தாவீதின் கடைசி வார்த்தைகள்
தாவீதின் கடைசி வார்த்தைகள்: 1 சாமு 16:12-132 சாமு 7:8-9சங் 89:20கொலோ 3:16சங் 78:70-71லூக் 24:441 நாளாக 16:4-51 நாளாக 16:7
“மேன்மையாக உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று,
இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாகப் பாடின
ஈசாயின் மகனான தாவீது என்னும் மனிதன் சொல்லுகிறது என்னவென்றால்;
யெகோவாவுடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; 2 பேது 1:21மத் 22:43அப் 2:25-31மாற் 12:36எபி 3:7-8
அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் உபா 32:42 சாமு 22:32யாத் 18:21சங் 72:2உபா 16:18-20யாத் 23:6-8எபி 1:8சங் 82:3-4
எனக்குச் சொல்லி உரைத்ததாவது:
நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து,
தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார்.
அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, நியாயாதி 5:31சங் 72:6ஓசி 6:5சங் 89:36ஓசி 6:3ஏசா 4:2ஏசா 60:1ஏசா 60:18-20
மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால்
புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற
சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.
என்னுடைய வீடு தேவனிடம் இப்படி இருக்காதோ? ஏசா 55:32 சாமு 7:14-16ஏசா 9:6-7எரே 32:40சங் 89:28-29எபி 6:191 நாளாக 17:11-14அப் 13:34
அனைத்தும் தீர்மானித்திருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை
என்னுடன் அவர் செய்திருக்கிறார்;
ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும்
எல்லா வாஞ்சையும் பெருகச்செய்யாமல் இருப்பாரோ?
தீயவர்கள் அனைவரும், கையினால் பிடிக்கப்படமுடியாததாக எசேக் 2:6உபா 13:13ஏசா 33:121 சாமு 2:122 சாமு 20:1ஆதி 3:18உன்னத 2:2மத் 13:41
எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.
அவைகளை ஒருவன் தொடப்போனால், எபி 6:82 தெச 2:82 சாமு 22:8-102 தெச 1:8ஏசா 27:4யோவா 15:6லூக் 19:14லூக் 19:27
இரும்பாலான ஆயுதத்தையும் ஈட்டிப்பிடியையும் இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும்;
அவைகள் இருக்கிற இடத்திலேயே அக்கினியால் முழுவதும் சுட்டெரிக்கப்படும்” என்றான்.
தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் 800 பேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன். 1 நாளாக 11:11-471 நாளாக 27:21 நாளாக 27:32 இவனுக்கு இரண்டாவது, அகோயின் மகனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர்கள் யுத்தத்திற்குக் கூடின இடத்திலே இஸ்ரவேல் மனிதர்கள் போகும்போது, தாவீதோடு இருந்து பெலிஸ்தர்களை சபித்த மூன்று பலசாலிகளில் ஒருவனாக இருந்தான். 1 நாளாக 11:12-141 நாளாக 27:41 சாமு 17:261 சாமு 17:101 சாமு 17:361 சாமு 17:45-46ஏசா 63:3ஏசா 63:5 இவன் எழுந்து தன்னுடைய கை சோர்ந்து, தன்னுடைய கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளும்வரை பெலிஸ்தர்களை வெட்டினான்; அன்றையதினம் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்; மக்கள் கொள்ளையிடுவதற்குமட்டும் அவனுக்குப் பின்சென்றார்கள். 1 சாமு 11:131 சாமு 19:51 சாமு 14:231 சாமு 14:62 கொரி 4:52இராஜா 5:1எபே 6:10-18ஏசா 53:12 இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் மகனான சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயிறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர்கள் ஏராளமாகக் கூடி, மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடுகிறபோது, 1 நாளாக 11:13-141 நாளாக 11:272 சாமு 23:33 இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார். 2 சாமு 23:10நீதி 21:31சங் 3:8சங் 44:2 முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேர்களும் அறுவடையின் நாளில் அதுல்லாம் கெபியிலே தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே முகாமிட்டபோது, 1 சாமு 22:12 சாமு 5:181 நாளாக 11:15-191 நாளாக 14:92 சாமு 5:22ஏசா 17:5யோசு 12:15யோசு 15:35 தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாம் பெத்லெகேமிலே இருந்தது. 