சங்கீதங்கள் 73

Psalms 73
சங்கீதம் 73

ஆசாபின் பாடல்.

சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு மத் 5:8சங் 51:10லூக் 12:32சங் 84:11யாக் 4:8யோவா 1:47ரோம 2:28-291 நாளாக 25:1-6

தேவன் நல்லவராகவே இருக்கிறார்.

ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும், சங் 94:181 சாமு 2:9சங் 116:8சங் 38:16சங் 17:5யோசு 24:15சங் 17:15சங் 5:7

என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது.

துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, யோபு 21:7எரே 12:1நீதி 23:17சங் 37:7சங் 37:1நீதி 24:1யாக் 4:5நீதி 3:31

வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.

மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை; யோபு 21:23-24பிரச 2:16லூக் 16:22சங் 17:14பிரச 7:15யோபு 24:20சங் 17:10

அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது.

மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; யோபு 21:9சங் 73:12எரே 12:1-2வெளி 3:191 கொரி 11:32எபி 12:8யோபு 21:6நீதி 3:11-12

மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள்.

ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும், சங் 109:181 பேது 5:5தானி 4:30நியாயாதி 8:26நீதி 1:9நீதி 3:31உபா 32:15உபா 8:13-14

கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.

அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது; எரே 5:28யோபு 15:27சங் 17:10சங் 73:121 சாமு 25:21 சாமு 25:36எசேக் 16:49ஏசா 3:9

அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது.

அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்; யூதா 1:16சங் 17:10சங் 10:22 பேது 2:102 பேது 2:18எரே 7:9-11நீதி 30:13-14சங் 10:10-11

பெருமையாகப் பேசுகிறார்கள்.

தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; வெளி 13:6யாத் 5:2யாக் 3:62 நாளாக 32:15தானி 3:15தானி 7:25லூக் 18:4யோபு 21:14

அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது.

ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; சங் 75:8

தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சுரந்துவரும்.

தேவனுக்கு அது எப்படித் தெரியும்? ஓசி 7:2செப்ப 1:12எசேக் 8:12யோபு 22:13-14சங் 73:9சங் 94:7சங் 10:11சங் 139:1-6

உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ?

என்று சொல்லுகிறார்கள்.

இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; சங் 52:7ஓசி 12:7-8எரே 5:28யாக் 5:1-3எரே 12:1-2எரே 5:17லூக் 16:19சங் 17:14

இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து,

சொத்தைப் பெருகச்செய்கிறார்கள்.

நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, யோபு 21:15சங் 26:6யோபு 34:9யோபு 35:3எபி 10:19-22யாக் 4:8மல்கி 3:14சங் 51:10

குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன்.

நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், எபி 12:5சங் 94:121 பேது 1:6ஆமோ 3:2எரே 15:18யோபு 7:3-4சங் 34:19யோபு 10:17

காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.

இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால், மல்கி 2:8மத் 18:6-7சங் 24:6ரோம 14:151 பேது 2:9சங் 14:5சங் 22:30ரோம 14:21

இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.

இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; பிரச 8:17யோவா 16:18-19லூக் 18:32-34நீதி 30:2-3சங் 36:6சங் 39:6சங் 77:19சங் 97:2

நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து,

அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை, லூக் 12:20சங் 77:13பிரச 8:12-13சங் 27:4சங் 119:24சங் 37:37-38சங் 63:2எரே 5:31

அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது.

நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, எரே 23:12சங் 35:6உபா 32:352 தெச 1:9சங் 55:23சங் 94:23சங் 37:20சங் 37:35-38

பாழான இடங்களில் விழச்செய்கிறீர்.

அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! ஏசா 47:11தானி 5:6நீதி 28:11 தெச 5:3ஏசா 30:13யோபு 15:21யோபு 20:5வெளி 18:10

பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள்.

தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, யோபு 20:8சங் 78:65ஏசா 29:7-8சங் 39:6சங் 7:6சங் 90:5

நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர்.

இப்படியாக என்னுடைய மனம் கசந்தது, சங் 37:7புலம் 3:13சங் 73:3யோபு 16:13சங் 37:1

என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன்.

நான் காரியம் அறியாத மூடனானேன்; பிரச 3:18சங் 92:6ஏசா 1:3சங் 49:10நீதி 30:2சங் 32:9யோபு 18:3சங் 69:5

உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.

ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; ஏசா 41:13சங் 63:8மத் 28:20எபி 13:5சங் 16:8சங் 23:4மத் 1:23ஏசா 41:10

என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.

உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, சங் 32:8ஏசா 58:11நீதி 3:5-6ஏசா 48:17சங் 48:14சங் 25:9ஏசா 30:21யாக் 1:5

முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பிலி 3:8சங் 16:2சங் 63:3சங் 16:5ஏசா 26:8-9மத் 10:37சங் 104:34சங் 16:11

பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.

என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது; 2 கொரி 12:9-10ஏசா 40:29-31சங் 138:3சங் 18:22 கொரி 4:8-102 கொரி 4:16-18சங் 16:5-6சங் 84:2

தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும்

என்னுடைய பங்குமாக இருக்கிறார்.

இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; யாக் 4:4சங் 119:155யாத் 34:15எண் 15:39சங் 106:39வெளி 17:1-5ஏசா 29:13யோபு 21:14-15

உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர்.

எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; யாக் 4:8சங் 40:5எபி 10:19-22புலம் 3:25-26சங் 65:41 பேது 3:18சங் 118:17சங் 71:24

நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி

கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.