சங்கீதங்கள் 90

Psalms 90
சங்கீதம் 90

தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்.

ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக உபா 33:271 யோவா 4:16சங் 71:3எசேக் 11:16சங் 91:1சங் 91:9யாத் 33:14-19யோவா 6:56

எங்களுக்கு அடைக்கலமானவர்.

மலைகள் தோன்றுமுன்பும், எபி 13:8ஆதி 1:1சங் 102:24-27வெளி 1:8சங் 93:21 தீமோ 6:15-16எபி 1:10-12சங் 33:9

நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும்,

நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர்.

நீர் மனிதர்களைத் தூளாக்கி, ஆதி 3:19பிரச 12:7யோபு 34:14-15எண் 14:35சங் 104:29சங் 146:4ஆதி 6:6-7யோபு 12:10

மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர்.

உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் 2 பேது 3:8சங் 39:5மத் 24:43லூக் 12:38மத் 14:25யாத் 14:24நியாயாதி 7:19

நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது.

அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; ஏசா 40:61 பேது 1:24யோபு 22:16சங் 103:15-16சங் 73:20யோபு 27:20-21ஏசா 29:7-8ஏசா 8:7-8

தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்;

காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.

அது காலையிலே முளைத்துப் பூத்து, யோபு 14:2சங் 92:7யாக் 1:11மத் 6:30

மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும்.

நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து சங் 39:11உபா 2:14-16யாத் 14:24எபி 3:10-11எபி 3:17எண் 17:12-13சங் 59:13சங் 90:11

உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம்.

எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எரே 16:17பிரச 12:14எபி 4:12-13எரே 23:24சங் 19:121 யோவா 3:20எரே 9:13-16சங் 10:11

எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.

எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; சங் 78:33சங் 39:5சங் 90:4

ஒரு கதையைப்போல் எங்கள் வருடங்களைக் கழித்துப்போட்டோம்.

எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், யாக் 4:14சங் 78:392 சாமு 19:35உபா 34:7ஆதி 47:91 இராஜா 1:1யோபு 14:10யோபு 24:24

பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும்,

அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே;

அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம்.

உமது கோபத்தின் வல்லமையையும், ஏசா 33:14லேவி 26:24நாகூ 1:62 கொரி 5:11உபா 28:59உபா 29:20-29லேவி 26:18லேவி 26:21

உமக்குப் பயப்படக்கூடிய விதமாக உமது கடுங்கோபத்தையும் அறிந்துகொள்கிறவன் யார்?

நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எபே 5:16-17சங் 39:4யோவா 9:4உபா 32:29நீதி 4:7நீதி 3:13-18நீதி 16:16நீதி 23:12

எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.

யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? உபா 32:36சங் 106:45சங் 135:14சங் 80:14ஆமோ 7:3ஆமோ 7:6ஓசி 11:8யோவே 2:13-14

உமது அடியார்களுக்காகப் பரிதபியும்.

நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி, சங் 23:6சங் 85:6சங் 31:7சங் 86:4சங் 103:3-5பிலி 4:4சங் 149:2சங் 36:7-8

காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.

தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும், சங் 126:5-6சங் 30:5ஏசா 40:1-2யோவா 16:20ஏசா 12:1எரே 31:12-13ஏசா 61:3ஏசா 65:18-19

நாங்கள் துன்பத்தைக் கண்ட வருடங்களுக்கும் இணையாக எங்களை மகிழ்ச்சியாக்கும்.

உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும், ஆப 3:2சங் 44:1உபா 32:4உபா 1:39எண் 14:15-24யோசு 23:14யோசு 4:22-24எண் 14:30-31

உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.

எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; நீதி 16:31 கொரி 3:72 தெச 2:16யோபு 22:28ஏசா 26:12சங் 118:25சங் 68:28சங் 80:3

எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்;

ஆம், எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.