இக்கோணியாவில் பவுலும் பர்னபாவும்
இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதர்களுடைய ஜெப ஆலயத்தின் உள்ளே பிரவேசித்து யூதர்களிலும் கிரேக்கர்களிலும் திரளான மக்கள் நம்பத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள். அப் 18:4அப் 13:46அப் 13:51அப் 14:211 கொரி 1:22-24அப் 11:21அப் 13:43அப் 17:1-2 விசுவாசிக்காத யூதர்கள் சகோதரர்களுக்கு விரோதமாக யூதரல்லாதவர்களுடைய மனதைத் தூண்டிவிட்டு, பகையுண்டாக்கினார்கள். அப் 13:50அப் 13:45அப் 14:19அப் 17:5அப் 21:27-301 தெச 2:15-16அப் 17:13அப் 18:12 அவர்கள் அங்கே அநேகநாட்கள் வாழ்ந்து கர்த்த்தரை முன்னிட்டுத் தைரியம் உள்ளவர்களாகப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்கு சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி தயவுபண்ணினார். எபி 2:4அப் 20:32எபே 6:18-20அப் 20:24அப் 4:29-30மாற் 16:20ரோம 1:161 தெச 2:2 பட்டணத்து மக்கள் பிரிந்து, சிலர் யூதர்களையும் சிலர் அப்போஸ்தலர்களையும் சேர்ந்துகொண்டார்கள். அப் 28:24அப் 14:14அப் 17:4-5அப் 19:9லூக் 11:21-231 கொரி 9:5அப் 13:2யோவா 7:43 இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது, அப் 14:192 தீமோ 3:11அப் 17:5அப் 4:25-29லூக் 6:28மத் 5:44சங் 2:1-3சங் 83:5 இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவிற்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப் புறங்களுக்கும் ஓடிப்போய்; 2 தீமோ 3:11அப் 14:20-21மத் 10:23அப் 16:1-2அப் 17:13-142இராஜா 6:8-12அப் 23:12-22அப் 9:24 அங்கே நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினார்கள். அப் 14:211 தெச 2:22 தீமோ 4:2அப் 14:15அப் 16:10அப் 11:19அப் 17:2அப் 8:4
லீஸ்திராவிலும் தெர்பையிலும்
லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து, அப் 3:2அப் 4:9யோவா 5:3-5யோவா 5:7யோவா 9:1-2 பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு, அப் 3:4மத் 15:28மத் 9:28-29மத் 13:58மத் 8:10மத் 9:22மாற் 1:40-41மாற் 10:52 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். ஏசா 35:6யோவா 14:12யோவா 5:8-9அப் 3:6-8அப் 9:33-34லூக் 13:11-13லூக் 7:14 பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி, அப் 28:6அப் 8:10அப் 12:22 பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள். அப் 19:35 அல்லாமலும் பட்டணத்திற்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான கோவிலின் மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, மக்களோடுகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். தானி 2:46அப் 10:25 அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்களுடைய துணிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாக: மத் 26:651 கொரி 9:5-62இராஜா 18:372இராஜா 5:7எஸ்றா 9:3-5எரே 36:24அப் 14:4மாற் 14:63 மனிதர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனிதர்கள் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்கு திரும்பவேண்டும் என்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். 1 சாமு 12:211 கொரி 8:4அப் 10:26சங் 146:5-6யாக் 5:17வெளி 14:7ஆதி 1:1எரே 14:22 கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், அப் 17:30சங் 81:12சங் 147:20ரோம 1:281 பேது 4:3எபே 2:12மீகா 4:5ரோம 1:21-25 அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாக அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணியிருக்கிறார் என்றார்கள். ரோம 1:19-20யோவே 2:23யோபு 5:10உபா 11:14ஏசா 5:61 தீமோ 6:17உபா 28:12உபா 8:12-14 இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு மக்கள் பலியிடாதபடிக்கு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது. எரே 44:16-17யாத் 32:21-23ஆதி 11:6யோவா 6:15ஆதி 19:9 பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனான் என்று எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள். 2 கொரி 11:252 தீமோ 3:11அப் 13:50-51அப் 13:45அப் 14:52 கொரி 11:23அப் 7:58அப் 9:16 சீடர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கும்போது, அவன் எழுந்து, பட்டணத்திற்குள்ளே போனான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான். 2 கொரி 1:9-102 கொரி 6:9அப் 14:6அப் 16:40அப் 20:1அப் 12:17அப் 14:28அப் 16:1
அந்தியோகியாவிற்குத் திரும்பிவருதல்
தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து, அப் 13:51அப் 14:1அப் 14:19அப் 13:14அப் 14:6மத் 28:192 தீமோ 3:11அப் 14:8 சீடர்களுடைய மனதைத் தைரியப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின்வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று சொன்னார்கள். 1 பேது 5:102 தீமோ 3:12யோவா 16:331 தெச 3:2-4ரோம 8:17வெளி 2:102 தீமோ 1:8கொலோ 1:23 அல்லாமலும் அந்தந்த சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள். தீத் 1:5அப் 11:30யாக் 5:142 தீமோ 2:2அப் 20:321 தீமோ 5:11 தீமோ 5:22அப் 20:17 பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து, அப் 13:13-14அப் 15:38 பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள். அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்தார்கள். அப் 15:40அப் 11:192 கொரி 1:12அப் 11:26அப் 13:1-3கொலோ 1:25கொலோ 1:28கொலோ 4:17 அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து, 1 கொரி 16:9அப் 15:122 கொரி 2:12கொலோ 4:31 கொரி 5:41 கொரி 11:181 கொரி 3:5-9அப் 11:18 அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள். அப் 11:26அப் 15:35