வெளிப்படுத்தின விசேஷம் 21

Revelation 21
அத்தியாயம் 21

புதிய எருசலேம்

பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது. ஏசா 65:17-192 பேது 3:13ஏசா 66:22வெளி 21:52 பேது 3:10வெளி 20:11ஏசா 27:1தானி 7:3 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. எபி 11:10வெளி 3:12வெளி 21:10எபி 13:14ஏசா 61:10எபி 12:22வெளி 19:7-8வெளி 22:19 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார். எசேக் 37:272 கொரி 6:16யோவா 14:23லேவி 26:11-12சகரி 8:8எபி 8:10எரே 31:33எரே 32:38 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது. ஏசா 25:8வெளி 7:171 கொரி 15:26ஏசா 35:10ஏசா 60:201 யோவா 2:17ஏசா 51:11ஏசா 65:18-19 சிங்காசனத்தின்மேல் உட்காருந்திருந்தவர்: இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். 2 கொரி 5:17ஏசா 42:9ஏசா 43:19வெளி 19:9வெளி 20:11வெளி 4:2வெளி 22:6வெளி 1:19 அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன். யோவா 7:37-38யோவா 4:10வெளி 7:17யோவா 4:14சங் 36:9ரோம 8:32ஏசா 55:1-3வெளி 1:8 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாக இருப்பேன், அவன் என் குமாரனாக இருப்பான். 2 கொரி 6:18எபி 8:10வெளி 2:11வெளி 21:31 யோவா 3:1-3மத் 25:341 பேது 1:3-4ரோம 8:15-17 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். 1 கொரி 6:9-10வெளி 2:11எபே 5:5-6வெளி 22:15வெளி 20:14-15கலா 5:19-21யோவா 12:42-431 யோவா 3:15 பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணமகளை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, வெளி 19:7வெளி 21:2வெளி 16:1-17வெளி 17:1வெளி 15:1-7 பெரிதும் உயரமுமான ஒரு மலையின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். வெளி 21:2எசேக் 11:242 கொரி 12:2-4அப் 8:39எசேக் 11:1எசேக் 40:1-49எசேக் 8:3வெளி 1:10 அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது. வெளி 22:5வெளி 4:6வெளி 22:1வெளி 21:18-19எசேக் 1:26ஏசா 60:19-20வெளி 4:3எசேக் 28:13-14 அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. எசேக் 48:31-34வெளி 21:17-21வெளி 7:4-8ஏசா 54:12வெளி 21:25சங் 122:7ஏசா 60:18நெகே 12:27 வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் வம்சத்தில் உள்ள பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. எசேக் 48:31-34 நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள் இருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு பெயர்களும் பதிந்திருந்தன. எபி 11:10எபே 2:20ஏசா 54:11மத் 16:18வெளி 21:19-211 கொரி 3:10-11எபே 3:5யூதா 1:17 என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான். வெளி 11:1-2சகரி 2:1எசேக் 41:1-5யாத் 40:3-5 அந்த நகரம் சதுரமாக இருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாக இருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது இரண்டாயிரத்து இருநூறு கிலோமீட்டர் தூர அளவாக இருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாக இருந்தது. எசேக் 48:35எசேக் 48:8-20 அவன் அதின் மதிலை அளந்தபோது, மனித அளவின்படியே அது நூற்றுநாற்பத்துநான்கு முழமாக இருந்தது. உபா 3:11வெளி 13:18வெளி 21:9வெளி 7:4வெளி 14:3 அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாக இருந்தது. வெளி 21:11வெளி 21:21வெளி 21:19 நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவகை இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஏசா 54:11-12யாத் 28:17-21யோபு 28:16-19நீதி 3:15யாத் 29:10-14 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. வெளி 4:3 பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாக இருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாக இருந்தது. வெளி 21:18வெளி 17:4வெளி 22:2மத் 13:45-46வெளி 18:16வெளி 21:11-121 இராஜா 6:20ஏசா 60:17-18 அதிலே தேவாலயத்தை நான் பார்க்கவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். யோவா 4:231 இராஜா 8:272 நாளாக 2:6ஏசா 66:1யோவா 4:212 நாளாக 6:18வெளி 1:8கொலோ 2:9 நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டியதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. ஏசா 60:19-20வெளி 22:5யோவா 1:9வெளி 21:11ஏசா 24:23லூக் 2:32வெளி 18:1ஆப 3:3 இரட்சிக்கப்படுகிற மக்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். வெளி 21:26வெளி 22:2சகரி 8:22-23ஏசா 66:18ரோம 15:10-12சகரி 2:11ஏசா 52:15ஏசா 55:5 அங்கே இரவு இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. ஏசா 60:11வெளி 22:5சகரி 14:7ஏசா 60:20வெளி 21:23 உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். வெளி 21:24 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் செல்வதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மட்டும் அதில் செல்வார்கள். ஏசா 52:1வெளி 22:14-15வெளி 20:15வெளி 3:5ஏசா 35:8மத் 13:41எசேக் 44:9யோவே 3:17