2 சாமுவேல்

2 Samuel · 24 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24

முன்னுரை

ஆசிரியர்

இந்த 2. சாமுவேல் புத்தகத்தில் ஆசிரியரைப்பற்றி எதுவும் சரியாக குறிப்பிடவில்லை. தீர்க்கத்தரிசி சாமுவேல் மரித்துவிட்டதால் இவர் எழுதியிருக்கமுடியாது. காத் நாத்தான் என்ற தீர்க்கதரிசிகள், ஆசாரியனான அபியத்தார் ஆகியவர்கள் எழுதியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. ஆதியிலே 1 சாமுவேலும். 2 சாமுவேலும் ஒரே புத்தகமாக இருந்தது. கிரேக்க மொழியில் மொழிப்பெயர்த்தவர்கள் இதை இரண்டாகப் பிரித்தார்கள். ஆகையால் 1 சாமுவேல் சவுல் இராஜாவின் மரணத்துடன் முடிகிறது. 2. சாமுவேல் தாவீதின் அரசாட்சியுடன் தொடங்குகிறது. முதலாவதாக தாவீது யூதா கோத்திரத்தின் மீது இராஜாவாக அபிஷேகிக்கப்பட்டான் பிறகு இஸ்ரவேல் முழுவதும் இராஜாவாக்கப்பட்டான்.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிமு 1050 க்கும் 722 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.

பாபிலோனியா சிறையிருப்புக் காலத்தில் வேதவல்லுனர்களால் தொகுக்கப்பட்டது.

யாருக்காக எழுதப்பட்டது

தாவீது சாலோமோன் காலத்திலும் வாழ்ந்தவர்களுக்கும் பின்வரும் சந்ததிகளுக்கும் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்

இந்த புத்தகம் தாவீது இராஜாவின் ஆட்சியை பதிவு செய்கிறது. தாவீதின் உடன்படிக்கையை சரித்திரபூர்வமாக பதிவுசெய்கிறது. தாவீது எருசலேமை இஸ்ரவேலின் அரசியலின் மையமாகவும் ஆராதனைகளின் மையமாகவும் ஏற்படுத்தினான். (2 சாமு 5:6-12; 6:1-17). யெகோவாவின் வார்த்தைகளும் (2 சாமு: 7:4-16). (2 சாமு: 23:1-7). தாவீதின் வார்த்தைகளும் தேவன் கொடுத்த இராஜ்ஜியத்தின் முக்கியத்தை அழுத்தி சொல்கிறது. தீர்க்கதரிசனமாக மேசியாவின் ஆயிர வருட அரசாட்சியையும் சுட்டிக்காட்டுகிறது.

மையக் கருத்து

ஒருங்கிணைத்தல்

பொருளடக்கம்

1. தாவீதின் இராஜ்ஜியத்தினுடைய ஏற்றம் — 1:1-10:19

2. தாவீதின் இராஜ்ஜியத்தினுடைய வீழ்ச்சி — 11:1-20:26

3. பிற்சேர்க்கை — 21:1-24:25