லூக்கா 24

Luke 24
அத்தியாயம் 24

இயேசுவின் உயிர்த்தெழுதல்

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள். யோவா 20:1-2மத் 28:1-8மாற் 16:1-8லூக் 24:10லூக் 23:55-56லூக் 8:2-3மாற் 15:40மத் 27:55-56 கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்த்து, யோவா 20:1-2மத் 27:60-66மத் 28:2மாற் 15:46-47மாற் 16:3-4 உள்ளே நுழைந்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், லூக் 24:23யோவா 20:6-7மத் 16:5 அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள். யோவா 20:11-12மாற் 16:5அப் 1:10மத் 28:2-6ஆதி 18:2 அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? மாற் 16:5-6வெளி 1:18மத் 28:3-5லூக் 1:12-13வெளி 2:8தானி 10:16தானி 10:19அப் 10:3-4 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். மத் 17:22-23லூக் 9:22மாற் 8:31மத் 28:6லூக் 9:44மத் 27:63மாற் 10:33-34மத் 12:40 மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள். மத் 16:21 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி, யோவா 12:16யோவா 14:26யோவா 2:19-22 கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இந்தச் செய்திகளெல்லாவற்றையும் பதினொரு பேருக்கும் மற்றெல்லோருக்கும் தெரிவித்தார்கள். லூக் 24:22-24மத் 28:7-8மாற் 16:7-8மாற் 16:10 இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே. யோவா 20:11-18லூக் 8:2-3மத் 27:56மாற் 15:40-41மாற் 16:9-11மாற் 6:30 இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. யோபு 9:16மாற் 16:11ஆதி 19:14சங் 126:12இராஜா 7:2அப் 12:9லூக் 24:25 பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான். யோவா 20:3-10

எம்மாவூருக்குச் சென்ற இருவர்

அன்றைய தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தொலைவிலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போனார்கள். லூக் 24:18மாற் 16:12-13 போகும்போது இந்தச் சம்பவங்கள் எல்லாவற்றையுங்குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். உபா 6:7லூக் 6:45மல்கி 3:6 இப்படி அவர்கள் பேசி, உரையாடிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே சேர்ந்து அவர்களோடு நடந்துபோனார். மத் 18:20யோவா 14:18-19லூக் 24:36 ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. யோவா 20:14யோவா 21:4லூக் 24:31மாற் 16:122இராஜா 6:18-20 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாக நடந்துகொண்டே, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். யோவா 16:20-22யோவா 16:6எசேக் 9:4-6 அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் மறுமொழியாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராக இருக்கிறீரோ என்றான். யோவா 19:25 அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் மக்களெல்லோருக்கு முன்பாகவும் செயலிலும் சொல்லிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக இருந்தார். மத் 21:11அப் 2:22அப் 7:22யோவா 3:2யோவா 4:19யோவா 6:14லூக் 7:16அப் 10:38 நம்முடைய பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவரை மரணதண்டனைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அப் 13:27-29அப் 3:13-15அப் 4:8-10லூக் 23:13மத் 27:20அப் 4:27-28அப் 5:30-31லூக் 22:66 அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாட்களாகிறது. லூக் 1:68ஏசா 59:201 பேது 1:18-19லூக் 2:38அப் 1:6சங் 130:8வெளி 5:9 ஆனாலும் எங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், மத் 28:7-8மாற் 16:9-10யோவா 20:1-2யோவா 20:18லூக் 24:1-11 அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதர்களைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கச்செய்தார்கள். அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப்போய், பெண்கள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள். லூக் 24:12யோவா 20:1-10 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, மாற் 7:18மாற் 9:19எபி 5:11-12மாற் 16:14மாற் 8:17-18 கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, 1 பேது 1:11அப் 17:3ஏசா 53:1-12சகரி 13:7எபி 12:2எபி 2:8-101 கொரி 15:3-4எபி 9:22-23 மோசே முதல் எல்லாத் தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். ஏசா 7:14உபா 18:15லூக் 24:44ஏசா 53:1-12எரே 33:14-15சகரி 9:9அப் 10:43யோவா 1:45 அந்த சமயத்தில் தாங்கள் போகிற கிராமத்திற்கு அருகில் வந்தார்கள். அப்பொழுது அவர் தொடர்ந்து போகிறவர்போலக் காண்பித்தார். மாற் 6:48ஆதி 19:2ஆதி 32:26ஆதி 42:7 அவர்கள் அவரைப் பார்த்து: நீர் எங்களுடனே தங்கியிரும், மாலைநேரமானது, பொழுதும்போனது, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களோடு தங்கும்படி உள்ளே போனார். 2இராஜா 4:8ஆதி 19:3லூக் 14:23அப் 16:14 அவர்களோடு அவர் உணவருந்தும்போது, அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். மத் 14:19லூக் 24:35லூக் 9:16மத் 15:36அப் 27:35யோவா 6:11லூக் 22:19மாற் 14:22 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். லூக் 24:16யோவா 8:59லூக் 4:30யோவா 20:13-16 அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கிக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, லூக் 24:45எரே 23:29எபி 4:12சங் 39:3எரே 15:16எரே 20:9நீதி 27:17யோவா 6:63 அந்த நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருபேரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு: யோவா 20:19-26மாற் 16:13அப் 1:14 கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குக் காட்சியளித்தார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு, 1 கொரி 15:5மாற் 16:7லூக் 22:54-62 வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கும்போது தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள். மாற் 16:12-13அப் 2:42லூக் 24:30-31