1 சாமு 22:4-51 நாளாக 12:161 சாமு 10:51 சாமு 13:231 சாமு 13:41 சாமு 14:61 சாமு 22:11 சாமு 24:22 தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆசைகொண்டு: என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான். யோவா 4:14ஏசா 41:17ஏசா 44:3யோவா 4:10யோவா 7:37எண் 11:4-5சங் 42:1-2சங் 63:1 அப்பொழுது இந்த மூன்று பெலசாலிகளும் பெலிஸ்தர்களின் முகாமில் துணிந்து புகுந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனம் இல்லாமல் அதைக் யெகோவாவெக்கென்று ஊற்றிப்போட்டு: ஆதி 35:142 கொரி 5:141 சாமு 7:6புலம் 2:19எண் 28:7பிலி 2:17ரோம 5:71 சாமு 19:5 யெகோவாவே, தங்கள் உயிரை பொருட்டாக எண்ணாமல் போய்வந்த அந்த மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாக இருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனம் இல்லாமலிருந்தான்; இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள். லேவி 17:101 கொரி 15:301 இராஜா 21:31 சாமு 2:301 சாமு 26:112 சாமு 20:20ஆதி 44:17ஆதி 9:4 யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி 300 பேரைக் கொன்றதால், இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான். 2 சாமு 10:102 சாமு 10:141 நாளாக 11:20-212 சாமு 18:21 நாளாக 2:161 சாமு 26:6-82 சாமு 2:182 சாமு 20:10 இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாக இருந்ததால் அல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமமானவன் அல்ல. மத் 13:23மத் 13:81 நாளாக 11:251 கொரி 15:412 சாமு 23:132 சாமு 23:162 சாமு 23:9 பலசாலியான யோய்தாவின் மகனும் கப்செயேல் ஊரைச்சேர்ந்தவனுமான பெனாயாவும் செயல்களில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைக்காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான். 2 சாமு 20:232 சாமு 8:18யோசு 15:211 நாளாக 11:22-241 இராஜா 1:261 இராஜா 1:381 இராஜா 1:81 இராஜா 2:29-35 அவன் பயங்கர உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அவன் ஈட்டியாலே அவனைக் கொன்றுபோட்டான். 1 நாளாக 11:231 சாமு 17:51கொலோ 2:15 இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்தபடியால், மூன்று பலசாலிகளுக்குள்ளே புகழ்பெற்றவனாக இருந்தான். 30 பேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான். 1 நாளாக 27:61 சாமு 22:142 சாமு 20:232 சாமு 8:8
யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான், 2 சாமு 2:181 நாளாக 27:71 நாளாக 11:26 ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா, 1 நாளாக 11:27-28நியாயாதி 7:1 பல்தியனான ஏலெஸ், இக்கேசின் மகனான ஈரா என்னும் தெக்கோவியன். 2 சாமு 14:21 நாளாக 11:27-281 நாளாக 27:9-10 ஆனதோத்தியனான அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி, யோசு 21:181 நாளாக 11:191 நாளாக 11:281 நாளாக 27:12 அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி, 1 நாளாக 27:132இராஜா 25:231 நாளாக 11:30 பானாவின் மகனான ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் வம்சத்தார்களின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, 1 நாளாக 11:30-311 நாளாக 27:15யோசு 18:28 பிரத்தோனியனான பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானான ஈத்தாயி, நியாயாதி 12:151 நாளாக 27:14நியாயாதி 12:13நியாயாதி 2:9யோசு 24:301 நாளாக 11:31-32உபா 1:24 அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனான அஸ்மாவேத், 2 சாமு 3:161 நாளாக 11:32-33 சால்போனியனான ஏலியாபா, யாசேனின் மகன்களில் யோனத்தான் என்பவன். 1 நாளாக 11:34 ஆராரியனான சம்மா, சாராரின் மகனான அகியாம் என்னும் ஆராரியன், 1 நாளாக 11:271 நாளாக 11:352 சாமு 23:11 மாகாத்தியனின் மகனான அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனான அகித்தோப்பேலின் மகன் எலியாம் என்பவன். 2 சாமு 11:32 சாமு 15:121 நாளாக 27:33-342 சாமு 10:62 சாமு 10:82 சாமு 15:312 சாமு 17:23 கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி, 1 நாளாக 11:37யோசு 15:55 சோபா ஊரைச்சேர்ந்த நாத்தானின் மகன் ஈகால், காத்தியனான பானி, 1 நாளாக 11:382 சாமு 8:3 அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுதம் ஏந்திய பெரோத்தியனான நகராய், 1 நாளாக 11:371 நாளாக 11:392 சாமு 4:2 இத்ரியனான ஈரா, இத்ரியனான காரேப், 1 நாளாக 2:532 சாமு 20:261 நாளாக 11:40 ஏத்தியனான உரியா என்பவர்களே; ஆக 37 பேர். 2 சாமு 11:31 இராஜா 15:52 சாமு 12:9மத் 1:61 நாளாக 11:412 சாமு 11:6-27