சங்கீதங்கள் 94

Psalms 94
சங்கீதம் 94

நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவாவே, ஏசா 35:4நாகூ 1:2உபா 32:35எபி 10:302 தெச 1:8உபா 32:41-42ரோம 12:19ஏசா 59:17

நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.

பூமியின் நியாயாதிபதியே, சங் 7:62 கொரி 5:10சங் 31:23ஆதி 18:25யோவா 5:22-23மீகா 5:91 பேது 5:5ஏசா 2:11-12

நீர் எழுந்து, பெருமைக்காரர்களுக்குப் பதிலளியும்.

யெகோவாவே, துன்மார்க்கர்கள் எதுவரைக்கும் மகிழ்ந்து, வெளி 6:10எரே 12:1-2யோபு 20:5சங் 43:2சங் 73:8சங் 80:4அப் 12:22-23எஸ்த 7:10

எதுவரைக்கும் சந்தோஷமாக இருப்பார்கள்?

எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி, சங் 31:18சங் 52:1தானி 7:25யாத் 15:9-10யோபு 21:14-15யூதா 1:14-15சங் 140:3வெளி 13:5-6

கடினமாகப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?

யெகோவாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி, ஏசா 3:15சங் 79:2-3யாத் 2:23-24ஏசா 52:5எரே 22:17எரே 50:11எரே 51:20-23எரே 51:34

உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.

விதவையையும் அந்நியனையும் கொன்று, ஏசா 10:2எசேக் 22:7எரே 7:6மல்கி 3:5ஏசா 13:15-18எரே 22:3

திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:

யெகோவா பார்க்கமாட்டார், லூக் 18:3-4சங் 10:11-13ஏசா 29:15எசேக் 8:12யோபு 22:12-13செப்ப 1:12எசேக் 9:9சங் 59:7

யாக்கோபின் தேவன் கவனிக்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.

மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; சங் 92:6தீத் 3:3சங் 49:10உபா 32:29ஏசா 27:11நீதி 12:1ரோம 3:11எரே 10:8

மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

காதை உண்டாக்கினவர் கேட்கமாட்டாரோ? யாத் 4:11எரே 23:23-24நீதி 20:12சங் 11:4சங் 44:21சங் 139:1-12சங் 17:3நீதி 20:1

கண்ணை உருவாக்கினவர் காணமாட்டாரோ?

தேசங்களைத் தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளமாட்டாரோ? யோபு 35:11ஏசா 28:26எரே 10:25ஏசா 2:3யோவா 6:45நீதி 2:6சங் 44:2ஆமோ 3:2

மனிதனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியமாட்டாரோ?

மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார். 1 கொரி 3:201 கொரி 1:191 கொரி 1:211 கொரி 1:25யோபு 11:11-12ரோம 1:21-22சங் 49:10-13

யெகோவாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீதி 3:11-12யோபு 5:171 கொரி 11:32எபி 12:5-11வெளி 3:19சங் 119:71சங் 119:67உபா 8:5

நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கச்செய்து,

தண்டித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு சங் 55:232 பேது 2:9சங் 9:152 தெச 1:7-8ஆப 3:16ஏசா 26:20-21வெளி 14:132 கொரி 4:17-18

போதிக்கிற மனிதன் பாக்கியவான்.

யெகோவா தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும், 1 சாமு 12:22சங் 37:28ரோம 11:1-2உபா 32:9யோவா 10:27-31ரோம 8:30எபே 1:18எபி 13:5

தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.

நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; மீகா 7:9சங் 37:34சங் 97:2மல்கி 3:18சங் 125:3-51 யோவா 2:192 பேது 3:8-10உபா 32:35-36

செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள்.

துன்மார்க்கர்களுக்கு விரோதமாக 3 யோவா 1:8நியாயாதி 5:23யோவா 7:50-51ஏசா 63:5எரே 5:1எண் 25:6-13சங் 59:21 இராஜா 18:39-40

எனது சார்பாக எழும்புகிறவன் யார்?

அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்?

யெகோவா எனக்குத் துணையாக இல்லாவிட்டால், சங் 124:1-2சங் 31:172 தீமோ 4:16-17சங் 118:13சங் 115:17சங் 13:32 கொரி 1:8-10யோவா 16:32

என்னுடைய ஆத்துமா சீக்கிரமாக மவுனத்தில் தங்கியிருக்கும்.

என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, சங் 121:3ஏசா 41:10சங் 119:116-117சங் 37:23-24சங் 38:161 சாமு 2:9லூக் 22:32சங் 17:5

யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

என்னுடைய உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது, சங் 61:22 கொரி 1:4-5சங் 77:2-10ரோம 5:2-5ஆப 3:16-18சங் 63:5-61 பேது 1:7-8சங் 43:2-5

உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.

தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ? ஏசா 10:1சங் 58:2பிரச 3:16யோவா 11:57வெளி 13:15-17ஆமோ 6:3தானி 3:4-7தானி 6:7-9

அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, மத் 27:1நீதி 17:15யாத் 23:7சங் 59:3வெளி 17:61 இராஜா 21:19அப் 7:58-60எசேக் 22:12

குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.

யெகோவாவோ எனக்கு அடைக்கலமும், சங் 18:2சங் 27:1-3சங் 59:16-17சங் 59:9சங் 62:6ஏசா 33:16சங் 62:2சங் 9:9

என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாக இருக்கிறார்.

அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, சங் 7:16நீதி 14:32நீதி 2:22நீதி 5:22சங் 55:231 சாமு 26:10-11எஸ்த 7:10சங் 64:8

அவர்களுடைய பொல்லாப்பினால் அவர்களை அழிப்பார்;

நம்முடைய தேவனாகிய யெகோவாவே அவர்களை அழிப்பார்.