2 பேதுரு 3

2 Peter 3
அத்தியாயம் 3

கர்த்தருடைய நாள்

பிரியமானவர்களே, இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். 2 தீமோ 1:62 பேது 1:12-151 பேது 1:1-21 பேது 1:221 தீமோ 5:22மத் 5:8சங் 24:4சங் 73:1 பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்னமே சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராக இருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலர்களாகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைத்துப்பார்ப்பதற்காக இந்தக் கடிதங்களினால் உங்களுடைய உண்மையான மனதை ஞாபகப்படுத்தி எழுப்புகிறேன். யூதா 1:172 பேது 2:21லூக் 1:701 பேது 1:10-122 பேது 1:19-21லூக் 24:44அப் 10:43அப் 28:23 முதலாவது நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: கடைசிநாட்களில் பரிகாசக்காரர்கள் வந்து, தங்களுடைய சுய இச்சைகளின்படி நடந்து, யூதா 1:181 தீமோ 4:1-22 பேது 2:102 கொரி 4:2யூதா 1:162 பேது 1:202 தீமோ 3:1நீதி 1:22 அவர் திரும்பவருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? முற்பிதாக்கள் மரித்தபின்பு எல்லாக் காரியங்களும் படைப்பின் ஆரம்பத்தில் இருந்தவிதமாகவே இருக்கிறதே என்று சொல்லுவார்கள். எரே 17:15மல்கி 2:17எரே 5:12-13லூக் 12:45ஏசா 5:18-19பிரச 8:11மத் 24:48எசேக் 12:22-27 ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும், எபி 11:3சங் 24:2ஆதி 1:9ஆதி 1:6சங் 136:6சங் 33:6யோவா 3:19-202 தெச 2:10-12 அப்பொழுது இருந்த உலகம் பெருவெள்ளத்தினாலே அழிந்தது என்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். 2 பேது 2:5மத் 24:38-39ஆதி 7:10-23லூக் 17:27ஆதி 9:15யோபு 12:15 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது. 2 பேது 3:102 பேது 3:12ஏசா 51:6வெளி 21:1மத் 24:352 பேது 2:92 தெச 1:7-8மத் 25:41 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒருநாளைப்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருக்கவேண்டாம். சங் 90:4ரோம 11:251 கொரி 10:11 கொரி 12:1 தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார். 1 தீமோ 2:4ரோம 2:4ஆப 2:3சங் 86:15ஏசா 30:18வெளி 2:21லூக் 18:7-81 தீமோ 1:16 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும். வெளி 21:1மத் 24:352 பேது 3:7வெளி 16:15ஏசா 51:61 தெச 5:22 பேது 3:12மாற் 13:31 இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாக இருக்கிறதினால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக இருக்கவேண்டும்! 1 பேது 1:15பிலி 1:271 பேது 2:121 தீமோ 6:112 பேது 3:12யாக் 3:13ஏசா 34:4பிலி 3:20 தேவன் வருகின்ற நாள் சீக்கிரமாக வருவதற்கு அதிக ஆவலோடு காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பஞ்சபூதங்கள் எரிந்து உருகிப்போகும். 2 பேது 3:10ஏசா 34:4மீகா 1:4தீத் 2:131 கொரி 1:7-82 பேது 3:7ஏசா 64:1-12சங் 50:3 அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம். ஏசா 65:17வெளி 21:1ஏசா 66:22வெளி 21:27ஏசா 60:21 ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள். 1 தெச 5:231 தெச 3:13பிலி 1:101 கொரி 15:581 யோவா 3:31 கொரி 1:82 பேது 1:5-10பிலி 2:15 மேலும் நம்முடைய கர்த்தரின் அதிகப் பொறுமையை இரட்சிப்பு என்று நினைத்துக்கொள்ளுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; ரோம 2:41 தீமோ 1:162 பேது 3:91 பேது 3:20யாக் 3:17யாக் 1:5லூக் 21:15நீதி 2:6-7 எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும் புரட்டுகிறார்கள். மத் 15:6எபி 5:112 பேது 2:14யாக் 1:8பிலி 3:19எரே 23:36மத் 22:29ரோம 8:1-39 ஆகவே, பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் தெரிந்திருக்கிறதினால், அக்கிரமக்காரர்களுடைய வஞ்சகத்தினாலே நீங்கள் இழுக்கப்பட்டு உங்களுடைய உறுதியில் இருந்து விலகி விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருந்து, கொலோ 2:8எபி 3:142 கொரி 11:13-151 கொரி 15:581 கொரி 10:12எபே 4:14மத் 7:152 பேது 2:18-22 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். கொலோ 1:10எபே 4:151 பேது 2:2கொலோ 3:10பிலி 3:81 பேது 5:10-112 பேது 1:3எபே 1:17