இயேசு சீடர்களுக்கு தரிசனமாகுதல்

இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 2 தெச 3:16ஏசா 57:18யோவா 20:19-23லூக் 10:5மாற் 16:14வெளி 1:41 கொரி 15:5யோவா 14:27 அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். மத் 14:26-271 சாமு 28:13யோபு 4:14-16மாற் 6:49-50அப் 12:15லூக் 16:30 அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? எரே 4:14எபி 4:13தானி 4:19தானி 4:5மத் 16:8 நான்தான் என்று அறியும்படி, என் கரங்களையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, யோவா 20:271 யோவா 1:1பிரச 12:7யோவா 20:201 தெச 5:23எண் 16:22எபி 12:9யோவா 20:25 தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் நம்பாமல் ஆச்சரியப்படும்போது: சாப்பிடுவதற்கு ஏதாவது இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். யோவா 21:5சங் 126:1-2ஆதி 45:26-28யோவா 16:22யோவா 21:10-13யோபு 9:16 அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார், அப் 10:41 அவர்களைப் பார்த்து: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த செய்திகள் இவைகளே என்றார். சகரி 12:10லூக் 24:26-27சகரி 9:9அப் 13:33சங் 110:1-7ஏசா 11:1-10ஏசா 7:14லூக் 9:22 அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களைப் பார்த்து: அப் 16:141 யோவா 5:20சங் 119:182 கொரி 3:14-18அப் 26:182 கொரி 4:4-6யாத் 4:11எபே 5:14 எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; ஏசா 53:2-12ஏசா 50:6லூக் 24:44லூக் 24:26-27லூக் 24:7அப் 17:3சங் 22:1-311 பேது 1:3 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. அப் 5:31ஏசா 49:6அப் 2:38அப் 20:21மத் 28:19அப் 11:18அப் 13:46ஏசா 2:1-3 நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள். அப் 1:8அப் 13:31அப் 2:32அப் 5:32அப் 10:41அப் 1:22அப் 10:39அப் 3:15 என் பிதா வாக்குத்தத்தம் செய்ததை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நிரப்பப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார். அப் 1:8அப் 1:4யோவே 2:28-32யோவா 14:26ஏசா 32:15ஏசா 44:3-4யோவா 14:16-17அப் 2:1-21

இயேசுகிறிஸ்து பரமேறுதல்

பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கரங்களை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார். அப் 1:12ஆதி 49:28மத் 21:17மாற் 11:1எண் 6:23-27ஆதி 14:18-20ஆதி 27:4ஆதி 48:9 அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைவிட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அப் 1:92இராஜா 2:11யோவா 20:17மாற் 16:19எபே 4:8-10எபி 1:3எபி 4:14 அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு எருசலேமுக்குத் திரும்பிவந்து, மத் 28:91 பேது 1:8யோவா 16:22யோவா 20:28சங் 30:11யோவா 14:28மத் 28:17யோவா 16:7 நாள்தோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து ஆராதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென். மாற் 16:20அப் 2:46-47அப் 5:41-42மத் 28:20வெளி 22:21