யோபு 36

Job 36
அத்தியாயம் 36

பின்னும் எலிகூ:

“நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்; யோபு 21:32 கொரி 5:20யோபு 13:7-8எசேக் 2:7எபி 13:22எரே 15:19யோபு 33:31-33யோபு 33:6

இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன்.

நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, யாக் 3:17யாக் 1:17தானி 9:14தானி 9:7உபா 32:4யோபு 32:8யோபு 8:3சங் 11:7

என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன்.

மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; யோபு 37:16நீதி 8:7-81 கொரி 14:202 தீமோ 3:16-17சங் 49:32 கொரி 2:17அப் 24:22கொலோ 4:12

உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன்.

இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; சங் 22:24சங் 138:6எரே 10:12யோபு 37:23சங் 147:5எரே 32:19யோபு 12:13-16யோபு 26:12-14

மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.

அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்; 2 பேது 2:9சங் 140:12சங் 72:12-14யாத் 22:22-24யோபு 21:7-9யோபு 5:15சங் 72:4ஏசா 11:4

சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.

அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், சங் 34:15சங் 33:181 சாமு 2:8சங் 113:7-82 தெச 3:31 பேது 3:12எஸ்த 10:3யோபு 42:12

அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும்,

உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார்.

அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, நீதி 5:22சங் 107:10யோபு 13:27யோபு 19:6யோபு 33:18-19புலம் 3:9சங் 116:3சங் 18:5

உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,

அவர், அவர்களுடைய செயல்களையும், 1 கொரி 11:32யோபு 15:25சங் 119:711 தீமோ 1:152 நாளாக 33:11-13உபா 4:21-22எசேக் 18:28-31ஏசா 59:12

அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,

அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார். ஏசா 55:6-7யோபு 36:15மத் 3:82இராஜா 17:13ஏசா 1:16-20ஏசா 48:17ஏசா 50:5யோபு 33:16-23

அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால், எரே 7:23ஏசா 1:19எரே 26:13உபா 4:30எபி 11:8யாக் 5:5யோபு 22:23யோபு 22:21

தங்கள் நாட்களை நன்மையாகவும்,

தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள்.

அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, யோபு 4:21ஏசா 3:11ரோம 2:8-9உபா 18:15-22உபா 29:15-20ஏசா 1:20யோவா 8:21-24யோபு 15:22

ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள்.

மாயமுள்ள இருதயத்தார் 1 கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; ரோம 2:5யோபு 27:8-10யோபு 36:82 நாளாக 28:132 நாளாக 28:22யோபு 15:4யோபு 35:9-10மத் 22:12-13

அவர்களை அவர் கட்டிவைக்கும்போதும் தேவனைக் கெஞ்சிக் கூப்பிடுவதில்லை.

அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்; உபா 23:17யோபு 15:32யோபு 22:16சங் 55:23ஆதி 19:24-25ஆதி 19:5ஆதி 38:7-10யோபு 21:23-25

இழிவானவர்களுக்குள்ளே அவர்கள் இறப்பார்கள்.

சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி, யோபு 36:102 நாளாக 12:8

அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் செவியைத் திறக்கிறார்.

அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி, சங் 23:5சங் 118:5சங் 18:19சங் 31:8சங் 63:5ஏசா 25:6சங் 36:8சங் 40:1-3

இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்;

உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.

ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; வெளி 18:4ரோம 1:32யோபு 16:5யோபு 22:11யோபு 34:36யோபு 34:8

நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.

கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் எபே 5:6யோபு 33:24ரோம 1:18சங் 110:5சங் 49:7-8ரோம 2:51 தீமோ 2:6ஏசா 14:6

அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்;

அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர்.

உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? நீதி 11:4நீதி 11:21ஏசா 2:20ஏசா 37:36யாக் 5:3யோபு 9:13நீதி 10:2சங் 33:16-17

உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.

மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும். 2இராஜா 19:35யாத் 12:29யோபு 34:20யோபு 34:251 தெச 5:2-3அப் 1:25தானி 5:30பிரச 11:3

பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்; எபி 11:25சங் 66:181 பேது 3:17மத் 16:24அப் 5:40-41தானி 3:16-18தானி 6:10எசேக் 14:4

உபத்திரவத்தைவிட அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.

இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; 1 சாமு 2:7-8லூக் 1:52ரோம 13:1ஏசா 48:17எரே 27:5-8தானி 4:25தானி 4:32தானி 5:18

அவரைப் போல் போதிக்கிறவர் யார்?

அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? 1 கொரி 2:16ஏசா 40:13-14யோபு 8:3எபே 1:11யோபு 34:10யோபு 34:13-33ரோம 11:34ரோம 2:5

நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?

மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும். வெளி 15:3லூக் 1:46சங் 111:2-4சங் 145:10-12சங் 72:18தானி 4:3தானி 4:37உபா 4:19

எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே;

தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது.

இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; சங் 90:2சங் 145:3யோபு 11:7-91 கொரி 13:121 இராஜா 8:27யோபு 37:23யோபு 37:5யோபு 26:14

நாம் அவரை அறிய முடியாது;

அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது.

அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; சங் 147:8யோபு 38:25-28யோபு 5:9சங் 148:8சங் 65:9-13ஆதி 2:5-6ஏசா 5:6எரே 14:22

அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது.

அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது. நீதி 3:20ஆதி 7:11-12யோபு 37:11-13

மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ? யோபு 37:16யோபு 37:2-51 இராஜா 18:44-45ஆப 3:10யோபு 26:14யோபு 38:37யோபு 38:9நாகூ 1:3

இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; யாத் 14:22யாத் 14:28யாத் 15:4-5ஆதி 1:9யோபு 38:25யோபு 38:34-35யோபு 38:8-11சங் 104:5-9

சமுத்திரத்தை இருளால் மூடுகிறார்.

அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும், சங் 136:25அப் 14:17யோபு 37:13சங் 104:13-15யோபு 38:26-27சங் 104:27-28சங் 65:9-131 சாமு 12:18

ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார்.

அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, யோபு 37:15சங் 135:7சங் 147:8-9சங் 148:8சங் 18:11அப் 27:20யாத் 10:21-23யோபு 26:9

அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.

அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், 2 சாமு 22:14யோபு 36:29யோபு 37:21 இராஜா 18:41-45எரே 14:4-6யோவே 2:22யோவே 1:18

புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும்.