி 4:2மத் 2:16

துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள்.

துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; நீதி 14:3எரே 5:26ஏசா 59:7நீதி 1:11-192 சாமு 17:1-4அப் 23:12அப் 23:15எஸ்த 4:7-14

உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.

துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; மத் 7:24-27நீதி 10:25நீதி 11:212 சாமு 7:162 சாமு 7:26எஸ்த 9:14எஸ்த 9:6-10யோபு 11:20

நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.

தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; 2 கொரி 10:18நீதி 3:351 கொரி 3:10-151 கொரி 4:5மல்கி 2:8-9மத் 27:4-5அப் 12:23தானி 12:2

மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.

உணவில்லாதவனாக இருந்தும், லூக் 14:11நீதி 13:7

தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட,

மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.

நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; உபா 25:4ஆதி 33:13-14எண் 22:28-32யாக் 2:13-161 யோவா 3:171 சாமு 11:2ஆதி 37:26-28நியாயாதி 1:7

துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே.

தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; நீதி 28:19நீதி 14:231 தெச 4:11-12சங் 128:2எபே 4:282 தெச 3:8நீதி 9:6நீதி 14:4

வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.

துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; எரே 17:7-8யோவா 15:5லூக் 8:13-15நீதி 29:5-6சங் 1:3ஏசா 27:6ஏசா 37:31யோவா 15:16

நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.

துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதி 21:23நீதி 11:8சங் 64:8தானி 6:24நீதி 6:22 பேது 2:9பிரச 7:18நீதி 18:6-7

நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான்.

அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; நீதி 18:20-21ஏசா 3:10-11நீதி 13:2சங் 63:5மத் 10:41-42நீதி 15:232 தெச 1:6-7மத் 16:27

அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.

மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; நீதி 3:7நீதி 14:16நீதி 19:20நீதி 26:12நீதி 14:12நீதி 16:2நீதி 16:25கலா 6:3

ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; நீதி 29:11யாக் 1:19நீதி 10:12நீதி 17:9நீதி 25:28நீதி 14:33நீதி 16:221 இராஜா 19:1-2

அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.

சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; நீதி 14:25நீதி 14:5நீதி 24:28நீதி 6:19மத் 15:19நீதி 19:28நீதி 19:5நீதி 21:28

பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.

பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; நீதி 16:24நீதி 15:4நீதி 10:20-21சங் 57:4யாக் 3:6-8சங் 52:2நீதி 15:7நீதி 25:18

ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து.

சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; நீதி 19:9சங் 52:4-5யோபு 20:5சகரி 1:4-6அப் 5:3-10மத் 24:35

பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்;

தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; மத் 5:91 பேது 3:8-13மாற் 7:21-22எபி 12:14எரே 17:16நீதி 12:12நீதி 26:24-26சகரி 6:13

சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம்.

நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; 1 பேது 3:13சங் 91:10ரோம 8:28எரே 13:12-14நீதி 1:311 கொரி 3:22-23ஆப 2:16நீதி 14:14

துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள்.

பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; சங் 5:6நீதி 11:20நீதி 6:16-17வெளி 22:15எரே 9:24ஏசா 9:15நீதி 11:1எசேக் 13:22

உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; நீதி 13:16நீதி 10:19நீதி 11:13நீதி 10:14நீதி 15:2பிரச 10:12-14பிரச 10:3

மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.

ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; நீதி 12:27நீதி 10:4நீதி 21:25-26நீதி 13:4நீதி 19:15நீதி 22:291 இராஜா 11:28ஆதி 49:15

சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான்.

மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நீதி 16:24நீதி 15:13நீதி 17:22ஏசா 50:4நீதி 15:23நீதி 12:18நீதி 27:9சங் 42:11

நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.

நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; 1 யோவா 2:26யாக் 1:13-14மத் 5:46-48நீதி 17:27சங் 18:12-132 பேது 2:18-22லூக் 6:32-36நீதி 12:13

துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.

சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; நீதி 13:4நீதி 26:15சங் 37:16நீதி 15:16நீதி 16:8நீதி 23:2

ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.

நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; 3 யோவா 1:11ரோம 5:21எசேக் 18:20-24நீதி 11:19தீத் 2:11-121 யோவா 2:291 யோவா 3:7உபா 30:15

அந்தப் பாதையில் மரணம் இல்லை.