2 சாமுவேல் 1

2 Samuel 1
அத்தியாயம் 1

சவுலின் மரணத்தை தாவீது அறிதல்

சவுல் இறந்தபின்பு, தாவீது அமலேக்கியர்களை முறியடித்து, சிக்லாகு பட்டணத்துக்குத் திரும்பிவந்து, இரண்டு நாட்கள் அங்கே இருந்த பின்பு, 1 சாமு 27:61 சாமு 30:17-261 சாமு 31:6 மூன்றாம் நாளிலே ஒரு மனிதன் சவுலின் முகாமிலிருந்து புறப்பட்டு, தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தன்னுடைய தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, தாவீதிடம் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான். 1 சாமு 4:122 சாமு 4:101 சாமு 25:23யோசு 7:61 சாமு 20:411 சாமு 4:162 சாமு 14:42 சாமு 15:32 தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் இராணுவ முகாமிலிருந்து தப்பிவந்தேன் என்றான். 2இராஜா 5:25யோபு 1:15-19 தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: மக்கள் யுத்தத்தைவிட்டு ஓடிப்போனார்கள்; மக்களில் அநேகம் பேர் காயப்பட்டு இறந்துபோனார்கள்; சவுலும் அவருடைய மகனான யோனத்தானும் இறந்தார்கள் என்றான். 1 சாமு 31:1-61 சாமு 4:161 நாளாக 10:1-6 சவுலும் அவருடைய மகனான யோனத்தானும் இறந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவித்த வாலிபனிடம் கேட்டதற்கு, நீதி 14:15நீதி 25:2 அந்த வாலிபன்: நான் தற்செயலாகக் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்துகிடந்தார்; இரதங்களும் குதிரை வீரர்களும் அவரைப் பின்தொடர்ந்து நெருங்கினார்கள். 1 சாமு 28:41 நாளாக 10:4-61 சாமு 31:1-71 சாமு 6:92 சாமு 1:21லூக் 10:31ரூத் 2:3 அவர் திரும்பிப் பார்த்து: என்னைக் கண்டு கூப்பிட்டார்; அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன். 1 சாமு 22:122 சாமு 9:6ஏசா 6:8ஏசா 65:1நியாயாதி 9:54 அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன். 1 சாமு 30:131 சாமு 30:171 சாமு 15:31 சாமு 30:11 சாமு 27:8உபா 25:17-19யாத் 17:8-16ஆதி 14:7 அவர் என்னை நோக்கி: நீ என் அருகில் வந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; இன்னும், என்னுடைய உயிர் முழுவதும் போகாததால் எனக்கு வேதனையாக இருக்கிறது என்றார். அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவருக்கு அருகில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பின்பு அவருடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தையும் அவருடைய கையில் இருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என்னுடைய ஆண்டவனிடம் கொண்டுவந்தேன் என்றான். நியாயாதி 9:54மத் 7:22இராஜா 11:121 சாமு 22:181 சாமு 31:4-52 சாமு 12:30நியாயாதி 1:7புலம் 5:16 அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த எல்லா மனிதர்களும் தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, 2 சாமு 13:312 சாமு 3:31ஆதி 37:29ஆதி 37:34அப் 14:14யோசு 7:6ரோம 12:15 சவுலும், அவனுடைய மகனான யோனத்தானும், யெகோவாவுடைய மக்களும், இஸ்ரவேல் குடும்பத்தார்களும், பட்டயத்தால் மரித்து போனதால் புலம்பி அழுது மாலைவரை உபவாசத்தோடு இருந்தார்கள். மத் 5:44நீதி 24:17சங் 35:13-141 பேது 3:82 கொரி 11:292 சாமு 3:35ஆமோ 6:6எரே 9:1 தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய தேசத்தானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான். 2 சாமு 1:8 தாவீது அவனை நோக்கி: யெகோவாவினால் அபிஷேகம் செய்தவரைக் கொன்றுபோடும்படி நீ உன்னுடைய கையை நீட்டப் பயப்படாமல் போனது என்ன என்று சொல்லி, 1 சாமு 26:91 சாமு 24:61 சாமு 31:42 பேது 2:10எண் 12:8சங் 105:15 வாலிபர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, நீ அவன் அருகே போய், அவனைக் கொன்றுபோடு என்றான்; அவன் அமலேக்கியனை வெட்டினான்; அவன் இறந்தான். 1 இராஜா 2:251 இராஜா 2:341 இராஜா 2:461 சாமு 22:17-182 சாமு 4:10-12நியாயாதி 8:20யோபு 5:12நீதி 11:18 தாவீது அவனைப் பார்த்து: உன்னுடைய இரத்தப்பழி உன்னுடைய தலையின்மேல் இருக்கட்டும்; யெகோவா அபிஷேகம் செய்தவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன்னுடைய வாயே உனக்கு விரோதமான சாட்சி சொன்னது என்றான். மத் 27:25லூக் 19:221 சாமு 26:9லேவி 20:9ரோம 3:191 இராஜா 2:372 சாமு 1:10யோசு 2:19

