விவேகமும் அலட்சியமும்
புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; நீதி 31:10-31நீதி 24:3-4நீதி 21:9நீதி 21:19ரூத் 4:11நீதி 9:13-15நீதி 19:131 இராஜா 16:31
புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; 2 தீமோ 3:2-3அப் 10:35நீதி 28:6யோபு 28:28சங் 112:1ரோம 2:4-5அப் 9:31பிரச 12:13
தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான்.
மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; நீதி 12:6யாக் 3:5-6வெளி 12:11வெளி 3:10ரோம 10:9-101 சாமு 2:3தானி 7:20யோபு 5:21
ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; 1 கொரி 9:9-11நீதி 13:23ஆமோ 4:6
காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; யாத் 23:1நீதி 19:5நீதி 6:19நீதி 12:17நீதி 14:251 இராஜா 22:12-14நீதி 13:5நீதி 19:9
பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; யாக் 1:5மத் 13:11-121 கொரி 3:18-19மத் 11:25-271 கொரி 8:2நீதி 8:92 பேது 3:3-5ஏசா 8:20
புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும்.
மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; நீதி 13:201 கொரி 5:11எபே 5:11நீதி 9:6நீதி 19:27
அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய்.
தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; எபே 5:172 தீமோ 3:13யாக் 3:13கொலோ 1:9-10நீதி 11:18நீதி 2:9நீதி 8:20சங் 111:10
மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; நீதி 10:23நீதி 26:18-19ரோம 14:17-18யூதா 1:18நீதி 13:15நீதி 30:20நீதி 8:35யோபு 34:7-9
நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு.
இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; பிலி 4:7நீதி 18:14யோவா 14:18நீதி 15:13யோபு 10:1வெளி 2:171 பேது 1:81 சாமு 1:10
அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான்.
துன்மார்க்கனுடைய வீடு அழியும்; நீதி 3:33நீதி 12:7மத் 7:26-27யோபு 21:28நீதி 21:12சகரி 5:4யோபு 18:14-15ஏசா 58:11-12
செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; நீதி 16:25மத் 7:13-14நீதி 12:15கலா 6:3லூக் 13:24ரோம 6:21நீதி 30:12யாக் 1:22
அதின் முடிவோ மரணவழிகள்.
சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; பிரச 2:2யாக் 4:9பிரச 11:9பிரச 2:10-11பிரச 7:5-6லூக் 16:25நீதி 5:4வெளி 18:7-8
அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், கலா 6:8நீதி 12:14எபி 3:12எரே 8:5எரே 2:192 பேது 2:20-22கலா 6:4யோவா 4:14
நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; எபே 5:17நீதி 14:81 யோவா 4:1நீதி 27:12நீதி 4:26எபே 4:14நீதி 22:3ரோம 16:18-19
விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான்.
ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; நீதி 22:3நீதி 3:71 தெச 5:22ஆதி 42:18நீதி 29:91 இராஜா 20:10-11ஆதி 33:9யோபு 31:21-23
மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான்.
முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; நீதி 14:29பிரச 7:9யாக் 1:19நீதி 29:22நீதி 15:18நீதி 16:32நீதி 22:24எஸ்த 3:6
கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; 1 பேது 1:181 பேது 5:42 தீமோ 4:8எரே 16:19நீதி 11:29-30நீதி 3:35நீதி 4:7-9தானி 12:3
விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. ஆதி 42:6மல்கி 4:3யாத் 8:81 சாமு 2:362இராஜா 3:12யாத் 11:8யாத் 9:27-28ஆதி 43:28
தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; நீதி 19:4நீதி 10:15யோபு 30:10நீதி 19:6-7எஸ்த 3:2எஸ்த 5:10-11யோபு 19:13-14யோபு 6:21-23
செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு.
பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; நீதி 11:12நீதி 19:17நீதி 28:27நீதி 17:51 யோவா 3:17-22நீதி 14:31நீதி 18:3அப் 20:35
தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.
தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நீதி 12:2யோவா 1:17மத் 5:7சங் 25:102 நாளாக 6:8ஆதி 24:27ஏசா 32:7-8நீதி 14:17
நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு.
எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; நீதி 28:19நீதி 12:242 தெச 3:10-12எபி 6:10-11பிரச 5:3யோவா 6:271 தீமோ 5:13நீதி 10:10
உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும்.
ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; பிரச 7:11-12லூக் 12:19-20லூக் 16:19-25லூக் 16:9சங் 112:9ஏசா 33:6நீதி 27:22சங் 49:10-13
மூடர்களின் மதியீனம் மூடத்தனமே.
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; நீதி 14:5அப் 26:16-201 தீமோ 4:1-32 பேது 3:3அப் 20:26-27அப் 20:21
வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; நீதி 19:23எரே 32:39-40நீதி 18:10சங் 115:13-14நீதி 3:7-8சங் 34:7-11மல்கி 3:16-18மல்கி 4:2
அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; நீதி 13:14வெளி 21:6நீதி 2:10-18ஏசா 33:6நீதி 22:5சங் 18:5பிரச 7:26
அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; 1 இராஜா 4:20-212இராஜா 13:7யாத் 1:22யாத் 1:121 இராஜா 20:272இராஜா 10:32-33
மக்கள்குறைவு தலைவனின் முறிவு. நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; யாக் 1:19பிரச 7:9நீதி 14:17நீதி 15:18நீதி 19:11நீதி 16:32நீதி 25:28மத் 11:29
முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான்.
சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; நீதி 17:22யோபு 5:2நீதி 3:8நீதி 4:23நீதி 12:42 தீமோ 1:7சங் 112:10சங் 119:80
பொறாமையோ எலும்புருக்கி.
தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; நீதி 22:2நீதி 17:5நீதி 22:16நீதி 19:171 யோவா 4:21பிரச 5:81 யோவா 3:17-21சங் 12:5
தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்;
துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; 2 தீமோ 4:18சங் 23:42 கொரி 5:8ஆதி 49:18யோபு 19:25-27வெளி 14:132 கொரி 1:9யோபு 13:15
நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும். நீதி 12:16நீதி 12:23நீதி 15:28பிரச 10:3நீதி 13:16நீதி 29:11நீதி 15:2
நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி. சங் 107:34உபா 28:1-68உபா 29:18-28உபா 4:6-8எசேக் 16:1-63ஓசி 13:1நியாயாதி 2:6-14எசேக் 22:1-23
ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; மத் 24:45-51லூக் 12:42-48மத் 25:21மத் 25:23நீதி 22:11நீதி 25:5நீதி 29:12நீதி 10:5
அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.