தாவீதின் புலம்பல்

தாவீது சவுலையும் அவனது மகன் யோனத்தானையும்குறித்து, துயரப்பாடலைப் பாடினான். 2 நாளாக 35:252 சாமு 1:19ஆதி 50:11எரே 9:17-21 (வில்வித்தையை யூதாவின் மகன்களுக்குக் கற்றுக்கொடுக்கும்படிக் கட்டளையிட்டான்; அது யாசேரின் புத்தகத்தில் 1 எழுதியிருக்கிறது) அவன் பாடின துயரப்பாடலாவது. யோசு 10:13ஆதி 49:8உபா 4:10

இஸ்ரவேலின் புகழ்பெற்ற தலைவர்கள், 2 சாமு 1:272 சாமு 1:25உபா 4:7-8புலம் 5:161 சாமு 31:82 சாமு 1:23ஏசா 4:2புலம் 2:1

உயர்ந்த மலைகளில் இறந்து போனர்கள்;

பலசாலிகள் கொலைசெய்யப்பட்டுபோனார்கள்.

பெலிஸ்தர்களின் மகள்கள் சந்தோஷப்படாதபடியும், மீகா 1:101 சாமு 18:6யாத் 15:20-21நியாயாதி 11:341 சாமு 17:261 சாமு 17:361 சாமு 31:41 சாமு 31:8-9

விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் கொண்டாடாதபடியும்,

அதைக் காத் பட்டணத்தில் அறிவிக்காமலும் அஸ்கலோனின் வீதிகளில் தெரிவிக்காமலும் இருங்கள்.

கில்போவா மலைகளே, 1 சாமு 31:1ஏசா 21:51 சாமு 10:11 நாளாக 10:11 நாளாக 10:8எசேக் 31:15ஏசா 5:6நியாயாதி 5:23

உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும்,

காணிக்கைக்கு ஏற்ற பலன் தரும் வயல்கள் இருக்காமலும் போகட்டும்;

அங்கே பெலசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம் செய்யப்படாதவர்போல அவருடைய கேடகமும் அவமதிக்கப்பட்டதே.

கொலைசெய்யப்பட்டவர்களின் இரத்தத்தைக் குடிக்காமலும், 1 சாமு 18:4ஏசா 34:6-71 சாமு 14:6-14உபா 32:42

பெலசாலிகளின் கொழுப்பை சாப்பிடாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை;

சவுலின் பட்டயம் வெறுமையாகத் திரும்பினதில்லை.

உயிரோடு இருக்கும்போது சவுலும் யோனத்தானும் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி மகிழ்ச்சியாக இருந்தார்கள்; எரே 4:13நியாயாதி 14:18உபா 28:49யோபு 9:26புலம் 4:19நீதி 30:301 நாளாக 12:81 சாமு 18:1

மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைவிட வேகமும்,

சிங்கங்களைவிட பலமும் உள்ளவர்களாக இருந்தார்கள்.

இஸ்ரவேலின் மகள்களே, உங்களுக்கு சிவந்த ஆடையை நேர்த்தியாக அணிவித்து, 1 பேது 3:3-51 தீமோ 2:9-10ஏசா 3:16-26நியாயாதி 5:30எரே 2:32நீதி 31:21சங் 68:12

உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைப் பதித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.

போர்க்களத்தில் பெலசாலிகள் விழுந்தார்களே. 2 சாமு 1:192 சாமு 1:271 சாமு 14:13-15நியாயாதி 5:18புலம் 5:16

யோனத்தானே, உயரமான இடங்களில் இறந்துபோனாயே.

என்னுடைய சகோதரனான யோனத்தானே, 1 சாமு 20:171 சாமு 18:1-41 சாமு 20:411 சாமு 19:21 சாமு 23:16

உனக்காக நான் துயரப்படுகிறேன்;

நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்;

உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது;

பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது.

பெலசாலி வீரர்கள்கள் விழுந்துபோனார்களே; 2 சாமு 1:252 சாமு 1:19எசேக் 39:9-10சங் 46:92இராஜா 2:122இராஜா 13:14

யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோனதே” என்று பாடினான்.